கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சாகர்மாலா திட்டத்தின் கீழ் 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன

Posted On: 08 FEB 2018 5:04PM by PIB Chennai

சாகர்மாலா திட்டத்தின் கீழ் தேசிய முன்னோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கடல்சார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துறைமுகம் சார்ந்த தொழில்மயத்தை மேம்படுத்தும் வகையில் 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து 14 கடலோர பொருளாதார மண்டலங்களுக்கான முன்னோக்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாகர்மாலாவுக்கான தேசிய முன்னோக்கு திட்டத்தில் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கடலோர பொருளாதார மண்டலங்களின் பட்டியல் வருமாறு:-

எண்.

கடலோரபொருளாதாரமண்டலத்திற்காகதிட்டமிடப்பட்டஇடம்

மாநிலம்

உள்ளடங்கியமாவட்டங்கள்

வாய்ப்புள்ளதொழில்கள்

 

மன்னார்

தமிழ்நாடு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி

ஆயத்த ஆடை, சுத்திகரிப்பு

 

பூம்புகார்

தமிழ்நாடு

கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்

தோல் பதனிடுதல், மின்சாரம்

 

வி.சி.டி.சி. தெற்கு

தமிழ்நாடு

திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம்

எஃகு, பெட்ரோ கெமிக்கல், மின்னணு,கப்பல் கட்டுமானம்

 

சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் இந்த்த் திட்டத்தின் மூலம் துறைமுகம் சார்ந்த தொழில்மயம் இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதுடன் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவி அளிக்கும். அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் ஆலோசனைகள் அடிப்படையில் கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான நிறுவன கட்டமைப்பு இறுதி செய்தல் மற்றும் அதற்கான செயல் திட்டம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன்  எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

****

 


(Release ID: 1519984) Visitor Counter : 147
Read this release in: English