தேர்தல் ஆணையம்

ஐஐஐடிஇஎம் வளாகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

Posted On: 30 JAN 2018 11:08AM by PIB Chennai

இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் (IIIDEM) , தனது தில்லி துவாரகாவில் உருவாகி வரும் நவீன வளாகத்தை வெளிநாட்டு தேர்தல் மேலாண்மை அமைப்புகள் ,சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பார்வையிட ஏற்பாடு செய்திருந்தது. ஆஸ்திரேலியா, பூட்டான், கினியா, மால்டோவா,ஜாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச  IDEA , IFES அமைப்புகளின் பிரதிநிதிகள் வளாகத்துக்கு பயணம் செய்து , IIIDEM அளித்து வரும் பல்வேறு வசதிகளைப் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

புதிய  IIIDEM வளாகத்தில் பிரதிநிதிகள்

தேர்தல் துணை ஆணையர் திரு. சுதீப் ஜெயின், IIIDEM வளாகத்தின் பல பகுதிகளை பிரதிநிதிகளுக்கு சுற்றிக் காண்பித்தார். அங்குள்ள வசதிகள் மற்றும் சிறப்புகள் பற்றி விளக்கிய திரு.ஜெயின், வளாகத்தில் நிறுவன தொகுப்பு பிரிவு , ஒரே நேரத்தில் 12 தொகுதிகளாக ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கும் விசாலமான பகுதி என்று கூறினார். 450 பேர் அமரக்கூடிய மண்டபம்,  100 அறைகளைக் கொண்ட விடுதி பிரிவு ஆகியவற்றை வளாகம் கொண்டுள்ளது என்று திரு. ஜெயின் தெரிவித்தார். IIIDEM வளாகத்தின் தொலைநோக்கு , மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை திரு.ஜெயின் பிரதிநிதிகளிடம் பகிர்ந்து கொண்டார். புதிய வளாகத்தில் நடக்கும் திறன் மேம்பாட்டு திட்டங்கள், உலக அளவில் தேர்தல்களை திறம்பட எவ்வாறு  நடத்தி முடிப்பது என்பதை விளக்கும் நடவடிக்கைள் ஆகியவற்றில் பங்கேற்க வருமாறு அவர்களுக்கு திரு.ஜெயின் அழைப்பு விடுத்தார். வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பசுமை சூழலை பராமரிக்கவும் பிரதிநிதிகள் மரக்கன்றுகளை நட்டதுடன் பயணம் நிறைவடைந்தது.

 

****



(Release ID: 1519733) Visitor Counter : 104


Read this release in: English