மத்திய அமைச்சரவை

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 07 FEB 2018 8:21PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தனது ஒப்புதலை வழங்கியது.

தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி மற்றும் தனித்திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பிற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

வெளிநாடுகளுடனான இத்தகைய கூட்டுச் செயல்பாடு இந்தியாவின் தனித்திறனுக்கான சூழலை வலுப்படுத்த உதவுவதோடு, சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு உகந்த வகையில் இளைஞர்களைப் பயிற்றுவிக்கவும் உதவும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இங்கிலாந்தில் உள்ள தொழில் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே புதுமையான பங்காண்மைக்கான கட்டமைப்பையும் உருவாக்கும். இது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான முயற்சிகளை மேலும் அதிகரித்து அவற்றின் தரத்தையும் மேம்படுத்தும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான திட்டங்களுக்கு நிதி வசதி ஏற்பாடுகள் இருதரப்பினரும் ஒப்புக் கொண்ட வகையில் தனித்தனியான ஏற்பாடுகளின் மூலம் உருவாக்கப்படும்.

பின்னணி:

திறன் மேம்பாடு என்பது இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதோடு இருதரப்பு பங்காண்மையின் முக்கிய பகுதியும் ஆகும். தனித்திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு ஆகியவை இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கான முன்னுரிமை பெற்ற பகுதி என்பதை 2016 நவம்பரில் இந்த இருநாடுகளின் பிரதமர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர்.

 

 

*****



(Release ID: 1519749) Visitor Counter : 274


Read this release in: English , Telugu