மத்திய அமைச்சரவை
ஆண்டு இறுதி அறிக்கை - 2017 அமைச்சரவை ஒப்புதல்கள்
Posted On:
27 DEC 2017 3:00PM by PIB Chennai
ஜனவரி 4, 2017
புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டேர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு இரண்டாவது தூதரக பகுதியை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதற்காக மாற்றியளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு இரண்டாவது தூதரக பகுதியை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதற்காக மாற்றியளிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது.
தற்போது, சாணக்கியபுரியில் மட்டுமே தூதரக பகுதி உள்ளது, அதன் நிலம் அனைத்து தூதரகங்களுக்கும் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் தூதரக அலுவலகங்கள் / பன்னாட்டு நிறுவனங்கள் தில்லியில் தங்கள் அலுவலகங்கள்/ தூதரகங்களை கட்டிக் கொள்வதற்கு அதிக நிலம் தேவைப்படுவதாக தெரிவித்தது. இதற்காக, தில்லி மேம்பாட்டு ஆணையம், புதுதில்லி, துவாரகா, செக்டார் 24-ல் உள்ள 34.87 ஹெக்டேர் நிலத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் கண்டறிந்து, அதனை நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றி வழங்கும். இது தில்லியில் இரண்டாவது தூதரக பகுதியை உருவாக்க நிலம் அளிக்கும்.
இந்தியா மற்றும் உருகுவே இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் உருகுவே இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னேற்பிற்கும் ஒப்புதல் வழங்கியது.
இந்தியா-கென்யா இடையே வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கென்யா இடையே வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா-போர்த்துகல் இடையே வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-போர்த்துகல் இடையே வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜனவரி 18, 2017
பழமையாகிப் போன மற்றும் தேவையற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
105 சட்டங்களைத் திரும்ப பெறுவதற்கான திரும்பப் பெறும் மற்றம் திருத்த மசோதா 2017 –ஐ த் தாக்கல் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசுகளின் நிலம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான மத்திய போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றால் கையெழுத்து இடப்படும்.
1.4.2016 முதல் தேசிய சிறுசேமிப்பு நிதியில் முதலீடு செய்வதிலிருந்து மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், (சட்டமன்றம் உள்ள) துணை நிலை மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களுக்கும் (சட்டமன்றம் உள்ள) துணைநிலை மாநிலங்களுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியில் முதலீடு செய்வதிலிருந்து 1.4.2016லிருந்து விலக்களிக்க தனது ஒப்புதலை வழங்கியது. தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து ஒரே தடவைக் கடனாக ரூ. 45,000 கோடியை இந்திய உணவுக் கழகத்திற்கு, அதன் உணவு தானிய மானியத் தேவைகளை சமாளிப்பதற்காக, வழங்கவும் அது ஒப்புதல் அளித்தது.
பயிற்சித் தரங்கள், சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு (STCW, 78) மற்றும் இது தொடர்பான திருத்தங்களின் படி திறன் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த்த்துக்கு அமைச்சரவை ஒப்புதல்.
திறன் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலை.
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே கடல்சார் போக்குவரத்தில் நிறுவன ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே கடல்சார் போக்குவரத்தில் நிறுவன ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து.
திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை முறையில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை அனுமதி
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மின்னணுத் துறையில் முதலீட்டிற்கு மேலும் ஊக்கமளிக்கவும், 2020ஆம் ஆண்டிற்குள் மின்னணுத் துறையில் ‘இறக்குமதியே இல்லாத’ நிலை என்ற இலக்கை நோக்கிச் செல்லவும் வழியேற்படுத்த திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை முறையில் திருத்தம் கொண்டு வருவதற்கான ஒப்புதலை வழங்கியது.
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜார்க்கண்டில், இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘ஜார்க்கண்ட் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்(ஐ.ஏ.ஆர்.ஐ.) அமைத்தலுக்கான விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை/இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமம் (டீ.ஏ.ஆர்.ஈ./ஐ.சி.ஏ.ஆர்.) திட்டத்தின் 12வது திட்ட முன்மொழிவிற்கு தனது ஒப்புதலை அளித்தது. ஜார்க்கண்ட் அரசு, ஹசரிபாக், பார்ஹி வட்டாரம், கவுரிய கர்மா கிராமத்தில் வழங்கிய 1,000 ஏக்கர் நிலத்தில் ரூ.200.78 கோடி (100% ஐ.சி.ஏ.ஆர். பங்களிப்பு) மதிப்பீட்டில் இந்நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
ஐ.ஏ.ஆர்.ஐ.-ஜார்க்கண்ட், தள பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், விவசாய-வனம், கால்நடை, மீன்வளம், கோழி வளர்ப்பு, பன்னி வளர்ப்பு, பட்டுப்புழு மற்றும் அரக்கு வளர்ப்பு, தேன் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விவசாய துறைகளையும் தனியம்சங்களாக கொண்டுள்ள புதுதில்லி ஐ.ஏ.ஆர்.ஐ. போன்ற உயரிய நிறுவனமாக விளங்கும்.
சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு ஆதரவு தருவதற்காக, கடன் உத்தரவாத நிதியம் அமைப்பு.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு ஆதரவு தருவதற்காக, கடன் உத்தரவாத நிதியம் ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
பெரு நாட்டுடன் வணிக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பெரு நாட்டுடன் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பெரு நாட்டுடன் வணிக உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இந்தியா மற்றும் பெரு இடையே கூட்டு ஆய்வுக் குழு 2015, ஜனவரி 15 அன்று அமைக்கப்பட்டது. இரு தரப்பும் கூட்டு ஆய்வுக் குழு அறிக்கையை 2016, அக்டோபர் 20 அன்று இறுதி செய்ததுடன், சேவைகள் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்த செல்லவும் ஒப்புக் கொண்டுள்ளன.
இணைய பாதுகாப்பு தொடர்பாக இந்தியா மற்றும் வியட்நாம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வியட்நாம் இடையே, இணைய பாதுகாப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்திய கணிணி அவசர பாதுகாப்புக் குழு மற்றும் பொது பாதுகாப்பு, இணைய பாதுகாப்புத் துறை, வியட்நாம் இடையே 3 செப்டம்பர் 2016 அன்று ஹானோய் நகரில் கையெழுத்தானது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடையே விண்வெளி ஆராய்ச்சியல் ஒத்துழைப்பு தொடர்பாக ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம், 11 நவம்பர் 2016 அன்று ஜப்பான் டோக்யோவில் கையெழுத்தான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தும் குறித்து விளக்கப்பட்டது.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இளைஞர் நலனில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இளைஞர் நலன் தொடர்பாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடக்கும் பரிமாற்றங்கள், புதிய யோசனகளை பரிமாறிக் கொள்ளுதல், கலாச்சாரங்கள் மற்றும் மதிப்பீடுகளை பரிமாறிக் கொள்ளுதல், மற்றும் மக்களோடு நேரடி தொடர்பை வலுப்படுத்தி, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உறவை மேம்படுத்த உதவும்.
தென் கொரியாவின் சர்வதேச தடுப்பூசி மருந்து நிலையத்தில் இந்தியா உறுப்பினரானதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, தென் கொரியாவின் சர்வதேச தடுப்பூசி மருந்து நிலையத்தின் நிர்வாகக் குழுவில் முழு உறுப்பினரானதற்கு ஒப்புதல் அளித்தது. இவ்வாறு உறுப்பினரானதற்காக இந்தியா அந்த நிலையத்திற்கு 5,00,000 டாலர்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் செர்பியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் செர்பியா இடையே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு வட்டி மானியம் அளிக்கும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (கிராமப்பகுதி) கீழ் இல்லாமல் கட்டப்படும், ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் வட்டி மானியம் வழங்கப்படும்.
ஜனவரி 24 2017
நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு வட்டி மானியம் அளிக்கும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (கிராமப்பகுதி) கீழ் இல்லாமல் கட்டப்படும், ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் வட்டி மானியம் வழங்கப்படும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக ஐ.ஐ.எம்-கள் அறிவிக்கப்படும்
இந்திய மேலாண்மை கல்வி நிறுவன மசோதா 2017-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய மேலாண்மை கல்வி நிறுவன (ஐ.ஐ.எம்.) மசோதா 2017-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ஐ.ஐ.எம் - கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும். இதனால், ஐ.ஐ.எம் - களால் தங்களது மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியும்.
கூட்டுறவு வங்கிகளில் குறுகிய கால கடன் பெற்ற விவசாயிகளுக்கு 2016ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக நபார்டுக்கு வட்டிச் சலுகை அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கூட்டுறவு வங்கிகளில் குறுகியகால பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 2016ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்க, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதலை பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் அளித்தது. மேலும், கூட்டுறவு வங்கிகளுக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) கூடுதல் நிதி அளிக்கும் வகையில், நபார்டுக்கு வட்டிச் சலுகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாட்னாவில் உள்ள ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம்/மேம்பாட்டுப் பணிக்காக பீகார் அரசின் 11.35 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் பரிமாறிக்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு 11.35 ஏக்கர் நிலத்தை, அனிசாபாத்தில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிலத்துக்கு இணையாக பகிர்ந்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாட்னா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிலம், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய முனைய கட்டிடத்துடன் அதுதொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தை பரிமாறிக் கொள்வதற்கு மாநில அரசும் கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா. வரம்பிற்குட்பட்ட மாநாட்டில் கியோட்டோ உடன்படிக்கையின் இரண்டாவது வாக்குறுதி கால வரம்பை ஏற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான கியோட்டோ உடன்படிக்கையின்கீழ், இரண்டாவது வாக்குறுதி கால வரம்பை ஏற்றுக் கொள்வதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கியோட்டோ உடன்படிக்கையின் கீழ், இரண்டாவது வாக்குறுதி கால அளவு, 2012-ம் ஆண்டில் இறுதிசெய்யப்பட்டது. இதுவரை இரண்டாவது வாக்குறுதி கால அளவை 65 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டு திட்டம் - 2017
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்-2017-க்கு (Varishtha Pension Bima Yojana 2017 - VPBY 2017) செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக பாதுகாப்புக்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக குறுகிய கால கடனை நபார்டு பெறுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் முடிவுகளுக்கு செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
- கூட்டுறவு வங்கிகளுக்கு 4.5% வட்டியில் கடன் வழங்குவதற்காக தற்போதைய சந்தை மதிப்பிலான வட்டியில், சராசரியாக ரூ.20,000 கோடியை குறுகிய கால கடனாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) வாங்கும்.
- இந்த நோக்கத்துக்காக மத்திய அரசின் பட்ஜெட் மூலம், நபார்டு-க்கு கூடுதலாக ரூ.2,000 கோடி மூலதனம் வழங்கப்படும். இதன் தொடக்கமாக, நபார்டுக்கு 2016-17-ம் நிதியாண்டிலேயே ரூ.500 கோடி கூடுதல் மூலதனம் வழங்கப்படும்.
- வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் (DAC&FW) துறையின் திட்டத்தின் கீழ், 1.8% வட்டி மானியமும், நபார்டின் நிர்வாக செலவுகளுக்காக 0.2%-ம் வழங்கப்படும். நபார்டு வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தைப் பொறுத்து, வட்டி மானியத்தின் அளவு அதிகரிக்கப்படும்.
- செயல்பாட்டில் உள்ள விவசாயிகள் கடன் அட்டைகளை ரூபே அட்டைகளாக அல்லது ஏடிஎம் அடிப்படையிலான விவசாயிகள் கடன் அட்டைகளாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் மாற்றுவதற்கு தேவையான ஒருங்கிணைப்பை நபார்டு அளிக்கும்.
பிப்ரவரி 01, 2017
பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்படி, கடன் இணைந்த மானிய திட்டத்தில் (CLSS) கடன்களில் காலக்கெடு 15 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2017ம் ஆண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல். கர்னூல் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இந்திய நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்படும்.
ஒடிசா மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான (i) 1950ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினர் அரசியல் சட்ட ஆணை திருத்தத்திற்கும் (ii) பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயரை புதுச்சேரி என்று மாற்றுவதற்கான 1964ம் ஆண்டு அரசியல் சட்ட புதுச்சேரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணையின் திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிப்ரவரி 08, 2017
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனை துறைகளில் இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து மத்திய அமைச்சரவையில் தகவல் தெரிவிப்பு
6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி புகட்ட பிரதம மந்திரி கிராமீன் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி அளிக்கும் நோக்கம் கொண்ட பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019 மார்ச் மாதத்திற்குள் இந்திய கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியைப் புகட்டுவதற்காக இந்த திட்டத்துக்கு ரூ. 2,351.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2016-17 உரையில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பையொட்டி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15 2017
புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008 (2009-ல் 7)-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள செயற்கைக்கோள் மையங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்தின் அம்லாஹா பகுதியில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ. அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிப்ரவரி 22, 2017
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மார்ச் 06, 2017
சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான சுங்க உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டி.ஐ.ஆர். உடன்படிக்கையின் கீழ், சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான சுங்க உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்வதற்கும், இதனை செயல்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை செய்து முடிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உணவு கொள்முதல் நடவடிக்கைகள் – விருப்ப கடன் கணக்குகளை தீர்ப்பதற்காக (2014-15 அறுவடை காலம் வரை) பஞ்சாப் மாநிலத்துக்கு உணவு ரொக்க கடன் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உணவு கொள்முதல் செயல்பாடுகளுக்காக பஞ்சாப் மாநில அரசுக்கு விருப்ப உரிமை அடிப்படையிலான உணவு ரொக்க கடன் கணக்குகளை (2014-15 அறுவடை காலம் வரை) தீர்ப்பதற்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது. செலவுகள் துறையின் இந்த பரிந்துரைக்கு (வர்த்தக பரிமாற்றம்) விதிகள் 1961-ன் 12-வது விதியின் கீழ், ஜனவரி 2, 2017-ல் பிரதமர் ஒப்புதல் அளித்தார்.
இந்திய பாதுகாப்பு பெட்ரோலிய கையிருப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே எண்ணெய் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் குரூப் ஏ மத்திய பொறியியல் சேவை (சாலைகள்) பணிப் பிரிவை மறுஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல்
பிப்ரவரி 15, 2017
2017 ஜனவரியிலிருந்து கொடுக்கப்பட வேண்டியிருந்த கூடுதலான 2 சதவீத அகவிலைப்படி/அகவிலை நிவாரணத் தொகையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத் தொகையை 01.01.2017 முதல் வழங்குவதற்கான அனுமதியை வழங்கியது. விலைவாசி உயர்வினை ஈடுகட்ட தற்போதுள்ள அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 2 சதவீதத்திற்கு மேல் 2 சதவீதத்தை அதிகரிப்பதாக இது அமையும்.
15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பொது-தனியார் பங்கேற்பு) மசோதா, 2017 –க்கு அமைச்சரவை ஒப்புதல்
வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்களிலிருந்து சிறப்பு விலக்கு மற்றும் போலாவரம் திட்டத்தின் பாசன கூறிற்கு நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஆந்திரபிரதேசத்திற்கு சிறப்பு நிதியுதவி நடவடிக்கை
முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாகத்திற்கான தேசிய அகடாமி (எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ.) மற்றும் நமீபியாவின் நமீபியா பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.ஏ.எம்.) இடையே திறன் வளர்ப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான வழிசெலுத்துதலுக்கான உதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய அரசு, கப்பல் அமைச்சகம், கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை ஒளிகப்பல் இயக்குநரகம் மற்றும் வங்காளதேச அரசு, கப்பல் துறை இடையே வழிசெலுத்துதலுக்கான உதவிகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு ஒப்புதல் அளித்தது.
மார்ச் 20, 2017
ஜி.எஸ்.டி. மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜி.எஸ்.டி. தொடர்பான பின்வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது :
1. மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா 2017 (சி.ஜி.எஸ்.டி மசோதா)
2. ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா 2017 (ஐ.ஜி.எஸ்.டி மசோதா)
3. யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா 2017 (யூ.டி..ஜி.எஸ்.டி மசோதா)
4. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) மசோதா 2017 (இழப்பீட்டு மசோதா)
மார்ச் 22, 2017
குழந்தைகளுக்கான இலவச - கட்டாயக் கல்விச் சட்டத்தில் (2009) திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல அளித்தது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் (2009) திருத்தம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் அனைத்து ஆசிரியர்களும் கல்விக் குழுக்கள் வரையறுத்துள்ள குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்றிருக்கவும், அதற்காகப் பயிற்சி பெறும் காலத்தை 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் நீடிக்கவும் இந்தத் திருத்தம் உறுதி செய்கிறது.
