பாதுகாப்பு அமைச்சகம்

ரூ.15,935 கோடி பெறுமான திட்டத்துக்கு பாதுகாப்புக் கொள்முதல் சபை ஒப்புதல்

Posted On: 13 FEB 2018 5:45PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடிய பாதுகாப்புக் கொள்முதல் சபை ரூ.15,935 கோடி பெறுமான மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

முப்படைகளுக்கான   இலகு ரக எந்திரத் துப்பாக்கிகள்,  விரைவு வழி நடைமுறையின் கீழ் ரூ.1819 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வது இதில் அடங்கும். இதனால் எல்லைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வீரர்களின் செயல்பாட்டுத் தேவைகள் நிறைவு பெறும். எஞ்சியுள்ள துப்பாக்கிகள் வாங்குவதற்கான வாங்கிச் செய்தல் வகையின் கீழ் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

   முப்படைகளுக்கான 7.4 லட்சம் தாக்குதல் துப்பாக்கிகள் கொள்முதலுக்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  வாங்கித் தயாரித்தல் வகையின் கீழ் இந்தியாவில் செய்யப்பட்டவையாக இந்த்த் துப்பாக்கிகள் இருக்கும். ரூ.12,280 கோடி மதிப்பீட்டில் தளவாடத் தொழிற்சாலை வாரியம் மற்றும் தனியார் துறையிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும்.

   எல்லைப்பகுதியில் வீர்ர்களுக்கு நவீன மேலும் திறம்பட்ட கருவிகளை வழங்குவதற்கு கடந்த ஒரு மாதத்தில் துப்பாக்கிகள், கார்பைன்கள், இலகுரக எந்திரத் துப்பாக்கிகள் ஆகிய 3 முக்கியத் தனிநபர் கருவிகள் கொள்முதல் செய்வதை பாதுகாப்பு கொள்முதல் குழு விரைவுப்படுத்தியுள்ளது.

    இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு ரூ.982 கோடிமதிப்பீட்டில் 5,719 ஸ்னைப்பர் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மிகத்துல்லியமான ஆயுதங்கள் உலக அளவில் வாங்குதல் ரகத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும். இவற்றுக்கான குண்டுகள் தொடக்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

    இந்திய கடற்படை கப்பல்களின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்திறனை மேம்படுத்த இந்திய கப்பல்படைக்கு நவீன டார்ப்பிடோ ஏமாற்று அமைப்புகள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. “மாரீச்” எனப்படும் இந்த அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு,  விரிவான சோதனை மதிப்பீடுகளை  வெற்றிகரமாக  நிறைவு செய்துள்ளது. “மாரீச்“ அமைப்புகளை பெங்களுரு  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.850 கோடி செலவில் உற்பத்தி செய்யும்.



(Release ID: 1520501) Visitor Counter : 121


Read this release in: English