இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் விவகாரங்கள் துறை – 2017 ஆண்டு கண்ணோட்டம்
Posted On:
13 DEC 2017 5:26PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் துறையின் (இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை) 2017-ம் ஆண்டு முக்கிய சாதனைகள் வருமாறு:
- நேரு யுவ கேந்திரா சங்கதன் (NYKS)
முக்கியத் திட்டங்கள்:
நாடு முழுவதும் 1.42 லட்சம் இளைஞர் சங்கங்கள் மூலம் 3.15 லட்சம் இளைஞர்கள், தங்கள் பெயரை நேரு யுவ கேந்திரா சங்கதனில் பதிவு செய்து, தேச நிர்மாணத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். நேரு யுவ கேந்திரா சங்கதனின் சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் மற்றும் சாதனைகள் பின்வருமாறு…
- 7.93 லட்சம் செடிகள் நேரு யுவகேந்திரா சங்கதன் உறுப்பினர்களால் நடப்பட்டன.
- யுவகேந்திரா உறுப்பினர்கள் 10,166 யூனிட் ரத்தத்தை கொடையாக அளித்துள்ளார்கள்.
- 2,327 திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதில், 69,597 இளம் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர்.
- இளம் தலைவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக 280 பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில் 12,301 இளைஞர்கள் பங்கேற்றனர்.
- 1854 இளைஞர் சங்கம் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில் 1,55,873 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- 1331 விளையாட்டுப் போட்டிகள் பிளாக் மற்றும் மாவட்ட அளவில் நிகழ்த்தப்பட்டதில் 1,67,605 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- தேசிய மற்றும் சர்வதேச முக்கிய தின கொண்டாட்டங்களில் 11,19,587 இளைஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் 8054 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- 240 மாவட்ட இளைஞர் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டதில் 1,36,734 பேர் கலந்துகொண்டனர்.
- தூய்மை நிகழ்ச்சிக்காக 1,04,279 இடங்களில் 8,72,813 இளைஞர்கள் கலந்துகொண்டு, 8,825 பள்ளி/கல்லூரிகள், 7,720 மருத்துவமனைகள் மற்றும் 19,437 சிலைகளை சுத்தம் செய்தனர். ஒட்டுமொத்தமாக 9,29,737 நிகழ்ச்சிகள், செயல்பாடுகள், விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டதில் 59,74,990 இளையோர் கலந்துகொண்டனர்.
- நீர் பாதுகாப்பு – 13,000 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில் 3.8 லட்ச இளைஞர்கள் கலந்துகொண்டனர். 2,260 புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு, 3,139 நீர் நிலைகள் பராமரிக்கப்பட்டன.
- இந்திரதனுஷ் நிகழ்ச்சி – 52317 குழந்தைகளுக்கு சேவையாளர்களால் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
- தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஏற்பாடு செய்த ஒற்றுமை ஓட்டத்தில் 2.5 லட்சம் இளைஞர்கள் கலந்துகொண்டு ஓடினார்கள்.
- அரசியலமைப்பு தினம், குவாமி ஏக்தா திவாஸ் மற்றும் பக்த்வாடா ஆகியவை இந்தியா முழுவதும் மாவட்ட நேரு யுவ கேந்திராவால் கடைபிடிக்கப்பட்டன.
- டெல்லி ஸ்லம் அந்தோலன் – சமுதாய கட்டிடம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு இளைஞர் பங்களிப்பை உறுதியளிக்கும் வகையில் டெல்லியில் 12 இடங்களில் ஸ்லம் யுவா டாட்ஸ் தொடர்பான கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் டெல்லி ஸ்லம் அந்தோலன் திட்டத்தின் கீழ் டெல்லியில் நடத்தப்பட்டன.
- சர்வதேச யோகா தினம் : நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பினர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிலைகளிலும் கலந்துகொண்டனர். 14 மாநில அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 34,007 இளைஞர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட அளவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் 384 மாவட்டங்களில் 2,55,474 இளைஞர்கள் பங்கேற்றனர். கிராம அளவில் 37,286 இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்த யோகா செய்முறை நிகழ்ச்சியில் 10,44,518 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- ஸ்வட்ச்தா பக்த்வாடா கொண்டாட்டம் : நேரு யுவ கேந்திரா சங்கதன் தேசிய அளவில் 2017, ஆகஸ்ட் 1 முதல் 15 வரை ஸ்வட்ச்தா பக்த்வாடா தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதில் மாவட்ட அளவிலான யுவ கேந்திரா உறுப்பினர்களும் தேசிய அளவிலான உறுப்பினர்களும் உள்ளூர் இளைஞர்களும் மற்ற மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு ஒதுக்கினார்கள்.
- 1,04,279 இளைஞர் சங்கங்கள் சுத்தப்படுத்தும் பணியை கிராமங்களில் மேற்கொண்டதில் 8,72,813 இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். 8,237 ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள் மற்றும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களைத் தூய்மைப்படுத்துவதில் 1,95,545 இளைஞர்கள் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக சுவட்ச்தா பக்த்வாடா திட்டத்தின் கீழ் 9,29,737 நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடத்தப்பட்டு 59,74,990 இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
- ஸ்வட்ச்தா கி சேவா பிரச்சாரம் : நேரு யுவ கேந்திரா தேசிய அளவில் ஏற்பாடு செய்த தீவிர ஸ்வட்ச்தா கி சேவா பிரசாரத்தில் தேசிய இளைஞர் சங்கம், இளைஞர் சங்கம், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் முக்கிய மாவட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைவரும் சுற்றுச்சூழல் தூய்மைக்காக அன்றாடம் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.
- 20,384 இளைஞர் சங்கங்கள் மூலம் கிராமத்தினரை உள்ளடக்கி, கிராம சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்தியா முழுவதும் 20,384 கிராமங்களில் இளைஞர்களும், கிராமத்தினரும் இணைந்து சுகாதார விழிப்புணர்வை மேற்கொண்டனர். திறந்தவெளிக் கழிவறை மற்றும் சுகாதாரம் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 38,495 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 2,05,154 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- ஸ்வட்ச் சங்கல்ப் சே ஸ்வட்ச் சித்தி – தூய்மை இந்தியா இயக்கத்தை ஏராளமான நபர்களை உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, பங்கேற்பவர்களின் கல்வி, பொது அறிவை சோதிக்கும்படியான போட்டிகள், கட்டுரை எழுதுதல், குறும்படம் தயாரித்தல் போன்றவை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுடன் சான்றிதழும் வழங்கப்பட்டன.
- தேசிய அளவில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு வாங்கியவர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மாநிலங்களுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் பரிசு வழங்கி கெளரவித்தார்.
- கடந்த அக்டோபர் 2, 2017 அன்று டெல்லி, விக்யான் பவனில், தேசிய அளவில் கட்டுரைப் போட்டி மற்றும் குறும்பட போட்டிகளில் வெற்றி பெற்ற செல்வி.ராமந்தீப் கெளர் மற்றும் திரு.பிஎஸ்.சங்கீத்லால் ஆகியோருக்கு பிரதமபரிசு பிரதமர் பரிசு வழங்கி கெளரவித்தார்.
