நிதி அமைச்சகம்
2018 குடியரசு தின விழாவையொட்டி சுங்கம் மற்றும் மத்திய கலால் வரித்துறையின் 44 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாரட்டுச் சான்றிதழ் விருது வழங்கப்படுகிறது.
Posted On:
24 JAN 2018 12:16PM by PIB Chennai
உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் மிகச் சிறந்த தகுதி மிக்க சேவைக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் விருதுக்கும் தங்களின் கடமைகளைச் செய்யும் போது சிறப்பான சாதனை மற்றும் பராமரிப்பில் தனித்தன்மையோடு பாராட்டத்தக்க சேவைபுரிந்தோருக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் விருதுக்கும் மத்திய கலால் வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறையின் (சிபிஇசி) அதிகாரிகளும் ஊழியர்களும் ஆண்டுதோறும் பரிசீலக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனித்தன்மையோடு பாராட்டத்தக்க சேவை புரிந்தோருக்கான குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் விருது பெற இந்த ஆண்டு 44 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் தங்களுக்கான பிரிவுகளில் முன் மாதிரியான குறைபாடுகள் இல்லாத செயல்கள் அடிப்படையில் விருதாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை ஆணையர்கள் / ஆணையர்கள், இயக்குநர்கள் / கூடுதல் இயக்குநர்கள் / கூடுதல் ஆணையர்கள், துணை / உதவி ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள் / எஸ்ஐஓக்கள், மூத்த நேர்முக செயலாளர் / நேர்முக செயலாளர், ஆய்வாளர்கள் / ஐஓக்கள், ஓட்டுநர்கள் என்ற நிலைகளில் பணிவோர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த ஆண்டு விருதாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் துறையின் பல்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வதன் மூலம் தடை செய்யப்பட்ட பொருள்கள், போதைப் பொருட்கள், தீங்கு பயக்கும் மருந்துகளின் கடத்தலைத் தடுத்தல் வரி ஏய்ப்பைக் கண்டுப்பிடித்தல், வணிக அடிப்படையிலான கருப்புப்பண பரிவர்த்தனை, அந்நியச் செலாவணி முறைகேடுகளைக் கண்டுபிடித்தல், கடத்தல் பொருட்களைப் பறிமுதல் செய்தல், கடத்தல் தடுப்புச் சாதனங்களை மேம்படுத்துதல், அமலாக்க விதிகளை ஒழுங்குபடுத்துதல் இன்ன பிறவற்றில் துறையின் பல்வேறு பிரிவுகளில் விருதாளர்களின் செயல்பாடுகள் இருந்தன. இது தவிர வரிக்கொள்கையில் மாற்றம் செய்தல், வருவாயைத் திரட்டுதல், சுங்கம் மற்றும் மத்திய கலால் வரித்துறையைத் தானியங்கியாக்க மென்பொருள் உருவாக்கம், வரி & சிஜிஎஸ்ட்டி வடிவமைப்புகள், தரவாக்கங்களைக் குறைத்தல், தரவாவுக்குத் தீர்வு, நடுவர் மன்றங்களிலும் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக உறுதியுடன் இருத்தல், திறன் அதிகரித்தல், பயிற்சி, நிர்வாக வேலைகளைத் திறமையுடன் கையாளுதல் என மற்ற பிரிவுகளிலும் இந்த விருதாளர்களின் சிறப்பான செயல்கள் உள்ளன.
தனித்தன்மையோடு பாராட்டத்தக்க சேவை புரிந்தோருக்கு 2018 குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் விருது பெற தெரிவு செய்யப்பட்டுள்ள விருதாளர்களின் பட்டியல், அவர்களின் பொறுப்பு, அவர்கள் தற்போது பணியில் இருக்கும் இடம் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.
- திரு. கே. ராமகிருஷ்ணன், கூடுதல் இயக்குநர், வருவாய்ப் புலனாய்வு தலைமை இயக்ககத்தின் (டிஜிஆர்ஐ) மண்டலப்பிரிவு, சென்னை.
- திரு. குண்டூரு எஸ்.வி.வி.பிரசாத், இணை இயக்குநர், அமலாக்க இயக்ககம் (இ.டி), சென்னை.
கண்காணிப்பாளர்கள் / மூத்தப்புலனாய்வு அதிகாரிகள்:
- திரு எக்ஸ். சதீஷ்குமார், மூத்தப்புலனாய்வு அதிகாரி, வருவாய்ப் புலனாய்வுத் தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஆர்ஐ) தூத்துக்குடி பிராந்திய பிரிவு, மண்டல அலகு, சென்னை.
****
(Release ID: 1518059)
Visitor Counter : 161