குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மலிவு விலையில் சுகாதார சேவை வழங்க கூடிய வருவாய் மாதிரி நமக்கு தேவை: குடியரசுத் துணைத் தலைவர்
கொல்கத்தாவில் 11வது உலக சுகாதார சேவை மாநாடு – 2017¬ல் உரை
இடுகை இடப்பட்ட நாள்:
30 DEC 2017 12:26PM by PIB Chennai
நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மலிவு விலையில் சுகாதார சேவை வழங்க கூடிய வருவாய் மாதிரி நமக்கு தேவை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர்களின் அமெரிக்க கூட்டமைப்பு கொல்கத்தாவில் இன்று ஏற்பாடு செய்திருந்த 11வது உலக சுகாதார சேவை மாநாடு – 2017¬ல் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். மேற்கு வங்காள ஆளுநர் திரு. கேசரி நாத் திரிபாதி, மேற்கு வங்காள மாநில நகர்புற மேம்பாடு அமைச்சர் திரு. பிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி, மக்களின் வருமானம் அதிகரிக்கும் இன்றைய கால கட்டத்தில், சாதாரண மக்கள் தங்களின் குடும்பத்தில் அவசர மருத்துவ செலவு வரும் போது அவர்களால் அந்த மருத்துவக் கட்டணத்தைச் சமாளிக்க முடியவில்லை. சுகாதாரக் காப்பீடுத் திட்டங்களின் ஊடுருவல் மிகவும் குறைந்த நிலைமையில் இருக்கும்போது, அவசர மருத்துவ உதவிக்கு மக்கள் தனியார் மருத்துவ மனைகளையே நாடிச் சென்று தங்களின் சொந்த சேமிப்பில் உள்ள பணத்தையே செலவழிக்கின்றனர், இது அவர்களின் பிரச்னையை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.
மலிவான விலையில் சுகாதார சேவை வழங்குவதற்கு ஏற்றார்போல் மருத்துவ உபகரணங்களின் விலையைக் குறைக்கக் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் துணைத் தலைவர் மருத்துவ சமூகத்தை கேட்டுக்கொண்டார். உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கம் மற்றும் வேலை தொடர்பான அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளைஞர்களே அதிகபடியாக வியாதிகளுக்கு இரையாகின்றனர்.
இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சாவால்களில் ஒன்று பொது மக்களிடம் அதிகரித்து வரும் நீரழிவு நோய். இது தடுக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் உள்ள நகர்புற பகுதிகளில் வாழும் குறைந்த சமூக-பொருளாதார மக்களிடம் நீரழிவு நோய் பொதுவானதாக மாறி வருகிறது என்றும், இது கவலை அளிக்க கூடிய விஷயம் என்றும் ஒரு ஆய்வு அறிக்கை கூறியிருப்பதை, அவர் சுட்டிக்காட்டினார்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1518502)
வருகையாளர் எண்ணிக்கை : 352