ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் திறன் வளர்த்தல் மற்றும் தகுதியான சொத்துக்கள் அதிக பரப்பளவில் உருவாக்கும் திட்டம்.

Posted On: 25 JAN 2018 11:55AM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் முக்கியமான நோக்கம், கிராமப்புற வாழ்வாதார வளத்தை வலுப்படுத்துவதும், பயனுள்ள நிலைத்த வளர்ச்சி கொடுக்கக்கூடிய தகுதியான சொத்துக்கள் உருவாக்குதல் ஆகும். இதனை சாதிப்பதற்கு சரியான நேரத்தில் பணி முடித்தல் மற்றும் பணியின் தரம் உயர்த்துதல் கண்காணிப்பு கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அலுவலர்கள் மற்றும் சமூக அமைப்பு உறுப்பினர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டத்தின் தரத்தை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், முடிக்கப்படாத வேலைகளை முடிவுக்கு கொண்டுவருவது அரசுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட 4.54 கோடி பணிக்ளில், முடிக்கப்படாத 61.39 லட்சம் பணிகளை முடிப்பதில் இப்போது அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. மாநிலங்களுடன் இணைந்து அமைச்சகம் மேற்கொள்ளும் நெருங்கிய கண்காணிப்பு காரணமாக கடந்த நிதியாண்டு 2016-17 மற்றும் இந்த நிதியாண்டில் 1.02 கோடி பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பான கண்காணிப்பு மூலம் பணி நிறைவை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

பணியின் இயற்கை தன்மை மற்றும் வேலை அளவைப் பொறுத்து, பணியாளர்களுக்கு, தேவைக்கேற்ற சிறப்பு பயிற்சி கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட அமைப்பின் முழு உதவியுடன் மேம்பாடு அடைய முடியும். இந்தப் பயிற்சியானது சாக்ஸாம் (SAKSHAM) எனப்படும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மதிப்பிற்குரிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கடந்த ஜூன் 19, 2017ல் தொடங்கிவைத்தார். மார்ச் 15,2018-ல் முடிவடைந்த இந்தப் பயிற்சி திட்டத்தில் 65,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த 57,000 தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம்,  மாநிலங்கள் (521), மாவட்டங்கள் (6669) மற்றும் பிளாக் அளவுகளில் (48,934) திறன் மேம்பாட்டு, தொலைநிலை சென்சார் பயன்படுத்துதல், புவியியல் தகவல் அமைப்பு கருவி மூலம் திட்டங்கள் வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு, நீர்நிலைக் கூறுகள், நிலத்தடி நீர், நிலம் மற்றும் நீரியல், தோட்டக்கலை மற்றும் ஒருங்கிணைந்த இயற்கை வள மேலாண்மை போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.  

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது முக்கியத் தேவையாக கருதப்படுகிறது. 6367 சாதாரண தொழிலாளிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதன் மூலம், தரம் உயர்ந்து, திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் சொத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. சரியான தருணத்தில் கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் முடிவதால், கிராமப் பஞ்சாயத்து அளவுக்கு தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்த முடிகிறது. இவர்களைப் போன்று உள்ளூர் இளைஞர்கள் (10-ம் வகுப்பு தகுதி) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் / துணை / மேற்பார்வையாளர் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு 90 நாட்கள் தங்கி பயிலும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஒருவருக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.62,040/- ஆக இருக்கிறது, இதில் தினமும் வழங்கப்படும் ரூ.150/- உதவித்தொகையும் அடங்கும்.