- நடப்பு வருடத்தில், நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலமாக 220 மாவட்டங்களில் ஸ்ரம்தான் இயக்கம் மூலம் சுகாதார விழிப்புணர்வு ஊட்டுவதற்காக ஐ.இ.சி. மீடியா அண்ட் பப்ளிசிட்டி மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஸ்ரம்தான் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த வகையில் பங்களிப்பு செய்த 152 இளைஞர் சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புத் திட்டங்கள்
- பீகாரில், சம்பரன் இயக்கத்தின் 100 ஆண்டு விழாவை நினைவூட்டும் வகையில், பீகார் அரசுடன் இணைந்து மோட்டிஹரியில் 2017 ஏப்ரல் 15 முதல் 19 வரை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பைச் சேர்ந்த 768 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- குவாஹத்தில் இளைஞர் கூட்டம் – நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில் மாநில அளவிலான இளைஞர் கூட்டம் 2017 மே 23 அன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 900 இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
- சத்தீஸ்கர், ராஜ்பூரில் நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த மாநில அளவிலான இளைஞர் மாநாடு 25.5.2017 அன்று நடைபெற்றது. சத்தீஸ்கர் ராஜ்பூர் மாநாட்டில் 1,359 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த ஸ்லம் யுவ டாட் இயக்கம் 2017, மே 26 அன்று டெல்லியில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களை டெல்லியின் தேசிய நீரோட்டத்துடன் இணைத்து, கல்வி மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. டெல்லி குடிசைப் பகுதிகளில் இருந்து 5,000 இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- கோழிக்கோட்டில் இளைஞர் மாநாடு – கேரளாவில் ஜூன் 15, 2017 அன்று நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த மாநாடு கோழிக்கோட்டில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் மையக் கருத்து, இளைஞர் இந்தியா விஷன் – 2000 ஆகும். 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- சிக்கிம், காங்டாக்கில் மாநில அளவில் இளைஞர் மாநாடு – நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் மாநில அளவிலான இளைஞர் மாநாடு சிக்கிமில் உள்ள காங்டாக்கில் ஜூன் 4, 2017 அன்று நடைபெற்றது. இதில் 1500க்கும் மேற்பட்ட நேரு யுவ கேந்திரா சங்கதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- நமாமி கங்கா திட்டத்தில் இளைஞர் பங்கேற்பு - தேசிய இயக்கமான கங்கை தூய்மை திட்டம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நேரு யுவ கேந்திரா சங்கதன் உறுப்பினர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றினார்கள். கங்கையை தூய்மைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- மே 26 முதல் ஜூன் 9, 2017 வரை கங்கை நிரிக்ஷன் யாத்ரா மேற்கொள்ளப்பட்டது.
- கங்கா தசரா கொண்டாட்டம் (3, 4 ஜூன், 2017) நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் 53 தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 7601 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
- கங்கா விர்க்ஷரோபன் சப்தக் (25 ஜூலை முதல் 31 ஜூலை 2017) – நேரு யுவ கேந்திரா சார்பில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் 30 மாவட்டங்களில் கங்கை நதிக்கரையினில் 1,12,246 செடிகள் நடப்பட்டன. இந்த விழாவில் 8,894 இளைஞர்களுடன், 2,299 குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
- ஸ்வட்ச் டெல்லி என்.சி.ஆர். திட்டம் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மூலம் ஸ்வட்ச் டெல்லி என்.சி.ஆர். திட்டம் நேரு யுவ கேந்திரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபரிதாபாத் மற்றும் குருக்ராம் ஆகிய இரண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து 502 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மூன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் இருந்து 157 பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- பார்யடான் பார்வ் – சுற்றுலாவின் மகத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 5 – 25 அக்டோபர் 2017 வரை நாடு முழுவதும் பார்யடான் பார்வ் இயக்கம் நடத்தப்பட்டது. நிதித் துறை அமைச்சர், இந்த இயக்கத்திற்கு சிறப்பாக உழைத்த நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பினருக்கும், எம்.ஒ.ஒய்.ஏ.எஸ். அமைப்பினருக்கும் விருது வழங்கி கெளரவித்தார்.
- பழங்குடி இளைஞர் பரிவர்த்தனை திட்டம் – இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற 7 மாநிலங்களில் இருந்து 29 மாவட்டத்தைச் சேர்ந்த 2000 இளைஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் 10 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- வடகிழக்கு இளைஞர் பரிவர்த்தனை திட்டம் – இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் ஹிசர், திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் பூனே ஆகிய 4 இடங்களில் 8 வடகிழக்கு மாநிலத்திலிருந்து 1000 வடகிழக்கு இளைஞர்கள் பங்களிப்பு செய்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- ஏக் பாரத் சிரஷ்தா பாரத் – மாநிலங்களுக்கு இடையிலான திறன் பரிமாற்று நிகழ்ச்சியான ஏக் பாரத் சிரஷ்தா பாரத் நிகழ்ச்சியில் 15 மாநிலங்கள் கலந்துகொண்டன. இதுவரை தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா போன்ற நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 402 இளைஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
- தேசிய அளவிலான நாட்டுப் பற்று மற்றும் நாட்டை கட்டமைத்தலுக்கான பேச்சுப் போட்டி. நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் தேசப்பற்று மற்றும் நாட்டை கட்டமைப்பதற்கான போட்டிகள் பகுதி, மாவட்டம், மாநிலம் வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டன. 2018 இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தை நோக்கி இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.)
