பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 4வது கூட்டம்

Posted On: 12 FEB 2018 3:56PM by PIB Chennai

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 4வது கூட்டம் தில்லியில் இன்று (பிப்ரவரி 12, 2018) இந்த ஆலோசனைக்குழுவின் தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் விவேக் டெப்ராய் தலைமையில் நடைபெற்றது.

2018 பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19-க்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினரான டாக்டர் ஷமிகா ரவி ‘சுகாதார சீர்திருத்தங்கள்’ குறித்து விளக்க உரையாற்றினார். மற்றொரு பகுதி நேர உறுப்பினரான டாக்டர் அசிமா கோயல், ‘இந்திய நிதி – நிதிக் கட்டமைப்பு: ஆதிக்கம் அல்லது ஒருங்கிணைப்பு’  என்ற தலைப்பில் உரையாற்றினார். உலக வங்கியின் இந்தியாவுக்கான பொருளாதார தலைவர் செல்வி. பூனம் குப்தா, இந்தியப் பொருளாதாரம் குறித்த உலக வங்கியின் அறிக்கை குறித்து உரையாற்றினார்.



(Release ID: 1520416) Visitor Counter : 92


Read this release in: English , Hindi