இந்திய வர்த்தக பணியில் (ITS) உள்ள அதிகாரிகளுக்கு (SAG) முதுநிலை நிர்வாக நிலையை அளித்து பணி உயர்வு தருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
‘தொழில் தொடங்குவோம்’ திட்டத்துக்கான நிதிக்கு நிதியை உருவாக்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.1,000 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்ட ‘தொழில் தொடங்குவோம்’ இயக்கத்திற்கான நிதியத்திற்கு நிதி (Fund of Funds of Start-ups - FFS) திட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள கீழ்க்காணும் பரிந்துரைகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்துவதற்கு வசதியாக, பல்வேறு சரக்கு மற்றும் சேவைகளுக்கான மேல் வரி மற்றும் கூடுதல் வரியை நீக்கும் வகையில், சுங்கம் மற்றும் கலால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மார்ச் 31, 2017
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறைந்தபட்ச வயதிற்கான சாசனம், 1973 (எண் 138) மற்றும் மோசமான குழந்தை தொழிலாளர் வடிவங்கள் சாசனத்தின் பகுதிகள், 1999 (எண்.182) ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கம்பெனிகள் (திருத்த) மசோதா, 2016 -ல் அதிகாரப்பூர்வ சட்ட திருத்தங்களை முன்வைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
கம்பெனிகள் (திருத்த) மசோதா, 2016 -ல் அதிகாரப்பூர்வ சட்ட திருத்தங்களை முன்வைப்பதற்கான முன்மொழிவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.
ஏப்ரல் 05, 2017
பெல்மாண்ட் மன்ற செயலகத்தை ஆதரிக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015 ஜனவரி முதல் 2017 டிசம்பர் வரை பெல்மாண்ட் மன்ற செயலகத்தை 40,000 யூரோ செலவில் ஆதரிக்கும் பிரெஞ்சு தேசிய ஆராய்ச்சி நிறுவனத்துடனான (ANR), கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2017க்கு பிறகும் பெல்மாண்ட் மன்ற தலைமைச்செயலகத்திற்கு பொருளாதார ஆதரவு அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாத்மா காந்தி வெளிநாடு வாழ் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குடியுரிமை சரிபார்த்தல் தேவைப்படும் நாடுகளில் வேலைவாய்ப்பிற்காக செல்லும் குடியுரிமை சரிபார்த்தல் தேவைப்படும் (இ.சி.ஆர்.)-பிரிவினர் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வெளிநாடு வாழ் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட ஒப்புதல் அளித்தது.
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான மரபு வழிதடத்தில், குஷியாரா ஆற்றில் அஷீகன்ஜ்-ஜகிகன்ஜ் தடத்திலும் மற்றும் ஜமுனா ஆற்றில் சிராஜ்கன்ஜ்-தாய்காவா தடத்திலும் பொதுவழியை உருவாக்கிட இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஏப்ரல் 12, 2017
அரசு மின்னணு சந்தைப் பகுதி என்ற பெயரில் சிறப்பு துணை நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
கான்பூர் விமானப்படை நிலையத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளிக்கட்டிடம் அமைப்பதற்கு 6.5628 ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தை கேந்திரீய வித்யாலயா சங்கதனுக்கு குத்தகை அடிப்படையில் மாற்றி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கான்பூர் விமானப்படை நிலையத்தின் கேந்திரீய வித்யாலயா பள்ளிக்கட்டிடம் அமைப்பதற்கு 6.5628 ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தை கேந்திரீய வித்யாலயா சங்கதனுக்கு குத்தகை அடிப்படையில் மாற்றி தர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலம் பள்ளிக்கட்டிடம் மற்றும் தொடர்புடைய அடிப்படை வசதிகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும். கான்பூரின் விமானப்படை நிலையத்தின் கேந்திரீய வித்யாலயாவுக்கு 8.90 ஏக்கர் பாதுகாப்பு நிலத்தை மாற்றித் தர 16.6.2011 ல் எடுத்த முடிவை சிறிது மாற்றியமைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா, துனிசியா இடையே நீதித்துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஏப்ரல் 19, 2017
இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான இந்தியா போர்த்துகல் ஒப்பந்தத்தை திருத்தும் நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1991 டிசம்பர் 30 க்கும் 1999 நவம்பர் 29 க்கும் இடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் முடித்திருந்த நிலையில் மரணம் அடைந்த அல்லது பணிக் காலத்தில் உடல் ஊனமடைந்த சிலவகை பாதுகாப்பு சேவைகள் பணியாளர்களின் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்ட விடுமுறையை ரொக்கம் ஆக்கிக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
1991 டிசம்பர் 30க்கும் 1999 நவம்பர் 29க்கும் இடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் முடித்திருந்த நிலையில் மரணம் அடைந்த அல்லது பணிக் காலத்தில் உடல் ஊனமடைந்த சில பாதுகாப்பு சேவைகள் பணியாளர்களின் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்ட 180 நாட்கள் வரையிலான விடுமுறையை ரொக்கம் ஆக்கிக்கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2019-ம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக வாக்காளர் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் கருவிகளை கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக, எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் (Voter Verifiable Paper Audit Trail - VVPAT) இயந்திரங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முக்கிய கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வெளிநாட்டு இருதரப்பு அமைப்புகளிடமிருந்து நிதியுதவியை மாநில அரசின் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மே 03, 2017
ரயில்வே பாதுகாப்பில் இந்தியா-ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயி்ல்வே பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பு கடந்த, கடந்த பிப்ரவரி 2017-ல் கையெழுத்திடப்பட்டது.
ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் மாற்றங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கான 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, மாற்றங்களைச் செய்வதுதொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கடந்த ஜூன் 2016-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், மத்திய அரசுக்கு 2016-17-ல் கூடுதலாக ரூ.84,933 கோடி (2015-16-ம் ஆண்டில் 2 மாதங்களுக்கான நிலுவைத் தொகை உள்பட) கூடுதல் செலவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மலேசியாவில் யூரியா உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மலேசியாவில் யூரியா மற்றும் அமோனியா உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் உற்பத்தியாகும் யூரியா இந்தியாவுக்கே கொண்டுவரப்படும் மற்றும்/அல்லது மலேசியாவில் ஏற்கனவே கூடுதலாக உள்ள யூரியா இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.
அரசின் இரும்பு மற்றும் உருக்கு கொள்முதலில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசின் கொள்முதலில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரும்பு மற்றும் உருக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்துக்கும் 2011-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், அதனை புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனத்துக்கும் (ICAI), ஐக்கிய அரசு எமிரேட்டுகளின் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கும் (HCT) இடையே கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கேரளாவின் திருச்சூரில் அஞ்சல் துறைக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடத்தை பத்தளம் சாலை விரிவாக்கப்பணிக்காக திருச்சூரில் மாநகராட்சிக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரளாவின் திருச்சூரில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 16.5 சென்ட் நிலம் மற்றும் கட்டிடத்தை பத்தளம் சாலை விரிவாக்கத்துக்காக திருச்சூர் மாநகராட்சிக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுநலன் கருதி, நிலத்துக்கு நிலம் பரிமாற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், நிலம் ஒப்படைக்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விமானப் போக்குவரத்து அமைப்பில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஸ்பெயின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-ன்படி விஜயவாடா விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கை செய்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ராணுவக் கல்வியில் ஒத்துழைப்புக்காக வெலிங்டன் பாதுகாப்பு படை சேவைகள் அலுவலர் கல்லூரிக்கும், டாக்கா, மிர்பூர் பாதுகாப்புப் படை கமாண்ட் மற்றும் அலுவலர் கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ராணுவக் கல்வியில் போர்த்திறன் சார்ந்த மற்றும் செயல்பாடுகள் துறை படிப்புகள் தொடர்பாக ஒத்துழைப்புக்காக வெலிங்டன் பாதுகாப்பு படை அலுவலர் கல்லூரிக்கும், டாக்கா, மிர்பூர் பாதுகாப்புப் படை கமாண்ட் மற்றும் அலுவலர் கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செயல்பாட்டுக்குப் பிந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தமாக இந்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
2017ம் ஆண்டு தேசிய எஃகு உருக்கு கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
தொலைநோக்குப் பார்வையின் நல்விளைவாகும் புதிய கொள்கை
உள்நாட்டுப் பயன்பாட்டையும் தரமான உலோக உற்பத்தியையும் அதிகரித்து உலக அளவில் போட்டியிடும் ஆற்றல் பெற இலக்கு
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தேசிய உருக்கு கொள்கைக்கு (2017) ஒப்புதல் அளிக்கப்ப்டடது.
வங்கதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மூன்றாவதாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வங்கதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மூன்றாவதாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதலாக இது அளிக்கப்பட்டது.
மே 17, 2017
அடிப்படை குறைப்பு மற்றும் வருவாய் மாற்றுதலைத் தவிர்ப்பதற்கான வரி உடன்பாட்டை செயல்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அடிப்படை குறைப்பு மற்றும் வருவாய் மாற்றத்தை (base erosion and profit sharing – BEPS) தவிர்ப்பதற்காக வரி தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்தும் வகையிலான பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு/ஜி20-ன் நடவடிக்கையால் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெப்ஸ் திட்டம் என்பது, வரி விதிகளில் உள்ள வேறுபாடுகளையும், இடைவெளியையும் மாற்றுவதற்காக செயற்கையாக வருவாயை குறைந்த வரி அல்லது வரியில்லாத (குறைந்த அல்லது பொருளாதார நடவடிக்கைகள் இல்லாத) பகுதிகளுக்கு மாற்றுவதாகும். இதன் காரணமாக, குறைந்த வரி அல்லது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தப்படாத நிலை ஏற்படும்.
உள்நாட்டு அணுசக்தி தொழில் துறையின் மாற்ற நடவடிக்கைக்கு ஊக்குவிப்பு
இந்திய தொழில்நுட்பத்தில் அழுத்த கனநீர் அணுஉலைகளின் 10 பிரிவுகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவின் உள்நாட்டு அணுமின் சக்தி திட்டங்களை விரைவுபடுத்தவும், நாட்டின் அணுசக்தி தொழில் துறையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் அழுத்த கனநீர் அணுஉலைகளின் (Pressurized Heavy Water Reactors - PHWR) 10 பிரிவுகளை அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அணுஉலைகளின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி திறன் 7,000 மெகாவாட்டாக இருக்கும். 10 அழுத்த கனநீர் அணுஉலை திட்டத்தின் மூலம், அணு மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்க வழி ஏற்படும்.
சர்வதேச பயங்கரவாதம், நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதில் இந்திய – ஆஸ்திரேலியா நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
சர்வதேச பயங்கரவாதம், நாடுகடந்த குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக இந்திய – ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் உடனடி ஒப்புதல் அளித்தது.
தில்லி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி - டாக்கா தேசிய பாதுகாப்புக் கல்லூரி இடையில் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரிக்கும், வங்க தேசம் டாக்கா தேசிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரிக்கும் இடையில் ஆசிரியர்களி்ன் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக கையெழுத்தான உடன்பாட்டுக்கு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை உடனடி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் மகப்பேறு நன்மைத் திட்டச் செயல்பாட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 01.01.2017 முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மகப்பேறு நன்மைத் திட்டத்திற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது. 31.12.2016 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கான உரையின்போது, மகப்பேறு நன்மைத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடவும், பின்னேற்பிற்கும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வுப் பகுதிகள், அழிபாட்டுச் சின்னங்கள் சட்டம்-1958-ல் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வுப்பகுதிகள், அழிபாட்டுச் சின்னங்கள் (திருத்த) மசோதா – 2017-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மே 24, 2017
மத்திய சாலை நிதியிலிருந்து 2.5 சதவிகித நிதியை தேசிய நீர்வழிகளுக்கு ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். மத்திய சிலை நிதி சட்டம் 2000த்தில் திருத்தம்
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை இணைந்து, மத்திய சாலை நிதியிலிருந்து 2.5 சதவிகித நிதியை தேசிய நீர்வழிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்காக மத்திய சாலை நிதி சட்டம் 2000த்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் விடுத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த கோரிக்கை நிதி தேசிய நீர்வழிகளை பராமரிப்பதற்கான நிதிக்காகவும், தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதியின் அளவை குறைப்பதற்காகவும் வைக்கப்பட்டது. தேசிய நீர்வழி திட்டங்களை செயல்படுத்துகையில் தனியார் அரசு கூட்டு திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தனியார் முதலீடு இல்லாத நேர்வுகளில் மட்டுமே அரசு நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்தது.
அசாம் மாநிலம், காம்ரூப் நகரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அஸ்ஸாம் மாநிலம், காம்ரூப் நகரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 1123 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த கல்வி நிலையம் பிரதம மந்திரி சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
ஸ்பெயின் இந்தியா இடையே உறுப்பு மாற்று சிகிச்சை சேவைகள் தொடர்பாக ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தேசிய உறுப்பு மாற்று நிறுவனம், சுகாதாரத் துறை அமைச்சகம், சமூக சேவை மற்றும் சமத்துவம், ஸ்பெயின் மற்றும் இந்தியாவின், குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறையின், சுகாதாரத் துறை இயக்குநர் இடையே உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ஒத்துழைப்புக்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தை படிப்படியாக கலைக்க ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு, முதலீடு வாரியத்தை முழுமையாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் அந்நிய முதலீடுகளை அரசு ஒப்புதலுக்கு நேரடியாக அனுப்ப வகை செய்யும்.
மாற்று மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய ஜெர்மனி நாடுகளிடையே கூட்டு உடன்படிக்கை
கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளிடையே மாற்று மருத்துவம் தொடர்பான கூட்டுப் பிரகடனத்துக்கு ஒப்புதல் அளித்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக 2360 கோடி பத்திரங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக 2360 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது.
நொய்டாவில் மெட்ரோ திட்டத்தில் முன்னேற்றம் – நொய்ட பெருநகர மெட்ரோ ரயில் திட்டம்
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 29.07 கிலோ மீட்டர் தொலைவிலான நொய்டா பெருநகர மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கான மொத்த செலவு ரூ5,503 கோடியாகும்
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே விண்வெளி ஆராச்சியில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு விளக்கம்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2017ல், புது தில்லியில் கையெழுத்தானது.
மேக் இன் இந்தியா திட்டத்துக்கான கொள்முதல்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை முக்கிய கொள்கை முடிவு.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு நிறுவனங்களின் தேவைக்காக கொள்முதல்கள் செய்வதில் மேக் இன் இந்தியா தொடர்பாக முக்கிய கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த புதிய கொள்கை உள்நாட்டு உற்பத்திக்கு பெரிய ஊக்கம் கொடுத்து வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்பத்தை வளர்த்து முதலீடுகளையும் அதிகரிக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கத்தின் அடிப்படையில், உபகரணங்கள், உதிரி பாகங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் முக்கிய உந்துசக்தியாக இருக்கும்.
ஜுன் 07, 2017
குஜராத் மாநிலம் வாசாதில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் 4.64 ஹெக்டேர் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாற்றித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் வாசாதில் உள்ள வேளாண் ஆராய்ச்சி இந்திய மையத்தின் இந்திய மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் 4.64 ஹெக்டேர் (46, 384 சதுர மீட்டர்) நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாற்றித்தர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. தேசிய நெடுஞ்சாலை 8 – ல் அகமதாபாத் – வடோதரா நெடுஞ்சாலைப் பகுதியை ஆறுவழிச் சாலையாக மாற்றி விரிவு படுத்துவதற்காக இந்த நிலம் ரூ. 12.67 கோடி விலைக்கு மாற்றத் தரப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை வாரியத்துக்கும் ஐரோப்பிய பங்குகள் மற்றும் சந்தைகள் ஆணையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்திய பங்குச்சந்தை வாரியத்துக்கும் ஐரோப்பிய பங்குகள் மற்றும் சந்தைகள் ஆணையத்திற்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும் சோமாலியாவுக்கும் இடையே தண்டனை பெற்ற நபர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியாவுக்கும் சோமாலியாவுக்கும் இடையே தண்டனை பெற்ற நபர்களைப் பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் தொடர்ந்து அதனை உறுதி செய்வதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும் மாலிக்குமிடையே மதிப்பீடுகளை தரப்படுத்தி உறுதிப்படுத்துவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியாவின் தரங்கள் நிறுவனத்திற்கும் மாலி குடியரசின் தரம் மற்றும் உறுதிப்படுத்துதல் மதிப்பீட்டு அமைப்புக்கும் இடையே மதிப்பீடுகளை தரப்படுத்தி உறுதிப்படுத்துவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் ஈரானின் பங்குகள் பரிவர்த்தனை அமைப்புக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்jத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பங்குச் சந்தைகள் தொடர்பான விசயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பட வழிசெய்யப்ப்ட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சைப்ரசுக்கும் இடையே வணிகக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியாவுக்கும் சைப்ரசுக்கும் இடையே வணிகக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்து இந்த ஒப்பந்தம் 2017 ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்டதாகும்.
இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையே 900 கோடி அமெரிக்க டாலர் ஏற்றுமதி கடனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கிக்கும் கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையே 900 கோடி அமெரிக்க டாலர் ஏற்றுமதிக் கடனுக்கான உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மூன்றாம் நாடுகளின் திட்டங்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வழங்கும் வகையில் இந்திய அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
குவஹாத்தி, டாக்டர்.பீ.போரா புற்றுநோய் மருத்துவமனையை அணுசக்தித் துறை ஏற்று நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டாடா நினைவு மருத்துவமனை நிர்வாக கட்டுப்பாட்டை நிர்வகிக்கும்
மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் உதவி நிலைகளில் 166 பணியிடங்கள் உருவாக்கப்படும்
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கூடிய மத்திய அமைச்சரவை கீழ்க்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:
(i) குவஹாத்தி, டாக்டர்.பீ.போரா புற்றுநோய் மருத்துவமனையை அணுசக்தித் துறை ஏற்று நடத்துதல் மற்றும் அதன் நிர்வாக கட்டுப்பாட்டை, அணுசக்தித் துறையின் உதவி பெறும் டாடா நினைவு மருத்துவமனையின் கீழ் கொண்டு வருதல்;
(ii) மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் உதவி நிலைகளில் 166 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கி மேம்படுத்துதல்.
ஜுன் 14, 2017
விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்க்கடன் வழங்குவதற்காக வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2017-18-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில், ரூ.3 லட்சம் வரை குறுகிய காலக் கடன் பெறும் விவசாயிகள், ஆண்டுக்கு 4% வீதம் மட்டுமே வட்டி செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்துக்காக ரூ.20,339 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
இந்தியா-பாலஸ்தீனம் இடையே வேளாண் துறை ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வேளாண்மையில் ஒத்துழைப்புக்காக இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துக்கும், பாலஸ்தீன அரசின் வேளாண்மை அமைச்சகத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017-ஐ அறிமுகம் செய்யும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
நிதித் தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா 2017-ஐ அறிமுகம் செய்யும் மத்திய அரசின் திட்டத்துக்கு திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை எதிர்கொள்வதற்கு குறிப்பிட்ட நிதித்துறை நிறுவனங்களுக்கு விரிவான தீர்வு வழிமுறையை இந்த மசோதா ஏற்படுத்தும்.
இளைஞர்கள் விவகாரத்தில் ஒத்துழைப்புக்காக இந்தியா, ஆர்மேனியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் விவகாரத்தில், ஒத்துழைப்புக்காக இந்தியா, ஆர்மேனியா இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியா - வங்காளதேசம் இடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா-வங்காளதேசம் இடையே ஏற்கனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜுன் 22, 2017
இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் செய்யும் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (SSA) ``வாழ்ந்துவரும் நாடு'' என்ற கோட்பாட்டை சேர்ப்பதற்கான திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நீர்வள மேலாண்மைத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், இந்தியாவின் நீர்வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சகத்துக்கும், நெதர்லாந்து அரசின் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையில், நீர்வள மேலாண்மை குறித்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும் போர்த்துகல்லுக்கும் இடையில் பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசாங்கத்தின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறைக்கும், போர்த்துகீசிய குடியரசு அரசாங்கத்தின் பிரசிடென்சி மற்றும் நிர்வாக நவீனமயமாக்கல் அமைச்சகத்துக்கும் இடையில், `பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் ஒத்துழைப்புக்காக' புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படை பொருள்வகை மேலாண்மை சேவையை (INMMS) ஒழுங்குபடுத்திய `A' குரூப் பொறியியல் சேவையாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குரூப் `A' பொறியியல் சேவை என்ற ஒழுங்குபடுத்திய பிரிவை, இந்திய கடற்படை பொருள்வகை மேலாண்மை சேவையை (INMMS) என்ற பெயர் கொண்ட பிரிவை உருவாக்கவும், அதன் தொடர்ச்சியாக இந்திய கடற்படையின் கடற்படை ஸ்டோர் அதிகாரிகள் பிரிவில் தற்போதுள்ள குரூப் `A' பணிநிலையில், பணிநிலை அமைப்புமுறையில் மாற்றங்கள் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் ஜவுளி, துணிகள் மற்றும் பேஷன் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் , ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறை மற்றும் இந்திய ஜவுளி அமைச்சகம் இடையே ஜவுளி, துணிகள் மற்றும் பேஷன் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளித்தது.
விண்வெளியை அமைதிவழி தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளியை அமைதிவழி தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்தியக் குடியரசு அரசின் ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்துக்கும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு அரசின் சுகாதாரம், சத்துணவு மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு அளித்தமைக்காக மாநில முதல்வர்கள் மற்றும் பிறருக்கு மத்திய அமைச்சரவை நன்றி
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்தய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு அளித்தமைக்காக மாநில முதல்வர்கள் மற்றும் பிறருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜுன் 28, 2017
இந்தியாவில் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய பிரச்சாரம் தொடர்பாக இஸ்ரேல் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவில் நீர் பாதுகாப்பு ./ சேமிப்பு குறித்த தேசிய பிரச்சாரம் தொடர்பாக இஸ்ரேல் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு நீர் பாதுகாப்பு என்ற பெரும் பயனை வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இந்தியா அமெரிக்கா இடையே உள்நாட்டு பாதுகாப்புகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா இடையே உள்நாட்டு பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 12, 2017
வாரணாசியில் உள்ள தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வாரணாசியில் உள்ள தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின், தெற்காசிய பிராந்திய மையத்தை (ISARC) அமைக்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உடன்பாடு, மே 16, 2017-ல் கையெழுத்தானது.
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா – ஜெர்மனி இடையேயான கூட்டு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா – ஜெர்மனி இடையேயான விருப்ப கூட்டு உடன்படிக்கையை (Joint Declaration of Intent) கையெழுத்திட, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கூட்டு உடன்படிக்கை ஜூன் 1, 2017-ல் கையெழுத்தானது.
முதலீடுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா-வங்காள தேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கான கூட்டு விளக்க குறிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
முதலீடுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா – வங்காளதேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்த கூட்டு விளக்க குறிப்புகளுக்கு (Joint Interpretative Notes - JIN), பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ்க்காணும் வகைகளில், ஓய்வுவயதை உயர்த்த செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ. மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையில், பணியில் ஈடுபட்டுள்ள (General Duty) மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 65 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.
ஆ. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 65 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.
இணையதள பாதுகாப்பில் ஒத்துழைப்புக்காக இந்தியா-வங்காள தேசம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்பாடு, மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைப்பு
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இணையதள பாதுகாப்புக்காக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்பாடு எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலை செயல்பாட்டு குழு-வுக்கும் (CERT-In), வங்காளதேசத்தின் தபால், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் வங்காளதேச கணினி கவுன்சில் பிரிவில் உள்ள வங்காளதேச அரசு கணினி வழி செயல்பாட்டுக் குழுவுக்கும் (BGD e-Gov CIRT) இடையே உடன்பாடு கையெழுத்தானது. ஏப்ரல் 8, 2017-ல் இந்த புரிந்துணர்வு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா-வில் அமைக்கப்படும் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று இயக்குநர்கள் பணியிடங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி, மேற்குவங்கத்தில் கல்யாணி, மகாராஷ்டிராவில் நாக்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 3 புதிய இயக்குநர்கள் பணியிடங்களை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இயக்குநர்களின் சம்பளம், ரூ.80,000 (நிலையானது) (கூடுதலாக, வெளியில் மருத்துவம் பார்க்காமல் இருப்பதற்கான படி (NPA) அதிகபட்சம் ரூ.85.000).
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவைக்கு எடுத்துரைப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு, எடுத்துரைக்கப்பட்டது.
ஜுலை 19, 2017
இந்தியாவுக்கும் பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வரி விவகாரம் குறித்த ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளான பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் வருவாய் நிர்வாகத் துறைகளுக்கும் இடையே வரி விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு உடன்பாடு ஏற்படுவதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்திய பாதுகாப்புக் கணக்குச் சேவையில் பணிநிலை ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்புக் கணக்குத் துறையில் பணிகள் நிலை குறித்த ஆய்வுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு புதிதாக 23 பணியிடங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் ஒரு பணியிடம் பெரிய பதவியாக இருக்கும்.
