நிதி அமைச்சகம்

சர்க்கஸ், நாட்டியம் மற்றும் நாடகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து நிவாரணம் அளிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை

கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக் கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி.க்கான நுழைவு வரம்பு நபருக்கு ரூ. 250லிருந்து ரூ. 500 ஆக உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2018 1:48PM by PIB Chennai

கடந்த 2018, ஜனவரி 18 நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், சர்க்கஸ், நாட்டியம், நாடகம் அல்லது நடனம், விருது வழங்கும் விழா, போட்டிகள், கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக் கட்டணத்தில் ஜி.எஸ்.டி.க்கான உச்சவரம்பு தனி நபருக்கு ரூ. 250ல் இருந்து ரு.500 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது. கோளரங்கங்களுக்கான நுழைவுக் கட்டணத்திற்கும் இந்த உச்சவரம்பு ரூ. 500 ஆக உயர்த்துவதற்கு கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

கவுன்சிலின் இந்த பரிந்துரை நடைமுறைக்கு வருவதற்கான அறிவிக்கை 2018 ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 2018 ஜனவரி 25 முதல் சர்க்கஸ், நாட்டியம், நாடகம் அல்லது நடனம், விருது வழங்கும் விழா, போட்டிகள், கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கோளரங்கத்திற்கான நுழைவுக் கட்டணத்தில் நபருக்கு ரூ. 500 வரையிலான கட்ட்ணத்திற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1519836) வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी