மத்திய அமைச்சரவை

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா, கனடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JAN 2018 10:38PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா, கனடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு (MoU) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் கனடாவில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையே அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் வகையிலும், அதற்கான நடைமுறைகளை உருவாக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் இருக்கும்.

சிறப்பம்சங்கள் :

 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், கனடாவின் இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கும் (NSERC) இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் கனடா இடையில் ஆராய்ச்சி & மேம்பாடு விஷயத்தில் ஒத்துழைப்பு புதுமையான  முன்மாதிரியான  திட்டம் ஏற்படுத்தப்படும்.

  • இந்தியா- கனடா பல்நோக்கு ஆராய்ச்சி பங்களிப்புகளை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் கீழ் சமூக மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை துரிதப்படுத்துவதற்கான புதுமையானபலதுறை கூட்டாண்மைக்கான இந்திய-கனடா மையம் ( India-Canada Centre for Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation and Sustainability) (IC-IMPACTS) திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்.
  • ஆராய்ச்சி & மேம்பாட்டு திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடு மூலம் தீர்வுகள் அளித்து சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதை துரிதமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையாக இருக்கும்.
  • இந்தியா மற்றும் கனடாவை சேர்ந்த அறிவியல் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் R & D ஆய்வகங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் இடம் பெறுவார்கள்.
  • பாதுகாப்பான மற்றும் நீடித்து செயல்படக் கூடிய கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புகள் மேற்கொள்வது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் கனடாவை சேர்ந்த நிறுவனங்கள் இடையில் தொடர்புகளை மேம்படுத்தவும், அறிவியல் நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுக்கு இடையில் தொடர்புகள் உருவாக்கப்படுவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.

 

 பின்னணி :

இந்தியா மற்றும் கனடா இடையே நவம்பர் 2005ல் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த அரசுகள் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1516312) வருகையாளர் எண்ணிக்கை : 195