இந்திய பாதுகாப்புக் கணக்குச் சேவையில் பணிநிலை ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்புக் கணக்குத் துறையில் பணிகள் நிலை குறித்த ஆய்வுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு புதிதாக 23 பணியிடங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் ஒரு பணியிடம் பெரிய பதவியாக இருக்கும்.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகம் சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் சங்கத்தில் இடம்பெறவும் பலதரப்பு புரிந்துணர்வு உடன்பாடுகளில் பங்கேற்கவும் அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகத்திற்கு (IRDAI) சர்வதேச காப்பீட்டு நிறுவன மேற்பார்வையாளர்கள் சங்கத்தில் (IAIS) கையெழுத்துதாரராகப் பங்கேற்கவும், பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MMoU) இடம்பெறவும் அனுமதிப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் 2017-18ம் ஆண்டில் ரூ. 600 கோடி கடன்பத்திரங்களை வெளியிட வகை செய்யும் கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்கான திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அந்தக் குழு, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக 2017-18ம் ஆண்டில் மொத்தம் ரூ. 660 கோடி மதிப்புக்கு கடன்பத்திரங்களை வெளியிட வகை செய்யும் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) சட்ட முன்வடிவுக்கு (2017) மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) மசோதாவுக்கு (2017) மாற்றுவதற்கும் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜம்மு காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது) அவசரச் சட்டத்தை (2017) முன்தேதியிட்டு அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கு அமைச்சரவை ஒப்புதல்
ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜம்மு - காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்ட) அவசர சட்டம் 2017-க்கும் இந்த சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய சமூக நல நிதியத்தின் வழிகாட்டு நெறிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு இந்திய சமூக நல நிதியத்தின் (ICWF) வழிகாட்டு நெறிகளில் சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜுலை 26, 2017
அரசியல் சாசன உத்தரவில்-1954 (ஜம்மு-காஷ்மீருக்குப் பொருத்துவது)
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் சாசன (ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக் கூடியது) உத்தரவில் (1954) திருத்தம் கொண்டுவதற்காக, 2017ம் ஆண்டு அரசியல் சாசனத் திருத்தம் (ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக் கூடியது) திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இளைஞர் நலன் – விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்திய பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியா – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயல்பட வகை செய்யும்.
இந்திய – ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான விருப்பக் கூட்டு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது. இந்தியா ஜெர்மனி நாடுகளுக்கு இடையில் விருப்பக் கூட்டுப் பிரகடனம் (JDI) எட்டப்பட்டது குறித்த தகவல் மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது. இந்தியா – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் தொடர்பான இந்தப் பிரகடனத்தில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், ஜெர்மனியின் கல்வி மற்றும் ஆய்வுக்கான கூட்டாட்சி அமைச்சகமும் கடந்த மே மாதம் 30ம் தேதி கையெழுத்திட்டன. இந்தியா ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான நான்காவது ஆலோசனைக் கூட்டங்களையொட்டி இந்தப் பிரகடனம் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உருவானது. பிரகடனத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பிலும் மற்றும் புவி அறிவியல் துறை சார்பிலும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் ஜெர்மனி நாட்டு கல்வி ஆராய்ச்சித் துறை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் ஜொஹானா வேன்காவும் கையெழுத்திட்டனர்.
சவரன் தங்கப் பத்திரத் திட்டத்திற்கான விதிமுறைகளைத் திருத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சவரன் தங்கப் பத்திரத் திட்டம் தனது நோக்கங்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியது.
ஆகஸ்ட் 30, 2017
பிற நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகள்/சர்வதேச முகமைகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் ஒத்துழைப்புக்காக பிற நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகள்/சர்வதேச முகமைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மியான்மரில் பகான் என்ற இடத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கோவில் கோபுரங்களை பாதிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
மியான்மரில் பகான் என்ற இடத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கோவில் கோபுரங்களை பாதிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, 2017 செப்டம்பர் 6-7 தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மியான்மரில் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தின்போது கையெழுத்திடப்பட உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) அவசர சட்டம், 2017-ஐ வெளியிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நிதித் துறையின், சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017-ல் திருத்தம் செய்வதற்கு ஏதுவான அவசரச் சட்டத்தின் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்தது.
இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி-மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதியம்” அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், “இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதியம் (I4F) அமைப்பதற்காக இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜூலை 2017-ல் இறுதிசெய்யப்பட்டது.
இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான ஜெபு கால்நடை மரபியல் மற்றும் இனப்பெருக்க உதவி தொழில்நுட்பங்கள் துறைகளில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான ஜெபு கால்நடை மரபியல் மற்றும் இனப்பெருக்க உதவி தொழில்நுட்பங்கள் துறைகளில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2016, அக்டோபரில் கையெழுத்தானது.
அஞ்சல் தலைகளை கூட்டாக வெளியிட இந்தியா-கனடா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கனடா நாடுகள் இணைந்து இரண்டு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்ட தகவல் எடுத்துரைக்கப்பட்டது. “தீபாவளி” என்ற கருத்துரு அடிப்படையில், அஞ்சல் தலைகள் வெளியிடப்படும். இந்த அஞ்சல் தலைகள், செப்டம்பர் 21, 2017-ல் வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய அஞ்சல் துறைக்கும், கனடா அஞ்சல் துறைக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தானது.
அரசு துறைகளில் இருக்கும் பதவிநிலைகளுக்கு இணையாக மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீ்ட்டு நிறுவனங்களில் பதவிநிலைகளை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர்களின் குழந்தைகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கோரும் வகையில், அரசு துறைகளில் உள்ள பதவிநிலைகளுக்கு இணையாக, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றிலும் பதவிநிலைகளை உருவாக்குவதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், சுமார் 24 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இது, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் கீழ்நிலைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு, அரசு துறைகளில் கீழ்நிலைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு இணையாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும். மேலும் இது, பொதுத்துறை நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்களில் பணியாற்றுவோருக்கு அரசு பணியிடங்களுக்கு இடையேயான பணியிடம் இல்லாததால், தவறான வருவாய் மதிப்பீட்டின் மூலம், அவர்களது குழந்தைகளுக்கு அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் பணி கிடைப்பது தடுக்கப்படும். மேலும், உண்மையான கிரீமிலேயர் வரம்பில் இல்லாத பிரிவினருக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு இல்லாத நிலை மாறி, சரிசமமான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
ஆகஸ்ட் 23, 2017
மாற்று செயல்முறை வாயிலாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றுபடுத்த மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்
மாற்று செயல்முறை அமைப்பு வாயிலாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு இடையே வலுவான, போட்டியிடும் வங்கிகளை உருவாக்க, வழிவகுக்கும்.
தில்லியில் மத்திய பிரதேச விருந்தினர் மாளிகை கட்ட நிலம் ஒதுக்கீடுக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய பிரதேச அரசு தில்லியில் தனது விருந்தினர் மாளிகையை கட்டிக்கொள்வதற்கு புதிதில்லி சாணக்கியபுரி, ஜீசஸ் அண்ட் மேரி சாலை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் உள்ள 1.478 ஏக்கர் அல்லது 5882.96 சதுர மீட்டர் பரப்பிலான பிளாட் எண் 29சி மற்றும் 29டி மனைகளை தற்போதைய மதிப்பில் கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
டாஹிசார் ரிமோட் ரிசீவிங் நிலையத்தில் மெட்ரோ பணிமனை அமைக்க AAI-க்கு உள்ள 40 ஏக்கர் நிலத்தை மும்பை மாநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்திற்கு (MMRDA) மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல். மும்பை, கோராய் என்ற இடத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் மாற்றாக பெறப்படும்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டாஹிசார் RR நிலையத்தில் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்துக்கு (AAI) சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, மும்பை மெட்ரோபாலிடன் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்துக்கு (MMRDA) மெட்ரோ பணிமனை அமைப்பதற்காக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மும்பை கோராய் என்ற இடத்தில் உள்ள மாநில அரசின் 40 ஏக்கர் நிலம் இதற்கு மாற்றாக பெறப்படும். மும்பையில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு உதவும் வகையில் இந்த நிலப் பரிமாற்றம் அமையும்.
இந்திய- நேபாள எல்லையில் மெச்சி நதி மேல் புதிய பாலம் கட்டுவதற்கு செயல்முறை ஏற்பாட்டை உருவாக்குவதற்கான இந்தியா, நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய நேபாள எல்லையில் மெச்சி நதி மேல் புதிய பாலம் கட்டுவதற்கு செயல்முறை ஏற்பாட்டை உருவாக்குவதற்காக இந்தியா, நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானச் செலவு, பணிக்கான கெடு, பாதுகாப்பு விசயங்கள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறும்.
