சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சமயபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 45 –ஐ இணைக்கும் வகையில் சர்வீஸ் சாலை

Posted On: 21 DEC 2017 4:10PM by PIB Chennai

திருச்சி மாவட்டம் பாடலூர் அருகே உள்ள சமயபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 45 –ஐ இணைக்கும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. மான்சுக் எல். மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இதைத் தெரிவித்துள்ளார்.

இந்த சாலை வடிகால் பாலங்கள், சிறிய பாலங்கள், சாக்கடை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்கட்டமாக 13.70 கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார்.


(Release ID: 1515996) Visitor Counter : 165
Read this release in: English