நாட்டு நலப்பணித் திட்டத்தில் 3.86 மில்லியன் இளம் மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 41,442 என்.எஸ்.எஸ். இயக்கம் 396 பல்கலைக்கழகங்கள்/+2 கவுன்சில்ஸ் மற்றும் 16,331 கல்லூரிகள்/தொழிற்கல்வி நிலையங்கள் இவற்றுடன் 28,621 மேல்நிலைப் பள்ளிகள் என நாடு முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது. என்.எஸ்.எஸ். மூலம் மாணவர்களின் பண்புகளையும் குணநலன்களையும் மேம்படுத்தும் பயிற்சிகள் நடத்தப்பட்டன. என்.எஸ்.எஸ். இயக்கத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சிகள், சாதனைகள் பின்வருமாறு.
- என்.எஸ்.எஸ். என்பது மத்திய நலப்பணி திட்டமாக 14.1.2016 முதல் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் சி.எஸ்.எஸ். என 2015-16ல் இருக்கும்,.
- நாடு முழுவதும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் சிறப்பாக பங்கேற்றனர். ஸ்வட்ச் பாரத் பக்த்வாடா திட்டத்தின் கீழ் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 3,611 மருத்துவமனைகள், 2,616 மருந்தகங்கள் 1,481 சமுதாயக் கூடங்கள், 1,096 முதியோர் இல்லங்கள், 2,252 வரலாற்று நினைவுச் சின்னங்கள், 1,062 அனாதை இல்லங்கள், 176 ஊனமுற்றோர் மையங்கள், 949 ரயில் நிலையங்கள், 6,961 பஸ் நிலையங்கள், 2,282 சிலைகள் மற்றும் 654 தொல்லியல் இடங்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களை சுத்தப்படுத்தியுள்ளார்கள். குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் மூலம் நடத்தப்பட்ட குறும்படம் உருவாக்கப் போட்டியில் என்.எஸ்.எஸ். மாணவரான திரு. எம்.விஷ்ணுவுக்கு இரண்டாவது பரிசு, ஸ்வட்ச்தா கி சேவா நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.
- சர்வதேச யோகா தினம் (21-6-2017) கொண்டாடப்பட்ட நேரத்தில் 22.16 லட்சம் என்.எஸ்.எஸ். ஊழியர்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.
- என்.எஸ்.எஸ். ஊழியர்களால் 33.54 லட்சம் செடிகள் நடப்பட்டன.
- என்.எஸ்.எஸ். ஊழியர்களால் 3.96 லட்சம் யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டது.
- இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் 4.50 லட்சம் குழந்தைகளுக்கு என்.எஸ்.எஸ். ஊழியர்களால் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
- 17,134 உடல்/கண்/நோய்த் தடுப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதில் 9.93 லட்சம் என்.எஸ்.எஸ். ஊழியர்கள் பங்கெடுத்தார்கள்.
- சமூக விழிப்புணர்வு தொடர்பாக 50,355 நிகழ்ச்சிகள் /ஓட்டங்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதில் 36.05 லட்சம் என்.எஸ்.எஸ். ஊழியர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
- 148.71 லட்சம் என்.எஸ்.எஸ். ஊழியர்கள் ஸ்ரம்தான் இந்த ஆண்டு மேற்கொண்டனர்.
- 2.33 லட்சம் என்.எஸ்.எஸ். ஊழியர்கள் தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டனர்.
- நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. மற்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கான விழிப்புணர்வு என்.எஸ்.எஸ். அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டன.
- வடகிழக்கு இளைஞர் திருவிழா, அருணாசலப் பிரதேசம், நாகலாந்து மற்றும் திரிபுராவில் ஏற்பாடு செய்யப்பட்டதில் 300 என்.எஸ்.எஸ். ஊழியர்கள் ஒவ்வொரு வட மாநிலங்களில் இருந்தும் பங்கெடுத்துக் கொண்டனர்.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் (ஆர்.ஜி.என்.ஐ.ஒய்.டி.)
