வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய உற்பத்தி கவுன்சில்

இடுகை இடப்பட்ட நாள்: 12 FEB 2018 11:44AM by PIB Chennai

தேசிய உற்பத்திக் கவுன்சில் சார்பில், தேசிய உற்பத்தி தினமும், பிப்ரவரி 18ஆம்  தேதிவரை தேசிய உற்பத்தி வாரமும் கடைபிடிக்கப்படுகிறது. இன்று தேசிய உற்பத்தி கவுன்சிலின் 60ஆவது ஆண்டு நிறைவு என்பதால், வைரவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. “இந்திய தொழில்துறையில் 4.0 லீப்ஃப்ராக் வாய்ப்பு” என்பது 2018 தேசிய உற்பத்தி வாரத்தின் மையக்கருத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறை 4.0 அல்லது நான்காவது தொழிற்புரட்சி என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு சர்வதேச அளவில் ஒரு சக்தி வாய்ந்த வலிமையான அடுத்த தொழிற்புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தொழிற்புரட்சி அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உற்பத்தி பொருட்கள், வர்த்தகம் மாதிரி மற்றும் மதிப்புச் சங்கிலி  அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. யதார்த்த மற்றும் இணைய உலகின் சங்கமமாக கருதப்படும் நான்காம் தொழிற்புரட்சி, உற்பத்தி துறையில் வழக்கமான தொழில்நுட்பத்தையும் நவீன தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைப்பதாக உள்ளது. இது நவீன தொழிற்சாலைகளுக்கு வழி வகுப்பதுடன், வர்த்தக கூட்டாளிகளை நேரடியாக இணைக்கவும், அவர்களது செயலாக்கம், திறன்வளம், பணிச்சூழலியல் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தவும் உதவும்.

முதலாவது தொழிற்புரட்சியானது, தண்ணீர் மற்றும் நீராவி எரிசக்தி முறையிலிருந்து மனித தொழிலாளர்களை இயந்திரவியல் உற்பத்தி முறைக்கு மாற்றுவதற்கு வழிவகை செய்தது. மின்சக்தி அடிப்படையிலான இரண்டாவது தொழிற்புரட்சி, ஒட்டு மொத்த உற்பத்திக்கு வித்திட்டது. மூன்றாம் தொழிற்புரட்சி மின்னணுவியில் மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானியங்கி உற்பத்தி முறைக்கு வகை செய்தது. தற்போதைய நான்காம் தொழிற்புரட்சி, எந்திரமயமாக்கல் மற்றும் புள்ளி விவர பகிர்வு சார்ந்த உற்பத்தி தொழில்நுட்பத்திற்கு வகை செய்வதாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் உற்பத்தித் துறையில், கூர்மையான அதிக திறன் தேவைப்படுவதாகவும் உள்ளது. தற்போது உலகளாவிய உற்பத்தி துறையானது கட்டமைப்பு மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி, சேவை துறையை பெருமளவுக்கு சார்ந்துள்ளதால், இந்தியாவில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்த உற்பத்தி துறைக்கு ஊக்கமளிப்பது அவசியமாகிறது. உலக வரைபடத்தில் இந்தியாவை ஒரு உற்பத்தி கேந்திரமாக நிலைநாட்டும் வகையில், பிரதமர் திரு நரேந்திரமோடி, ”இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தை தொடங்கியுள்ளார். உற்பத்தி துறை, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதுடன், வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது. உற்பத்தி துறையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தை 2022ஆம் ஆண்டு வாக்கில் 16 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கவும், 2022க்குள் கூடுதலாக பத்து கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் வேலைவாய்ப்புடன் வளர்ச்சிக்கான நோக்கங்களை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது.

கடந்த 59 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தேசிய உற்பத்தி கவுன்சில், கடைகள் மட்டத்திலான சிக்கல்கள் முதல் நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காணும் வலுவான அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த அமைப்பு என்பதுடன், பெரிய அளவிலான கொள்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாகவும் திகழ்கிறது. இந்த அமைப்பில் பணியாற்றும் ஏறக்குறைய 140 முழு நேர ஆலோசகர்கள், நீண்டகால திறமை மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதுடன், பெரிய மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்களில் 13 மண்டல அலுவலகங்களுடன் தேவையான பணியாளர்கள் மற்றும் நாடு தழுவிய அமைப்பாகவும் தேசிய உற்பத்தி கவுன்சில் திகழுகிறது.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1520326) வருகையாளர் எண்ணிக்கை : 467
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी