கலாசாரத்துறை அமைச்சகம்

100 ஆதார்ஷ் ஸ்மாரக்குகளில் உலகத்தர வசதிகள் ஏற்படுத்தப்படும்: பண்பாட்டு அமைச்சர்

இந்தியப் பண்பாட்டு வரைப்பட தேசியஇயக்கத்தின் கீழ் உள்ள மத்திய வலைத்தளத்தில் சுமார் ஒரு கோடி கலைஞர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்

Posted On: 13 FEB 2018 3:43PM by PIB Chennai

இந்தியாவின் பிரசித்திபெற்ற பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதைத் தொடரும் நடவடிக்கையாக மத்தியப் பண்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் துடிப்புள்ள பண்பாட்டை அகில உலகத்திற்கும் காட்சிப்படுத்துவதில் உறுதியுடன் உள்ளது. 2018 பட்ஜெட் மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள் குறித்து புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பண்பாட்டுத்துறை இணை அமைச்சரும், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை இணையமைச்சருமான டாக்டர் மகேஷ் சர்மா, மக்களை,? குறிப்பாக இளைஞர்களை, பன்முகத்தன்மை, பெருமை, வளமை, பாரம்பரிய முக்கியத்துவம் கொண்ட உள்நாட்டு பண்பாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டியது அவசரமும், அவசியமும், ஆன செயல் என்று கூறினார்.

     பண்பாட்டு அமைச்சகத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு 2018-19-ல் 4% அதிகரித்திருப்பதாக டாக்டர் மகேஷ் சர்மா கூறினார்.   2018-19 ஆண்டுக்கான பண்பாட்டு அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.104 கோடி உயர்ந்துள்ளது என்று கூறினார். அதாவது ரூ.2738.47 கோடியிலிருந்து ரூ.2843கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் இந்திய  தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திற்கு ரூ.974.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது 2017-18 ஒதுக்கீட்டைவிட 5.42%  அதிகம் என்றும் கூறினார்.

     100 ஆதார்ஷ் புராதனச் சின்னங்கள், மின்னணு டிக்கெட் வசதி, இந்திய பண்பாட்டு வரைபடம் தயாரித்தல் ,தேசிய சன்ஸ்கிருதித் திருவிழாக்கள், கங்கைத் திருவிழா, 8-வது நாடக ஒலிம்பியாட், வெளிநாடுகளில் இந்திய திருவிழா, டிஜிட்டல்மயம் போன்ற பல பெரிய நடவடிக்கைகளை பண்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதனால் இளைஞர்களிடையே இந்திய பண்பாடு பிரபலமடையும்.

இந்த 100 ஆதாரஷ் ஸ்மாரக்குகளில்,  உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக  செய்தியாளர்களிடம் திரு மகேஷ் சர்மா தெரிவித்தார்.  கழிவறை வசதிகள், அறிவிப்புப் பலகைகள், குடிநீர் வசதி, வழிப்பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளப்பாதை, உட்கார பெஞ்சுகள், குப்பைக் கூடைகள், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள், டிக்கெட் வழங்குமிடங்கள், வரிசைகளுக்கான சிறப்பு வசதி, புல்வெளி உள்ளிட்ட இயற்கை அமைப்பு போன்ற வசதிகள் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டத்தில் 27 ஆதார்ஷ் புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் இந்த வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்றார்.

622 மாவட்டங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.490 கோடி.செலவில் நடைபெற்று வரும் பண்பாட்டு வரைப்படத் தயாரிப்பு திட்டம் குறித்த விவரங்களை அமைச்சர் தெரிவித்தார், இந்தத் திட்டத்தின்படி நாட்டின் மூலை முடுக்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களைச் சேர்ந்த கலைஞர்களும் மத்திய வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுவார்கள். போட்டி நடைமுறை ஒன்றின் மூலம் இவர்கள் பல்வேறு ரகப் பிரிவினர்களாகப் பிரிக்கப்படுவார்கள்.  இதனையடுத்து இநத கலைஞர்களுக்கு உதவி வழங்குதல் எளிதாகும். மேலும் மறையும் நிலையில் உள்ள கலை, கைவினைகளைப் பாதுகாக்கவும் உதவும். ஏறக்குறைய ஒரு கோடி கலைஞர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பண்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கினார்.

புதிய அருங்காட்சியகங்கள் 3 திறக்கப்படும் என்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார். அலகாபாதில் கும்பமேளாவை மையக்கருத்தாக்க கொண்டு ஒன்றும், அயோத்தியில் ராமபிரான் குறித்த நிகர்நிலை அருங்காட்சியகமும், கோரக்பூரில் உள்ளூர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் அருங்காட்சியமும் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1520483) Visitor Counter : 188


Read this release in: English