தமிழகத்தில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இளையோர் தொடர்பான விவகாரங்களில் ஆய்வு பயிற்சி மற்றும் தேவையான முயற்சி எடுப்பதற்கான முன்னணி மையமாகத் திகழ்கிறது. ஆர்.ஜி.என்.ஐ.ஒய்.டி சட்டம் 2012 படி, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் தேசிய முக்கியத்துவம் பெற்ற மையமாகத் திகழ்கிறது. இந்த மையத்தில், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சிகள், சாதனைகள் பின்வருமாறு.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இந்த ஆண்டு, இந்திய தேசிய இளைஞர் மேம்பாட்டு குறியீட்டு எண் அறிக்கை 2017 வெளியிட்டது. இதற்கான முயற்சி 2010ம் ஆண்டு முன்னோடியாக தொடங்கப்பட்டு, இளைஞர் மேம்பாட்டு குறியீட்டு எண் 2017ல் முடிவடைந்துள்ளது. இந்த அறிக்கையானது, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மாநிலங்களுக்கான இணையமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் நவம்பர் 13, 2017 அன்று புது தில்லியில் வெளியிட்டார்.
- தேசிய இளைஞர் கொள்கை 2014 அடிப்படையில் நாடு முழுவதும் இருந்து எளிமை மற்றும் திறமை மேம்பாட்டுக்காக 210 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி, கட்டிட அளவுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 14,433 இளைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இளைஞர்கள் மற்றும் வடகிழக்குப் பகுதி இளைஞர்களுக்கு ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் மூலம் வணிகத் திறன் மேம்படுத்துவதற்காக தேசிய மைக்ரோ, சிறு, குறு மற்றும் நடுத்தர தேசிய நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் ஏழு மாநிலங்களில் இருந்து 700 இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ட்ரபிரனர்ஷிப் அமைப்புடன் இணைந்து, பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி மூலம் வாழ்க்கைத் திறன், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய வியாபாரப் பயிற்சி போன்றவை வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்டன.
- வகுப்பறை நிகழ்ச்சிகளுக்காக நாடு முழுவதும் இருந்து 2016-17 மற்றும் 2017-18 ஆண்டு கல்வி ஆண்டுக்கு 190 மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் மூலம் 26 ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பணியாளர்கள் 8 திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
- தொழிற்கல்வி நிகழ்ச்சிகள் ஆடைகள் உற்பத்தி, தொழில்முனைவோர், ஃபேஷன் டிசைனிங் மற்றும் சில்லறை வணிகம் போன்றவை ஜவுளித் துறை அமைச்சகம் மூலம் அப்பரல் டிரைனிங் அன்ட் டிசைன் சென்டர் மூலம் 19 இடங்களில் அமைக்கப்பட்டு, 513 மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் மூலம் மேலும் ஒரு பிரத்யேக ஒரு வருட முதுகலை டிப்ளமோ வகுப்பு இளையோர் மேம்பாட்டுக்காக 2016-17 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இது 2017ம் ஆண்டு 51 மாணவர்களுடன் தொடர்கிறது
- சமூக வியாபார ஆரம்ப மையம் ஒன்று ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது
- அரசியல் தலைமை மற்றும் மேலாண்மைக்கு மையம் ஒன்று ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் மூலம் அமைக்கப்படவுள்ளது.
- அரசியல் தலைமை டிப்ளமோ வழியில், பூகோள தகவல் மையம் ஒன்றை ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஐ.ஐ.எஸ்.ஆர். மற்றும் இஸ்ரோ அமைக்கவுள்ளது.
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுமை மற்றும் மேம்பாட்டுக்கான திட்டம் தொடங்கப்பட்டது.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை இந்திய, சர்வதேச நிறுவனம் மூலம் நவம்பர் 13, 2017 அன்று இளைய வாக்காளர்களை அதிகரிக்கும் திட்டம் நடத்தப்பட்டது.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் நேஷனல் கவுன்சில் ஆஃப் ரூரல் இன்ஸ்டிடியூட்ஸ் நிறுவனத்துடன் நவம்பர் 1, 2017 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி கற்பித்தல், படித்தல், ஆய்வு, பயிற்சி, கூட்டு வெளியீடு, களப் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் கிராமப்புற இந்தியாவில் செயல்படுகிறது.
- ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய /சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டனர்
எண்
|
நிகழ்ச்சியின் பெயர்
|
மாணவர் எண்ணிக்கை / ஆசிரிய ஊழியர்கள்
|
1
|
13 முதல் 21 ஜனவரி 2017 வரை இலங்கைக்கு சென்ற இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
2 மாணவர்கள்
|
2
|
தாய்லாந்து, பேங்காக்கில், ஆசிய பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணைக்குழு நடத்தும் பயிற்சி முகாம் -29 மே முதல் 1 ஜூன் 2017 வரை, ஆசிய-பசிபிக்கில் இளைஞர் மேம்பாட்டுக்கு ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்.
|
1 பயிற்சி அதிகாரி
|
3
|
சீனாவுக்கு ஜூலை 9 முதல் 16, 2017 வரை சர்வதேச இளைஞர் பரிமாற்று நிகழ்ச்சி
|
16 மாணவர்கள் + 1 ஆசிரிய ஊழியர்
|
4
|
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில், 29 ஜூலை முதல் 3 ஆகஸ்ட் 2017 வரை, 9-வது காமன்வெல்த் இளைஞர் அமைச்சர்களின் சந்திப்பு
|
1 ஆசிரிய ஊழியர்
|
5
|
பாலஸ்தீனத்திற்கு இந்தியன் இளைஞர் பிரதிநிதிகள் 14 முதல் 21 செப்டம்பர் 2017 வரை
|
4 மாணவர்கள்
|
6
|
ரஷ்யாவில் 19-வது உலக இளைஞர் மற்றும் மாணவர் திருவிழா 14 அக்டோபர் முதல் 22 அக்டோபர் 2017 வரை
|
2 மாணவர்கள் + 1 ஆசிரிய ஊழியர்
|
7
|
ஈஜிப்ட்டுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள் 4 முதல் 9 நவம்பர் 2017 வரை
|
1 மாணவர்
|
8
|
இலங்கைக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள் 11 முதல் 27 டிசம்பர் 2017
|
6 மாணவர்கள்
|
- சர்வதேச நல்லுறவு
இந்தத் துறையானது சர்வதேச அளவில் இளைஞர் திட்ட பரிமாற்றம் மூலம், சர்வதேச அளவில் இளைஞர்களை முன்னெடுத்துச் செல்லவும், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இளையோர் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றவும் வழி வகுக்கிறது. இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
ஏப்ரல் 2016
|
10 பேர் வருகை – இந்தியாவுக்கு வியட்நாம் இளையோர் பிரதிநிதிகள்
50 பேர் வருகை - இந்தியாவுக்கு நேபாள் இளையோர் பிரதிநிதிகள்
4 பேர் பயணம் – சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள பஹ்ரைனுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
மே 2016
|
34 பேர் பயணம் – தென்கொரியாவுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
49 பேர் வருகை – பாலஸ்தீனத்தில் இருந்து இளைஞர் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு
10 பேர் பயணம் – வியட்நாமுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
ஜூன் 2016
|
196 பேர் பயணம் – சீனாவுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
ஜூலை 2016
|
46 பேர் பயணம் – ரஷ்யாவுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
10 பேர் பயணம் – சீனாவில் பிரிக்ஸ் இளையோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
6 பேர் பயணம் – 9வது காமன்வெல்த் இளையோர் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள கம்பளா, உகாண்டாவுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
செப்டம்பர் 2016
|
30 பேர் வருகை – இலங்கை இளைஞர் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு
31 பேர் வருகை – பாலஸ்தீனத்திற்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
|
அக்டோபர் 2016
|
121 பேர் பயணம் – உலக இளைஞர் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு ரஷ்யாவுக்கு இந்திய இளைஞர் பிரதிநிதிகள்
3 பேர் பயணம் – ரஷ்யாவில் உள்ள பீட்ஸ்பெர்க் நகரில் நடக்கும் பிரிக்ஸ் இளம் பார்லிமென்டேரியன் மாநாட்டில் கலந்துகொள்ள, இளம் நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள்
34 பேர் வருகை – தென்கொரிய இளைஞர் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு
|
நவம்பர் 2016
|
195 பேர் வருகை – சீனாவில் இருந்து இளைஞர் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு
|
.
நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 14 கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்தத் துறையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் தீவிரமாக நடைபெறுகிறது.
- இளைஞர் மற்றும் இளம் பருவத்தினர் மேம்பாட்டு தேசிய திட்டம் (NPYAD)
நிப்யாட் எனப்படும் இளைஞர் மற்றும் இளம் பருவத்தினர் மேம்பாட்டு தேசியத் திட்டம் ஒரு பாதுகாப்பு கொடையாக, அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகள் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
- நடப்பு நிதியாண்டு 2017-18ல், இந்திய அளவிலான 15 தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 28 முதல் 30 அக்டோபர் 2017 வரை சிக்கிம் காங்க்டாக்கில், 5வது இளைஞர் வடகிழக்கு திருவிழா கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள ஜியான் விகார் பல்கலைக்கழகத்தில் 22-வது தேசிய இளைஞர் திருவிழா 12 முதல் 16 ஜனவரி 2018 வரை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
- நிலம், தண்ணீரில் சாதனைகள் புரிந்த 4 பேருக்கு இந்த வருடம் டென்சிங் நார்கே தேசிய வீரதீர விருது 2016 வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய இளம் தலைவர்கள் திட்டம் (NYLP):
இளைஞர்களிடம் தலைமைப் பண்பு வளர்க்கும் வகையில் 2014-15 பட்ஜெட் அறிவிப்பின் தொடர்ச்சியாக, தேசிய இளம் தலைவர்கள் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் 2014ல் தொடரப்பட்டது. இந்த ஆண்டு மேற்கொண்ட சில முக்கிய சாதனைகளைக் கீழே காணலாம்.
- அண்டை நாட்டு இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் இளைஞர் சங்கங்கள் இணைக்கப்பட்டது. இதன் மூலம் இளைஞர்களிடம் தலைமைப் பண்பை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்குள் இன்றைய பிரச்னைகள் குறித்து குழு விவாதம்/ பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. நடப்பு வருடத்தில் 2,047 ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு 1.76 லட்சம் இளைஞர்கள் பங்கெடுத்தனர். மேலும் 23,255 கிராம அளவிலான அண்டைநாட்டு இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு 2.92 லட்சம் இளைஞர்கள் பலன் அடைந்தனர். 2017-18 காலாண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் வழக்கமான செயல்பாடுகள் தவிர யோகா விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 21.06.2017 –ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேரு யுவ கேந்திரா சங்கதன் மூலம் நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
- இளைஞர்களுக்கு முன்னேற்றம் : ஸ்ரமதான் நடவடிக்கையில் ஈடுபடுவது மூலம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறந்த முறையில் பணியாற்றிய இளைஞர் சங்கத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- இளைஞர் விடுதி :
நாட்டின் கலாச்சாரப் பெருமையை இளையவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்களிடம் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இளைஞர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து விடுதிகள் கட்டப்படுகின்றன. இளைஞர் விடுதிகள் குறைந்த கட்டணத்தில் நல்ல வசதிகளுடன் சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. மொத்தம் 83 இளைஞர் விடுதிகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஒரு இளைஞர் விடுதி அருணாசலப்பிரதேசத்தில் உள்ள ரோயிங்கில் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆறு இளைஞர் விடுதிகள் ஆக்ரா (உத்திரப்பிரதேசம்), டல்ஹவுசி (ஹிமாச்சலப் பிரதேசம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்), மைசூரு (கர்நாடகா), பனாஜி (கோவா) மற்றும் புதுச்சேரி விடுதிகள் ஐ.எஸ்.ஓ.9001-2008 தரச்சான்று பெற்றுள்ளன.
(Release ID: 1514669)
|