பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஆதார் உதவியுடன் ஒருங்கிணைந்த சிறுவர் மேம்பாட்டு சேவை வழங்குவதை அரசு உறுதி செய்ய முயற்சி

Posted On: 04 JAN 2018 4:29PM by PIB Chennai

தனிநபர் அடையாள ஆணையம் எனப்படும் யு..டி... வெளியிட்டுள்ள தகவல்படி, (திட்டமிட்டிருந்தபடி 2017) நாட்டில் 5 வயதுக்குட்பட்ட மொத்தமுள்ள 12,29,58,749 குழந்தைகளில், 5,33,07,933 குழந்தைகளுக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்திருக்கும் 6 வயது வரையிலான அனைத்து சிறுவர்களுக்கும் உலகளாவிய சுய தேர்வுத் திடமான .சி.டி.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த சிறுவர் மேம்பாட்டு சேவை வழங்கப்படுகிறது. .சி.டி.எஸ். திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து, வெளிப்படைத்தன்மை மூலம், சேவை மற்றும் ஆதாயங்கள் பெறுவதற்கு ஆதார் எண் முக்கிய அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இருக்கும் திட்டப்படி, வீட்டுக்கு கூடுதல் ஊட்டச்சத்து ரேஷன், காலை சிற்றுண்டி மற்றும் சூடாக சமைத்த உணவு பரிமாறுதல் போன்றவை அங்கன்வாடிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று  மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் விரேந்திரகுமார் அவர்கள் இவ்வாறு பதில் அளித்தார்.



(Release ID: 1515981) Visitor Counter : 96


Read this release in: English