வேலைக்கான திட்ட மதிப்பீட்டுச் செலவு ஒரே அளவில் இருக்கும்படி நிர்ணயம் செய்வது, விரயத்தைக் குறைப்பது மற்றும் தரம் உயர்த்துவது போன்றவற்றை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை அமைச்சகம் எடுத்துள்ளது. அதன்படி பணியின் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் பணியின் செயல் நடைமுறை போன்றவற்றைக் கண்காணிக்க, செக்யூர் எனப்படும் வேலைவாய்ப்புக்கான கிராமப்புற விகிதங்களைப் பயன்படுத்தி கணக்கிடும் மதிப்பீடு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறதுஇந்த செக்யூர் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்கு மாநிலம், மாவட்டம் மற்றும் பிளாக் அளவில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்ட மதிப்பீடுகளும் செக்யூர் மென்பொருள் கொண்டு மேலாண்மை செய்யப்படுவது ஏப்ரல் 1, 2018 முதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்களின் சமூக தணிக்கையை வலியுறுத்துவதன் மூலம், குறிப்பிட்ட தணிக்கைத் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நிர்வாக ரீதியாகவும், சுயமாகவும் தணிக்கை செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகையில் 3760 சமூகப் பணியாளர்கள் சுதந்திரமான சமூக தணிக்கைக்கான பயிற்சி மாநிலம், மாவட்டம் மற்றும் பிளாக் அளவில் மேற்கொண்டனர். இவர்களுக்கு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனம் மூலம் 30 நாட்கள் சமூகத் தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்களுக்கு சமூக தணிக்கை மேற்கொண்டு, கிராம வள நபராக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த வகையில் 47,000 சுய உதவிக் குழுப் பெண்களுக்கு 4 நாட்கள் பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு, கிராம பஞ்சாயத்து அளவில் சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும் என்பதற்காக அமைச்சகம், புவித் தகவல் மையம் மூலமாக பார்வையிட்டு, ஆய்வு செய்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சொத்துக்கள் மற்றும் அதுகுறித்த தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய நாள் வரை 2.34 கோடிக்கும் மேலான சொத்துக்கள் நாடு முழுவதும் புவித் தகவல் மையம் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு சாதனையை 2.6 லட்சம் பணியாளர்கள் கவனமுடன் உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது அமைச்சகம், புவியியல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்த்தின் இரண்டாம் கட்டத்ததை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 1, 2017 முதல் தொடங்கியுள்ளது. இந்த புவியியல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மூன்று நிலைகளாக மேற்கொள்ளப்படுகிறதுஅவை 1) வேலை தொடங்குவதற்கு முன் 2) வேலை நடைபெறும் தருணம் 3) வேலை முடிவடையும் தருணம். தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு வகுப்பு மற்றும் பயிற்சி மையம், 2017 ஆகஸ்ட் 22 - 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றதில், மாநில வள நபர்கள் மற்றும் 2,69,075 அதிகாரிகள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிளாக் அளவில் கிராம பஞ்சாயத்து அளவில் 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பகுதிகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தேசிய வள மேலாண்மைப் பணி குறித்து இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் குரோத் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவின்படி, கவனிக்கத்தக்க மாறுதல் நிகழ்ந்துள்ளது. 21 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்து கிடைத்த முதல் மற்றும் இரண்டாவது தகவல் படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பயிர் வளர்ச்சி பெருக்கம் மற்றும் கிராமப்புற குடும்ப வருமானம் அதிகரித்ததும் உறுதியாகியுள்ளதுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் தரம் மிகவும் சிறப்பாக / சிறப்பாக இருப்பதாக 76% குடும்பங்கள்  தெரிவித்துள்ளன. 0.5% பயனாளிகள் மட்டுமே சொத்துக்களின் தரம் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், உற்பத்தி வளர்ச்சி 11% முதல் 25% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக எண்ணெய் வித்துக்கள் வளர்ப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு 28% குடும்பங்கள் தோட்டக்கலையாக இதனை மேற்கொண்டு கூடுதல் வருமானம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த ஆய்வு முடிவின் படி, கடந்த  2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு நிதியாண்டில், ஒவ்வொரு குடும்பமும் 11% மொத்த ஆண்டு வருமான வளர்ச்சி அடைந்துள்ளதாக 30 மாவட்டங்களில் தெரியவந்துள்ளது


(Release ID: 1520565)
Read this release in: English , Hindi