ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேயில் பயோ-டீசல் பயன்பாடு
Posted On:
03 JAN 2018 4:35PM by PIB Chennai
இந்திய ரயில்வே பல்வேறு வகைகளில் கிடைக்கும் பயோ-டீசல் கொண்டு (காட்டாமணக்கு, இலுப்பை, புங்கை, பஞ்சு விதைக் கழிவு, மீன் எண்ணெய், சோயா பீன் எண்ணெய், பனை மாவு மற்றும் பல) மாறுபட்ட கலவையில் அதாவது பி5, பி10, பி20, பி50 மற்றும் பி100 என 16 சிலிண்டர் ஆல்கோ மற்றும் இ.எம்.டி. ரயில் என்ஜின்களில் பரிசோதனை செய்யப்பட்டது. என்ஜின்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது என்பதுடன் எந்தவொரு எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல் மாசு குறைபாடு குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதற்கும் பயோ-டீசல் பயன்படுகிறது..
பயோ-டீசல் பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகள் :
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- காய்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய்
- நச்சுத்தன்மை இல்லாதது மேலும் மக்கும் தன்மை கொண்டது.
- அமில மழை உருவாக்கும் கந்தகம் கிடையாது.
- எளிதில் உயிர்ப்பிக்கும் ஆற்றல், அதிக எண்ணிக்கையில் பெறமுடியும்.
- டீசல் என்ஜின்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே அல்லது குறிப்பிட்ட விகிதங்களில் அதிவேக டீசலுடன் கலந்து பயன்படுத்த முடியும்.
- அதிக வழுவழுப்பு என்பதால் என்ஜினின் ஆயுள் அதிகரிக்கும்
- அதிவேக டீசலைவிட சேமித்து வைப்பதும், வேறு இடத்துக்கு கொண்டுசெல்வதும் எளிது.
- சுற்றுச்சூழலுக்கு ஏற்றது – குறைந்த மாசு வெளியிடும்
- கிராமப்புற வேலைவாய்ப்புக்கு நம்பிக்கையானது.
பயோ-டீசல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும் வெளியேற்றும் தீப்பிழம்புகளில் முழுமையாக எரியாத ஹைட்ரோகார்பன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற துகள்களைக் குறைக்கிறது. கந்தகம் வெளிப்படுவதையும் தடுக்கிறது.
மத்திய ரயில்வே இணையமைச்சர் திரு.ராஜேன் கோஹென் இன்று 03-01-2018 (புதன் கிழமை) மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
(Release ID: 1515978)
Visitor Counter : 169