நித்தி ஆயோக்

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பாலுக்கு சர்வதேச அங்கீகாரம்

பெருமைமிகு இஹ்சான்டோக்ரமாக்1 குடும்ப சுகாதார அறக்கட்டளை விருதை வழங்கியது உலக சுகாதார அமைப்பு

Posted On: 30 JAN 2018 2:17PM by PIB Chennai

                                                                                                                                                                                               

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பாலுக்கு ,பெருமைமிகு இஹ்சான்டோக்ரமாக்1 குடும்ப சுகாதார அறக்கட்டளை விருது வழங்கி உலக சுகாதார அமைப்பு பெருமைப்படுத்தியுள்ளது. இந்த உலகப் பெருமையைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். குடும்ப நலவாழ்வுத் துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27-ம் தேதி நடந்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில்டாக்டர் பாலுடன் , அல்ஜீரியா, சீனா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்ய கூட்டமைப்பு ,உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் அலசி ஆராய்ந்து தெரிவு செய்யப்பட்டனர். இதில், டாக்டர் பால், ஒருமனதாக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2018 மே மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறவுள்ள உலக சுகாதார பேரவையில் டாக்டர் பாலுக்கு முறைப்படி இந்த விருது வழங்கப்படும்.

அனைத்துலகளவில் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர், மருத்துவ சேவை, குடும்ப நலவாழ்வைப் பேணவேண்டும் என்று குரல் எழுப்பிய பொது சுகாதார நிபுணர், பிறந்த குழந்தைகளின் நலத்தின் கவனம் செலுத்தியவர் என்ற பெரும் தகுதிகள் கொண்ட டாக்டர் பாலின் தொண்டுகளை  உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் ,குடும்ப நலவாழ்வை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் செய்துள்ளார்.

ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த பிறந்த சிசுவின் சுகாதாரப் பிரச்சினையை மில்லெனியம் மேம்பாட்டு இலக்குகள் மற்றும் நிலைத்த மேம்பாட்டு இலக்குளுக்கான உத்திகளின்  மையக் கருத்தாக கொண்டுவர பெரும் முயற்சியை டாக்டர் பால் மேற்கொண்டு வந்தார். இந்த துறையில் இவரது முக்கிய பங்களிப்பு உலக அளவில் குடும்ப சுகாதாரத்தின் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

தாய், சேய் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் 2005-06 கூட்டு முயற்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக திகழ்ந்த டாக்டர் பால், அனைத்து சுகாதார சேவைகள்சுகாதாரத்துக்கான மனித ஆற்றல் பயன்பாடு ஆகியவற்றில் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார். மகளிர், குழந்தைகள், விடலைப் பருவத்தினரின் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளிலும் , புத்தக வடிவிலும் அவை வெளியாகி இருக்கின்றன. குழந்தைகள் மருத்துவம் தொடர்பான அவரது நூல் ,இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் மருத்துவ மாணவர்களுக்கு தரமான பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் பொது சுகாதார பிரிவில் பேரும் ,புகழும் பெற்ற டாக்டர் பால், தேசிய குழந்தைகள் சாகாதார விதிமுறைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளார். நிதி ஆயோக்கில் உறுப்பினராக சேருவதற்கு முன்பு ,புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறையின் தலைவராக பணியாற்றினார்.

 



(Release ID: 1520552) Visitor Counter : 124


Read this release in: English