சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நயா ராய்ப்பூரில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2017 4:07PM by PIB Chennai

சண்டீஸ்கர் மாநிலத்தின் சார்பில் நயா ராய்ப்பூரில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட முடிவு ஒன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு அனுப்பப்படடது. இதையடுத்து அந்த அமைச்சகம் வரிகள் உள்பட ரூபாய் 17 கோடி செலவில் இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி அளித்தது. மேலும் அனுமதி அளிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நிறுவனத்தை 24 மாதங்களுக்குள் அமைக்க கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் திரு மான்சக் மாண்டாவிய மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1515985) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English