கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

நாட்டில் சொகுசு கப்பல் போக்குவரத்து சுற்றுலா மேம்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2018 5:06PM by PIB Chennai

நாட்டில் சொகுசுக் கப்பல் போக்குவரத்து  சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இ-விசாவுடன் பெரும் துறைமுகங்களான மும்பை, கொச்சின், சென்னை, மோர்முகா மற்றும் புதிய மங்களூர் ஆகியவற்றில் பயோமெட்ரிக் சேர்க்கைக்கு 2020 டிசம்பர் 31 வரை மூன்றாண்டுகளுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.

இ-விசா மற்றும் இ-லேண்டிங் அட்டை போன்ற வாடிக்கையாளருக்கு நட்பான மற்றும் சிக்கலற்ற குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகள் இந்த 5 துறைமுகங்களிலும் அரசு மேற்கொண்டுள்ளது.

மும்பை துறைமுகத்தில் கப்பல் முனைய தரம் உயர்த்தல் மற்றும் கொச்சின் துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்தல் ஆகிய பணிகளை முறையே ரூ. 197 கோடி மற்றும் 25.72 கோடி செலவில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் முறையே ஆகஸ்ட் 2019 மற்றும் பிப்ரவரி 2020ல் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கப்பல் மற்றும் நிதித் துறை இணையமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

****

 

 


 


(வெளியீட்டு அடையாள எண்: 1520024) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English