சுரங்கங்கள் அமைச்சகம்

நால்கோ நிறுவனத்தில் தீவிர வளர்ச்சி, 3வது காலாண்டு வரையிலான நிகர லாபம் 171% வளர்ச்சி கடந்த ஆண்டு இருந்த ரூ. 400 கோடியில் இருந்து ரூ. 1085 கோடியாக அதிகரிப்பு

Posted On: 10 FEB 2018 12:16PM by PIB Chennai

இந்திய அரசின் சுரங்கத்துறை கீழ் செயல்படும் நவரத்தின பொதுத் துறை நிறுவனமும் அலுமினா மற்றும் அலுமினிய முன்னணித் தயாரிப்பு நிறுவனமுமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) 2017 டிசம்பர் முடிந்த மூன்றாவது காலாண்டு வரையிலான நிதி நிலை முடிவுகளை இன்று வெளியிட்டது.

2017-18க்கான 3வது காலாண்டின் ஆய்வு செய்யப்பட்ட நிதி நிலை முடிவுகள் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில்  ரூ. 144 கோடி லாபம் ஈட்டிய நால்கோ, முந்தைய காலாண்டில் பெற்ற ரூ. 235 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இந்தக் காலாண்டில் ரூ. 722 கோடி லாபம் (207% வளர்ச்சி) பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 3வது காலாண்டில் நிகர விற்பனை ரூ. 2360 கோடியாகும். இதனால் இந்த நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு காலாண்டில் அதிகபட்சமான லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: http://www.pib.nic.in/



(Release ID: 1520407) Visitor Counter : 111


Read this release in: English