நிதி அமைச்சகம்

102 ஏற்றுமதிப் பொருள்கள் மீதான வரி குறைப்பு

Posted On: 25 JAN 2018 3:38PM by PIB Chennai

இந்திய அரசாங்கம் 102 ஏற்றுமதிப் பொருள்கள் மீதான வரியை குறைத்துள்ளது. 21.9.2017-ம் தேதியிட்ட இந்திய அரசின் கஸ்டம்ஸ் அறிக்கை எண் 89/2017.-ன் படி 1-10-2017-ம் தேதி முதல் அனைத்துப் பொருள்கள் மீதான வரிகள் வரையறுக்கப்பட்டன என்று அந்த.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, தொழில்துறைப் பிரநிதிகள் பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய அரசு அதைப் பரிசீலித்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

கடல் உணவுப் பொருள்கள், மோட்டார் வாகன, சைக்கிள் டயர்கள், தோல் பொருள்கள், நூல், துணி, கம்பளி,  கண்ணாடி கைவினைப் பொருள்கள், சைக்கிள் ஆகிய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பை அடுத்த இந்த ஏற்றுமதிப் பொருள்கள் உற்பத்தியாளர்களின் கவலை நீங்குவதோடு உலக அளவில் வியாபாரத்தில் இவர்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாகவும் இது அமையும். இந்த வரி குறைப்பு 25-1-2018-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களை  cbec.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் அறிந்து கொள்ளலாம்.


(Release ID: 1519721)
Read this release in: English , Hindi