பிரதமர் அலுவலகம்

பி.எம்.இந்தியா பன்மொழி இணையதளம் இப்போது 13 மொழிகளில்

அசாமீஸ் மற்றும் மணிப்பூரி மொழிகளில் பிரதமரின் அதிகாரபூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது

Posted On: 01 JAN 2018 4:20PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.pmindia.gov.in/ ன் அசாமீஸ் மொழி மற்றும் மணிப்பூரி மொழி இணையதளங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன. இந்த இணைய தளத்தை இப்போது அசாமீஸ் மற்றும் மணிப்பூரி மொழிகளிலும் படிக்கலாம். இந்த இரு மாநிலங்களின் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரு மொழிகளில் இணைய தளம் தொடங்கப்பட்டது.

இவ்விரு மொழிகளில் இணையதளம் தொடங்கப்பட்துடன் இதுவரை 11 மொழிகளில் இயங்கிவந்த பி.எம்.இந்தியா இணையதளம் இனி 13 மொழிகளில் செயல்படும். இந்த மொழிகள் வருமாறு: ஆங்கிலம், இந்தி, அசாம், வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி. மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு.

இந்த 13 மொழிகளிலும் பிரதமரின் இணையதளத்தை அணுகவேண்டிய முகவரி

அசாமீஸ்: http://www.pmindia.gov.in/asm/

வங்காளம்: http://www.pmindia.gov.in/bn/

குஜராத்தி: http://www.pmindia.gov.in/gu/

கன்னடம்: http://www.pmindia.gov.in/kn/

மராத்தி: http://www.pmindia.gov.in/mr/

மலையாளம்: http://www.pmindia.gov.in/ml/

மணிப்பூரி: http://www.pmindia.gov.in/mni/

ஒடியா: http://www.pmindia.gov.in/ory/

பஞ்சாப்: http://www.pmindia.gov.in/pa/

தமிழ்: http://www.pmindia.gov.in/ta/

தெலுங்கு: http://www.pmindia.gov.in/te/

 

இந்த முன்முயற்சிகள் அனைத்துமே, பிரதமர் திரு. நரேந்திர மோடியின், மக்களை அவர்கள் மொழியில் தொடர்பு கொண்டு அணுக வேண்டும் என்ற முயற்சியின் ஓர் அங்கமாகும். மக்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுடன் பிரதமரின் கலந்துரையாடலை மேலும் விரிவு படுத்த இந்த முயற்சிகள் பெரிதும் உதவும்.

 

*****.



(Release ID: 1514869) Visitor Counter : 338


Read this release in: English