போதை மருந்துகள், உளநிலை மாற்றும் பொருட்கள் மற்றும் போதை மருந்து தயாரிக்கும் ரசாயணங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க நேபாளத்துடன் போதை மருந்து கடத்தல் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
போதை மருந்து, உள நிலையை மாற்றும் மருந்துகள், போதை மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் ஆகியவற்றின் கடத்தலைத் தடுக்க நேபாளத்துடன் போதை மருந்து தேவைக் குறைப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு புரிந்துணர்வு கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) உட்பிரிவு பற்றி ஆராய ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அரசியல் சட்ட விதி 340ன் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட் பிரிவுகள் விவகாரம் குறித்து ஆராய ஆணையம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு ஒப்புதல் அளித்தது.
ஆகஸ்ட் 16, 2017
நீண்டகால நீர்ப்பாசன நிதியத்துக்காக 2017&18ல் ரூ.9,020 கோடி வரையில் கூடுதல் பட்ஜெட் ஆதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2017&18ல் நபார்டு வங்கி, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,020 கோடி கூடுதல் பட்ஜெட் ஆதாரத்தை (இ.பி.ஆர்.) திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தை உறுதி செய்து திரட்டப்படும் இந்த நிதி மூலம், தற்போது முன்னுரிமை கொடுத்து செய்யப்பட்டு வரும் 99 விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டங்கள் (ஏஐபிபீ) அமல்படுத்தப்படும். மேலும், இத்துடன் பி.எம்.கே.எஸ்.ஒய். திட்டத்தின் கீழான கட்டளைப்பகுதி மேம்பாடு பணிகளும் நிறைவேற்றப்படும்.
நிலுவையில் உள்ள வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டப்பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவற்றில், நிலுவையில் உள்ள வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டப்பணிகளை ரூ.1622.27 கோடி மதிப்பீட்டில், ஆரம்பித்த காலத்தில் இருந்து மூன்று நிதியாண்டுக்குள் முடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் சொத்துரிமைகள் (IPR) குறித்து இந்தியா ஸ்வீடன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான அறிவுசார் சொத்துரிமைகள் (IPR-கள்) விஷயத்தில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைத்த நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136வது பிரிவின் கீழ் காலாவதியாகாத ஒற்றை தொகுப்பு நிதி உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ``மத்யமிக் மற்றும் உச்தார் சிக்சா கோஷ்'' (MUSK) என்று அழைக்கப்படும் , இடைநிலைக் கல்வி மற்றும் மேநிலைக் கல்விக்கான பொது கணக்கு தொகுப்பில் ஒரு காலாவதியாகாத நிதியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ``இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான மேல்வரி' வசூல் மூலம் கிடைக்கும் அனைத்து தொகையும் இதில் செலுத்தப்படும்.
ஆயுதப் படை தலைமையக சிவில் சேவைகளில் 7 முதன்மை இயக்குனர் பதவிகள் மற்றும் 36இயக்குனர் பணியிடங்களை வழக்கமான முறையில் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
பாதுகாப்பு அமைச்சகத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆயுதப் படை தலைமையக சிவில் சேவைகளில் 7 முதன்மை இயக்குனர் பணியிடங்கள் மற்றும் 36 இயக்குனர் பணியிடங்களை வழக்கமான முறையில் உருவாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச என்.ஐ.டி.யில் ஒரு இயக்குனர் மற்றும் மூன்று ஆசிரியரல்லாத பணியிடங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தேசிய தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் (என்.ஐ.டி.) ரூ. 75,000 அடிப்படை ஊதியம் + ரூ. 5,000 சிறப்பு படியுடன் ஓர் இயக்குனர் பணியிடம் மற்றும் மூன்று ஆசிரியரல்லாத பணியிடங்கள் (பதிவாளர், நூலகர் மற்றும் முதன்மை மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு அதிகாரி) ரூ. 10,000 தர ஊதியத்துடன் (கிரேடு பே) உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மெட்ரோ ரயில் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; நகர்ப்புற மேம்பாடு, செலவுக் குறைப்பு மற்றும் பலவகை போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய மெட்ரோ ரயில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெரும்பாலான நகரங்களில், மெட்ரோ ரயிலுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதனை நிறைவேற்றும் வகையிலும், பொறுப்புள்ள வகையிலும், மெட்ரோ ரயில் சேவையை அளிக்க இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது.
ஆகஸ்ட் 02, 2017
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்புக்காக இந்தியா – ஸ்பெயின் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா-ஸ்பெயின் ஒத்துழைப்புக்காக, இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்பெயினில் மே 30, 2017-ல் கையெழுத்தானது.
பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பை ஏற்படுத்த இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பை (BRICS Agriculture Research Platform – BRICS ARP) உருவாக்க இந்தியா மற்றும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 12, 2017
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் ஜூலை 1, 2017 முதல் கூடுதலாக 1% விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் (DR) கூடுதலாக ஒரு சதவீதம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 1.7.2017 முதல் அமல்படுத்தப்படும்.
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-மொராக்கோ இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-மொராக்கோ இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ஒரே தொகுப்பாக உருவாக்கி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முழு சொந்தமான தனி நிறுவனமாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ஒரே தொகுப்பாக உருவாக்கி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு முழுமையாக சொந்தமான தனி நிறுவனமாக உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பட்டுப்புழு மற்றும் பட்டு தொழிலில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையில் தகவல் அளிப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் மத்திய பட்டு வாரியத்துக்கும் (CSB), ஜப்பானின் தேசிய விவசாய உயிரியல் அறிவியல் கல்வி நிலையத்துக்கும் (NIAS) இடையில், பட்டுப் புழு மற்றும் பட்டுத் தொழிலில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெவிக்கப்பட்டன.
பணிக்கொடை வழங்கல் (திருத்த) மசோதா 2017- ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பணிக்கொடை வழங்கல் (திருத்த) மசோதா 2017- ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 20, 2017
கேலோ இந்தியா திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2017-18 முதல் 2019-20 வரையான காலத்திற்கு கேலோ இந்தியா திட்டத்தை ரூ. 1756 கோடி செலவில் மாற்றி அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டை தனிநபர் மேம்பாடு, சமுதாய மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, தேசிய மேம்பாடு ஆகியவற்றிற்கான முக்கிய கருவியாக விளையாட்டை மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
தேசிய சுகாதார இயக்கத்தின் (என்எச்எம்) பணிகளின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றங்கள், அதிகாரமளிப்புத் திட்டக் குழு, என்எச்எம் வழிகாட்டுக் குழு ஆகியவற்றின் முடிவுகள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் விவரிக்கப்பட்டன. அத்துடன், அதிகாரமளிப்புத் திட்டக் குழு (EPC) மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுக் குழு (MSG) ஆகியவற்றின் முடிவுகளும் விவரிக்கப்பட்டன. தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் (NUHM) தொடங்கப்பட்டது. அதையடுத்து, தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) துணை இயக்கங்களாக தேசிய ஊரக சுகாதார இயக்கமும் (NRHM), தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கமும் (NUHM) மாற்றப்பட்டன.
இந்திய அரசு அச்சகங்களை (GIPs) சீரமைத்தல் / இணைப்பதற்கும் மற்றும் அதன் நவீனமயமாக்கலுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய அரசு அச்சகங்கள் (GIPs) 17 –யை 5 மத்திய அரசு அச்சகங்களாக சீரமைத்து இணைப்பதற்கும் மற்றும் அவற்றை நவீனமயமாக்கலுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 5 அச்சகங்கள் புதுதில்லியில் குடியரசு தலைவர் மாளிகை, மின்டோ சாலை, மாயாபுரி மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா கோயில் தெரு ஆகிய இடங்களில் அமைந்திருக்கும்.
பல் மருத்துவர்கள் திருத்த மசோதா 2017ஐ தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பல் மருத்துவர்கள் திருத்த மசோதா 2017 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் திரு. நசேந்திச மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1948-ஆம் ஆண்டு பல் மருத்துவ சட்டத்தை (1948-ன் 16 வது) சட்டம் இயற்றும் துறை மாற்ற விரும்பினால் அத்தகைய மாற்றங்களையும் இணைத்துக்கொண்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் கூடிய போனஸை தசரா/ பூஜா விழாக் காலத்திற்கு முன்னதாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ரயில்வேயில் உற்பத்தித் திறன் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு.
