ரெயில்வே அமைச்சகம்

புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம்

Posted On: 15 DEC 2017 5:02PM by PIB Chennai

மும்பை அகமதாபாத் அதிவிரைவு ரயில் பாதை அமைத்தல் மற்றும் ஜப்பான் அரசிடம் இருந்து தொழில்நுட்ப, நிதி உதவி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசுக்கும், ஜப்பானுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக, 0.1% என்ற மிகவும் குறைவான சலுகை வட்டி வீதத்தில்திட்டச்செலவில் 81 சதவீதத்தை அளிக்க  ஜப்பான் அரசு இசைவு தெரிவித்துள்ளது.

நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு மிகுந்த ஜப்பானின் ஷிங்கான்சென் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்தத்திட்டம், மேக் இன் இந்தியா வாயிலாக தொழில்நுட்ப பரிமாற்ற அனுமதியும் பெற்றுள்ளது.

அதிவிரைவு ரயில் திட்டச் செலவு, செயல்படுத்தப்படும் கால அளவு, பொருளாதார ஏற்ற இறக்கங்களை, நாடுகளுக்கு இடையில் செயல்படுத்தப்படும் இதர ரயில் திட்டங்களுடன் ஒப்பிட முடியாது.

பாதுகாப்பு விஷயத்தில் சிறந்த செயல்பாட்டுக்காகவும், நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியில் காட்டப்படும் சலுகை  ஜப்பானின் ஆதரவு ஆகியன இந்தத்  தொழில்நுட்பத்தை தேர்வு செய்ய காரணங்களாகும்.

ரயில்வே இணையமைச்சர் திரு.ராஜன் கோகைன் 15.12. 2017  அன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறிய தகவலின் அடிப்படையில், செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 



(Release ID: 1520632) Visitor Counter : 82


Read this release in: English