குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் சமையல் எரிவாயு பஞ்சாயத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தினார்.

Posted On: 13 FEB 2018 1:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (2018 பிப்.13) சமையல் எரிவாயு பஞ்சாயத்தைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தினார்.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சமையல் எரிவாயு பஞ்சாயத்து, சமையல் எரிவாயு நுகர்வோர் இடையே கலந்துரையாடல், பரஸ்பரம் கற்றுக்கொண்டு அனுபவங்களை பகிர்ந்து  கொள்ளுதல் ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.  ஒவ்வொரு சமையல் எரிவாயு பஞ்சாயத்திலும்  சுமார் 100 நுகர்வோர் பங்கேற்று பாதுகாப்பான, நிலையான, சமையல் எரிவாயு பயன்பாடு குறித்தும்,
எரிவாயுவின் பயன்கள், தூய்மையான சமையல் எரிவாயுவினால் மகளிருக்கு ஏற்படும் அதிகாரமளித்தல், ஆகியவை குறித்தும் விவாதிப்பார்கள். 2019 மார்ச் 31ம்  தேதிக்கு முன்னதாக இதுபோல நாடெங்கும் ஒரு லட்சம் பஞ்சாயத்துக்களை நடத்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

   நிகழ்ச்சியில்  பேசிய குடியரசுத் தலைவர், உஜ்வாலா திட்டம், மகளிர்க்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்துகிறது என்று கூறினார்.  மகளிருக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றின் மூலம் சமூக நீதியை முன்னெடுத்துச்  செல்லும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டுத்  தெரிவித்தார்.   உஜ்வாலா திட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு பஞ்சாயத்துக்கள் நடைபெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.



(Release ID: 1520455) Visitor Counter : 121


Read this release in: English , Hindi