பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Posted On: 04 JAN 2018 3:05PM by PIB Chennai

இந்திய அரசுப் பணியில் தவறு செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் உள்ள அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மத்திய அரசு போன்று மாநில அரசுகளுக்கும் விசாரணை நடத்தவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தண்டனை வழங்குவதற்கும் அதிகாரமுள்ளது. தற்போது இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மீது (மத்திய மற்றும் மாநில வழக்குகள்)  36 ஒழுங்கு நடவடிக்கைகள், பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை முன்மொழிவதற்கும், ஊழல் தடுப்புச் சட்டம் 1988 படி நடவடிக்கை எடுப்பதற்கும், மேற்கொண்டு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் 8 வழக்குகள் தொடர்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் பணியாளர் மற்றும் பயிற்சி துறை மூலம், 16-வது விதியின் 3-வது உப விதி படி அனைத்து இந்திய சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கையாளும்  (மரணம் மற்றும் பணி ஓய்வு ஆதாயம்) விதி 1958 படி, 4 ஆட்சிப்பணி அதிகாரிகள் முன்கூட்டியே பதவி விலக்களிக்கப் பட்டனர். ஜார்க்கண்ட் கேடர் அதிகாரிகள் யாரும் இதில் இடம்பெறவில்லை.

மாநில அரசு அறிக்கைப்படி, ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த 3 ..எஸ். அதிகாரிகள், மாநில அரசுப் பணியின்போது தவறான நடத்தைக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை, வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.



(Release ID: 1515979) Visitor Counter : 93


Read this release in: English