நிதி அமைச்சகம்

சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் (கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்கும் அதிகாரம் இல்லாதவை) ஆகியவை அடல் பென்சன் யோஜ்னா (ஏபிஒய்) திட்டத்தை வழங்க முன்வந்துள்ளன. ஏபிஒய் திட்டத்தின் கீழான சந்தாதாரர்களை உயர்த்த இது வழிவகுக்கும்

Posted On: 26 JAN 2018 1:12PM by PIB Chennai

அடல் பென்சன் யோஜ்னா (ஏபிஒய்), மத்திய அரசின் முதியோர்களுக்கான பென்சன் திட்டமாகும். மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவின் கீழ், இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தினால் இத்திட்டம் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை, 2015 மே 9ம் தேதி தொடங்கி வைத்தார். இது நாட்டு மக்களுக்கான உறுதியளிக்கப்பட்ட முதல் பிரத்யேக ஓய்வூதிய திட்டமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ), புது மாதிரியான வங்கிகள், பேமென்ட் வங்கிகள் மற்றும் சிறிய நிதி வங்கிகள். இந்தியாவில் தற்போது இதுபோன்ற வங்கிகளை தொடங்க, 11 பேமென்ட் வங்கிகள் மற்றும் 10 சிறிய நிதி வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து லைசென்ஸ் பெற்றுள்ளன. சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள், நவீனகால வங்கிகள், இவை வங்கிகள், நிபுணத்துவம், பயனாளிகளை சென்று சேருதல் ஆகியவற்றில் வலுவூட்டுவதாக அமையும். சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள், ஏபிஒய் திட்டத்தின் கீழான சந்தாதாரர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஏபிஒய் விநியோகத்தில் தற்போதுள்ள வழிகளை வலுப்படுத்துவதில், புதிய பேமென்ட் வங்கிகள் மற்றும் சிறிய நிதி வங்கிகள் ஆகியவை ஏபிஒய் திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதிய உத்வேகத்தை அளிக்கும். ஏபிஒய் திட்டத்தில் பங்குபெறுவது, ஓய்வூதிய சமூகத்தை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, ஒவ்வொரு கணக்கிலும் ரூ.120 முதல் ரூ.150 வரையிலான ஊக்கத் தொகைகளை கொண்டு வருவதன் மூலம் வங்கிகளுக்கு நீடித்த வருவாயை அளிப்பதாகவும் உள்ளது.

அடல் பிகாரி பென்ஷன் யோஜ்னா (ஏபிஒய்திட்டத்தில் சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகளை பிரபலப்படுத்துவதற்காக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ), புதுடெல்லியில் 2018 ஜனவரி 15ல் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் அனைத்து சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகளில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், பிஎப்ஆர்டிஏ.வின் நடவடிக்கைகளுக்கு இந்த வங்கிகள் நேர்மறையான ஆதரவை அளித்தன. மேலும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்கீழ் ஓய்வூதிய சமூகத்தை கட்டுவிக்கும் சிறப்பான நடவடிக்கையை நோக்கி தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆதரவு அளித்தன.

தற்போது கீழ்கண்ட சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள், வங்கி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன:

சிறிய நிதி வங்கிகள்:

  • உஜ்ஜிவான் சிறிய நிதி வங்கி
  • ஜனலட்சுமி சிறிய நிதி வங்கி
  • ஈகியூடாஸ் சிறிய நிதி வங்கி
  • .யூ. சிறிய நிதி வங்கி
  • கேபிடல் சிறிய நிதி வங்கி
  • இஎஸ்ஏஎப் சிறிய நிதி வங்கி
  • உட்கார்ஸ் சிறிய நிதி வங்கி
  • சூரியோதய்  சிறிய நிதி வங்கி
  • பின்கேர் சிறிய நிதி வங்கி

பேமென்ட் வங்கிகள்

  • பேடிஎம் பேமென்ட் வங்கி
  • ஏர்டெல் பேமென்ட் வங்கி
  • இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி
  • பைனோ பேமென்ட் வங்கி

2018 ஜனவரி 23ம் தேதி வரையில், ஏபிஒய் திட்டத்தின் கீழ் 84 லட்சம் சந்தாதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.3,194 கோடி உள்ளது.


(Release ID: 1520560) Visitor Counter : 168


Read this release in: English