சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் 46 நெடுஞ்சாலை ஓய்விடங்கள் (சிறியது) செயல்பாட்டுக்கு வந்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2018 6:20PM by PIB Chennai

நெடுஞ்சாலைப் பயணர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நெடுஞ்சாலை ஓய்விடங்கள் (சிறியது) திட்டம் தொடங்கப்பட்ட்து. 372 சுங்க வரி வசூல் மையங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் மேற்புறம் மற்றும் அடிப்பகுதியில் சுங்கச்சாவடியில் இருந்து 200-250 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை ஓய்விடம் (சிறியது) குடிநீர், தேனீர்/காபி, அடைக்கப்பட்ட உணவு/தின்பண்டங்கள் ம்ற்றும் கழிவறை வசதிகளை ஆண்கள்/ பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் எல். மாண்டவ்யா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு www.nic.in

****


(வெளியீட்டு அடையாள எண்: 1520032) வருகையாளர் எண்ணிக்கை : 134
இந்த வெளியீட்டை படிக்க: English