நிதி அமைச்சகம்

வங்கி மறு மூலதனம் மற்றும் விரிவான சீர்திருத்தத் திட்டத்தை அரசு அறிவித்தது.

Posted On: 24 JAN 2018 4:38PM by PIB Chennai

பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குவதாக அக்டோபர் 2017-ல் இந்திய அரசு அறிவித்தது. இன்று இதுகுறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டது.  2017 – 18 மூலதனம் செலுத்தும் திட்டம் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி மறுமுதலீட்டு பத்திரங்களாகவும், ரூ.8139 கோடி ரூபாய் பட்ஜெட் ஆதரவுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டுத் தேவைகளுக்கும் போதிய பணம் ஒதுக்கப்படும் என்பதால், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடன் வழங்கும் நடவடிக்கை அதிகரிக்கும்.

இந்த சீர்திருத்த நடவடிக்கை சிறப்புற நடைபெறுவதற்காக 6 வகையில் 30 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சீர்திருத்தங்கள், நவம்பர் 2017-ல் பொதுத்துறை வங்கியின் மூத்த மேலாண்மையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்த திட்டமானது ஈஸி என்று அழைக்கப்படும்என்ஹான்ஸ்டு அக்சஸ் அன்ட் சர்வீஸ் எக்ஸெலென்ஸ் - 6 வகையின் கீழ் அதாவது வாடிக்கையாளர் பொறுப்பு, வங்கிப் பொறுப்பு, கடன் பெறுதல், பொதுத்துறை வங்கிகளின் உத்யாமி மித்ர, நிதியளிப்பதை ஆழப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மாற்றம், பொதுத்துறை வங்கிகள் பணியாளர் மேம்பாடு ஆகியவற்றில் அடங்கும். ஒட்டுமொத்தமாக இந்த சீர்திருத்த திட்டமானது, ‘மக்களுக்கு மதிப்பளிக்கும் பொறுப்பான பொதுத் துறை வங்கிகள்என்று அழைக்கப்படுகிறது.

சீரமைப்பில் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையைப்  பொறுத்து முதலீட்டுத் தொகையை அரசு செலுத்தும். பொதுத் துறை வங்கிகளின் அனைத்து இயக்குனர்களும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்தமாக உழைக்க வேண்டும். அவர்களது நடவடிக்கையானது வங்கி வாரியத்தால் ஆய்வு செய்யப்படும்.

ஈஸி திட்டத்தின் மூலம் மக்களுக்குத் தரமான சேவை மற்றும் அணுகுமுறை மேம்பாடு குறித்து தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்படும். இதில் கிடைக்கும் முடிவு ஆண்டுதோறும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

மறுமுதலீடு மற்றும் மறுசீரமைப்பு திட்டம் மூலம் பொதுத்துறை வங்கிகள் வலுவாக இருப்பதற்கும், ஈஸி மூலம் கடன் வழங்குவதை அதிகப்படுத்துதல், சிறிய வாடிக்கையாளருக்கும் ஈஸி திட்டதின் மூலம் சேவை எளிதாகச் சேர்வதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 5 கிலோமீட்டருக்கு சுற்றளவில் கிராமங்களிலும் வங்கிச் சேவை தொடங்குவது மற்றும் மின்னணு பரிமாற்றம் மூலம் 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமற்ற  கடன்களை திருப்பியளிப்பது, வங்கிகள் இருப்பிடத்தைக் காட்டும் மொபைல் ஆஃப் மற்றும் நடமாடும் ஏடிஎம் அமைத்தல் போன்றவை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படும்



(Release ID: 1518063) Visitor Counter : 167


Read this release in: English