ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயில் நீண்ட காலம் பணிக்கு வராத பணியாளர்கள் மீது நடவடிக்கை

நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதும் நேர்மையான மற்றும் ஊக்கம் கொண்ட பணியாளர்களின் மதிப்பை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம்

Posted On: 09 FEB 2018 7:25PM by PIB Chennai

மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், நேர்மையான மற்றும் ஊக்கம் நிறைந்த பணியாளர்களின் மதிப்பை உயர்த்தவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை ஒன்றை தொடங்கியுள்ளது.

ரயில்வே துறையின் பல்வேறு அமைப்புகளில் உள்ள நீண்ட காலம் பணிக்கு வராதவர்களை அடையாளம் காணும் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக மொத்தமுள்ள 13 லட்சம் பணியாளர்களில் 13 ஆயிரம் பணியாளர்கள் நீண்ட காலம் பணிக்கு வராமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு பணிக்கு வராமல் இருப்பவர்களை விதிகளின்படி பணிநீக்கம் செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இத்தகையோரை பணியாளர் பட்டியலில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை ரயில்வே நிர்வாகம் அறீவியுறுத்தி உள்ளது.



(Release ID: 1520531) Visitor Counter : 96


Read this release in: English , Hindi