கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

உள்நாட்டு சரக்குப் பெட்டக நிலையம் அமைக்க திட்டம்

Posted On: 21 DEC 2017 4:42PM by PIB Chennai

உள்நாட்டு சரக்குப் பெட்டக பண்டகசாலை அமைப்பதற்கான திட்டங்கள் வரப் பெற்றுள்ளதாக மத்திய கப்பல். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

உலர் துறைமுகங்கள், சரக்குப் பெட்டக பண்டகசாலை நிலையங்கள், விமான கொள்கலன் சரக்கு நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டதற்கான உள்நாட்டு சரக்குப் பெடக பண்டகசாலை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் கட்டட நிறுவனங்களிடமிருந்து திட்டங்கள் வரப் பெற்றுள்ளதாகவும் திரு. பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவற்றை அமைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க வர்த்தகத்துறையுடன் இணைந்து அமைச்சகங்களுக்கு இடையிலான குழு 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு  துறைமுக அறக்கட்டளை வார்தா, ஜால்னா, நாசிக், நாசிக், சாங்கலி ஆகிய இடங்களில் உள்ள உலர் துறைமுகங்களை மேம்படுத்த துவக்கக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வார்தா

வார்தாவில் 140 ஹெக்டேர் நிலப் பரப்பில் உலர் துறைமுக அமைக்கத் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 25 ஹெக்டேர் பரப்பளவில் கட்டத் திட்டமிட்டு அதற்கானப் பணிகள் ஒன்றரை மாதத்தில் தொடங்கப்படும்.,

ஜால்னா

ஜால்னாவில் 180 ஹெக்டேர் நிலப்பரப்பில் உலர் துறைமுகம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 60 ஹெக்டேரில் கட்டத் தி\ட்டமிடப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கான ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்குப் பின் பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாசிக்

நாச்கி மாவட்டம் நிபாட்டில் உலர் துறைமுக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 100-110 ஏக்கரில் விரிவாக்கத் தி்ட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.



(Release ID: 1515984) Visitor Counter : 132


Read this release in: English