குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 300 மாவட்டங்கள், மற்றும் மூன்று லட்சம் கிராமங்கள் திறந்த வெளி மலம் கழிப்பு இல்லாவை என அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பாரதம் திட்டம் மூலம் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
Posted On:
24 JAN 2018 4:26PM by PIB Chennai
ஸ்வாச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம், வாழ்க்கை முறையை மாற்றிய உலகின் மிகப்பெரிய திட்டம். கிராமப்புற சமூகங்களை ஒன்று திரட்டுவதன் மூலம், இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த முன்னேற்றத் திட்டம் குறித்து இன்று தலைநகரில் வெளியிட்ட தகவல்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு இந்தியத் தரச் சபை, 2016-ம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி கழிவறை பயன்பாடு 91% மற்றும் 95% ஆக இருக்கிறது. இதன்படி 10 மாநிலங்களில் 300 மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம்கழப்பு இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாவன, சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட், குஜராத், அருணச்சல பிரதேசம், சட்டீஸ்கர், சண்டிகர் மற்றும் டாமன் டையூ ஆகும்.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.பரமேஸ்வரன் ஐயர், இந்த வளர்ச்சி குறித்த தகவல்களை இன்று புதுடெல்லியில் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
இதனை, ‘கிராமப்புற இந்தியாவின் துப்புரவுப் புரட்சி’ என்று வர்ணித்த ஐயர், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி கழிவறை இல்லாதவைகளாக, மார்ச் 2018ல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுமையாக அக்டோபர் 2019ல் இந்தத் திட்டம் முழுமையடைந்து லட்சியத்தை அடையும் என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்கள் கிராமப்புற குடும்பங்களில் உடல்நலம் மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை தெரிவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் சுகாதாரக் குறைபாடு காரணமாக 1,00,000 குழந்தைகள் மரணம் அடைவதாக யுனிசெஃப் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், திறந்தவெளியைக் கழிவறையாகப் பயன்படுத்தாத கிராமங்கள் சிறந்த உடல்நலம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
யுனிசெஃப் நிறுவனத்தின் மற்றொரு ஆய்வின் மூலம், திறந்தவெளிக் கழிவறை இல்லாத கிராமம் ஆண்டுதோறும் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு, குறைந்து வாழ்க்கை முறை மாற்றத்தால் ரூ.50,000 சேமிப்பதாக தெரிவித்துள்ளது. 2007 உலக வங்கியின் ஆய்வின்படி, சுகாதாரக் குறைபாடு, காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6% குறைவதாக தெரிவித்தார்.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மூலம் விரைவில் இரட்டைக் குழி கழிவறை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக திரு.ஐயர் தெரிவித்தார். இரட்டைக் குழி கழிவறையானது பொருளாதாரத்திற்கு ஏற்றது, பாதுகாப்பானது, சுத்தப்படுத்த எளிதானது மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்றது. மேலும் இது தானே சுத்திகரித்துக்கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் நிலத்தடி நீர் கழிவறையில் இருந்து பாதுகாக்கப்படும்.
திட மற்றும் திரவக் கழிவுகள் மேலாண்மைக்கு முன்னுதாரணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டம் மூலம் திட மற்றும் திரவக் கழிவுகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்வதற்கு வழி வகுக்கப்படும். இதனால் இந்தத் திட மற்றும் திரவக் கழிவுகள் எரிசக்தியாகவும், பணமாகவும் மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
கிராமப்புற இந்தியாவின் குடிநீர் பிரச்னை குறித்து பேசியபோது, தேசிய கிராமப்புறக் குடிநீர் திட்டத்தின் மூலம் நிறையச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இந்தத் திட்டத்தை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக ஆர்சானிக் மற்றும் ஃபுளோரைடு அடங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
தூய்மை பாரதம் திட்டத்தில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்டு சுத்தத்திற்காக பாடுபட்ட பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் குறித்த தகவல்களை திரு.ஐயர் பகிர்ந்துகொண்டார். இந்த மக்கள்தான் தூய்மை இந்தியாவை உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
(Release ID: 1518089)
Visitor Counter : 273