அணுசக்தி அமைச்சகம்
கனடா நாட்டுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
08 FEB 2018 4:23PM by PIB Chennai
இந்தியா மற்றும் கனடா நாட்டு அரசுகளுக்கு இடையே அமைதியான முறையில் அணுசக்தியை பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் 27.06.2010 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்திய பிரதமர் 15.04.2015 அன்று கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட போது கனடா நாட்டில் உள்ள M/s காமிகோ நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 2015-2020 கால கட்டத்திற்கு இந்த நிறுவனம் இந்தியாவிற்கு செறிவுமிக்க யுரேனியதாது பொருளை இந்தியாவிற்கு வழங்கும்.
மின்சக்தி உற்பத்தி தவிர சுகாதாரம், புற்றுநோய் சிகிச்சை, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அணுசக்தி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தகவலை மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளிதுறை இணை அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங்மாநிலங்கள் அவையில் திரு மஜீத் மேமன் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வ பதிலாக தெரிவித்துள்ளார்.
(रिलीज़ आईडी: 1519930)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English