தகுதியுள்ள அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான இந்த போனஸ் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புச் சிறப்புப் படை, பணியாளர் நீங்கலாக இதர ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்த முடிவு காரணமாக சுமார் 12,30,000 அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவார்கள். திருவிழா காலத்திற்கு முன்னதாக இந்த போனஸ் வழங்கப்படும் என்பது லட்சக்கணக்கான குடும்பங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
செப்டம்பர் 27, 2017
மத்திய சுகாதார சேவை (CHS) அல்லாத மருத்துவர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய ரயில்வே மருத்துவ சேவையில் உள்ள மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- வங்கிகளிடையே உள்ளூர் பணத்தில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், (2) பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஈடிம் வங்கியின் கடன் தகுதி குறித்த ஒத்துழைப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை (1) வங்கிகளிடையே உள்ளூர் பணத்தில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், (2) பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஈடிம் வங்கியின் கடன் தகுதி குறித்த ஒத்துழைப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட தனது ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே பொதுவானதொரு உடன்பாடு என்பதோடு அதன் தன்மையில் கட்டுப்பாடு அற்றவை என்ற வகையில் எக்சிம் வங்கியின் இயக்குநர்கள் குழு இது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தங்களது கட்டமைப்பிற்குள் தனிப்பட்ட ஒப்பந்தங்கள், உறுதிமொழிகள் ஆகிய எதையும் முடித்துக் கொள்ளவும் இதன் மூலம் அனுமதிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே தகவல், தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே “செய்தி, தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ஒத்துழைப்பு” தொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்ள தனது ஒப்புதலை வழங்கியது.
லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் 1899 சதுர மீட்டர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு நிரந்தரமாகக் மாற்றித் தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் 1899 சதுர மீட்டர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு நிரந்தரமாக கைமாற்றித் தர தனது ஒப்புதலை வழங்கியது.
ராஜமுந்திரி விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இணைப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில், விமான நிலையத்தை சுற்றி சாலை அமைப்பதற்காக விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலத்தை அதற்கு இணையாக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் நிலத்துடன் பரிமாறிக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜமுந்திரி விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலத்தை, ஆந்திரப் பிரதேச மாநில அரசு வழங்கும் அதே அளவு நிலத்துக்கு இணையாக பரிமாறிக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராஜமுந்திரி விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எளிதில் சென்றுவருவதற்கு வசதியை செய்துகொடுக்கும் வகையில், சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
காவல் படைகளை நவீனமயமாக்குவதற்கான அம்பரெல்லா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காவல் படைகளை நவீனப்படுத்துவதற்காக அம்பரெல்லா திட்டத்தை (umbrella scheme) 2017-18 முதல் 2019-20-ம் ஆண்டுகள் வரை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு, மூன்று ஆண்டுகளுக்கான செலவு ரூ.25,060 கோடி. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.18,636 கோடியாகவும், மாநிலங்களின் பங்கு ரூ.6,424 கோடியாகவும் இருக்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா-பெலாரஸ் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா-பெலாரஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெலாரஸ் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் 12, 2017-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
இந்தியாவுக்கும் பெலாரஸ் நாட்டுக்கும் இடையில் முதலீடுகள் குறித்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் பின்னேற்பு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் பெலாரஸ் நாட்டுக்கும் இடையில் முதலீடுகள் குறித்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) கையெழுத்திடுதல் மற்றும் பின்னேற்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காவலர் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காவலர் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு சேவையாளர்கள் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைத்தல் மற்றும் அதைச் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பாதுகாப்புத் துறை நிலத்தை அளிப்பதற்கான கொள்கையை திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் செல்போன் கோபுரங்கள் நிறுவுவதற்கு தொலைத் தொடர்புத் துறை (DoT) அனுமதி அளிப்பதற்கான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை அமல் செய்வதன் அனுபவத்தின் அடிப்படையில், தொலைத்தொடர்பு சேவையாளர்கள் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைத்தல் மற்றும் அதைச் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பாதுகாப்புத் துறை நிலத்தை அளிப்பதற்கான கொள்கையை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அக்டோபர் 04, 2017
இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அதை உறுதிப்படுத்துவதற்கும் தனது ஒப்புதலை வழங்கியது.
ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம் இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம், சுவிஸ் கூட்டமைப்பின் சுற்றுச் சூழல், போக்குவரத்து, எரிசக்தி, தகவல் தொடர்புக்கான கூட்டமைப்புத் துறைக்கும் இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்பரீதியான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31, 2017 அன்று கையெழுத்தானது.
மியான்மரில் யாமெதின் -இல் உள்ள பெண் காவலர் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மியான்மரில் யாமெதின் – இல் உள்ள பெண் காவலர் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா- மியான்மருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நடைமுறை குறித்த தனது பிந்தைய ஒப்புதலை வழங்கியது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டெம்பர் 6, 2017 அன்று கையெழுத்தானது.
கண்ட்லா துறைமுகத்தின் பெயரை தீன் தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கண்ட்லா துறைமுகத்தின் பெயரை தீன்தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்வதற்கான நடைமுறைக்குப் பிந்தைய அனுமதியை வழங்கியது.
அக்டோபர் 11, 2017
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ‘’தொழிற் கல்வி பயிற்சித் திட்டம் (TITP)’ குறித்த ஒத்துழைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான “’தொழிற் கல்வி பயிற்சித் திட்டம் (TITP)’ குறித்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திரவ, எளிதில் பயன்படுத்தக் கூடிய மற்றும் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உலகளாவிய சந்தையை ஏற்படுத்த இந்தியா-ஜப்பான் இடையே ஒத்துழைப்பு உடன்பாட்டை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திரவ, எளிதில் பயன்படுத்தக் கூடிய மற்றும் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கான சர்வதேச அளவிலான சந்தையை உருவாக்க இந்தியா, ஜப்பான் இடையே ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
SEBI மற்றும் FSC இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு (MoU) மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய செக்யூரிட்டிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டுக்கும் (SEBI), ஜிப்ரால்டரைச் சேர்ந்த நிதிச் சேவைகள் கமிஷனுக்கும் (FSC) இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-பெலாரஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பெலாரஸ் இடையே தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெலாரஸ் அதிபர் மேதகு அலெக்சாண்டர் லுகாசென்கோ, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் 12, 2017-ல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் (SEBI), குவைத்தின் மூலதன சந்தைகள் ஆணையத்துக்கும் (CMA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குவைத்தின் மூலதன சந்தைகள் ஆணையத்துடன் (CMA), பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (SEBI) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நீர் ஆதாரங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கப்பலோட்டுதல் மற்றும் கலங்கரை விளக்க அதிகாரிகளுக்கு கடல்சார் உதவிகளை வழங்கும் சர்வதேச சங்கம் ( International Association of Marine Aids to Navigation and Lighthouse Authorities) (IALA), தனது அரசு சாரா அமைப்பு (NGO) என்ற தகுதிநிலையில் இருந்து அரசுகள்-இடை அமைப்பாக (IGO) மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நீர்வளங்கள் தொடர்பாக இந்தியாவும் மொராக்கோ நாடும் ஒத்துழைப்பதற்கு வகை செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நீர் வளங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் உள்ள அதற்கு சமமான கல்வி அலுவலர்கள் & மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 8 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஆளுகைக்குள்பட்டு வரும் உயர் கல்வி நிலையங்களின் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழிற் கல்வி நிலையங்களின் கல்வி அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது.
நவம்பர் 01, 2017
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் எத்தியோப்பியாவுக்கு 2017 அக்டோபர் 4 முதல் 6 ஆம் தேதி வரையில் பயணம் மேற்கொண்டபோது, அக்டோபர் 5 ஆம் தேதி இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சுங்க விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சுங்க விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடவும் ஏற்பளிப்பு அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (திருத்த) மசோதா 2017 என அழைக்கப்படும் இந்த மசோதாவில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அனுமதியின்றி, ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை நடத்திவருவதாக கண்டறியப்பட்டுள்ள மத்திய/மாநில/பல்கலைக் கழகங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (திருத்த) மசோதா 2017 என அழைக்கப்படும் இந்த மசோதாவில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அனுமதியின்றி, ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை நடத்திவருவதாக கண்டறியப்பட்டுள்ள மத்திய/மாநில/பல்கலைக் கழகங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுகிறது.
நவம்பர் 10, 2017
இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு வேளாண்துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்யும். அத்துடன் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கும்.
இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பை தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு தனது ஒப்புதலை அளித்தது.
இந்தியா மற்றும் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பகுதி இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பகுதி (எச்.கே.எஸ்.எ.ஆர்.) இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.
புது தில்லியில் துவாரகாவில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்கொள்கை மேம்பாட்டுத்துறையின் கீழ்க்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2025ம் ஆண்டுக்குள் 25 ஆயிரத்து 703கோடி ரூபாய் மதிப்பில் துவாரகாவில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை அமைத்தல் மற்றும் அதுசார்ந்த கட்டமைப்புகளை பி.பி.பி., (அரசு பொதுத்துறை இணைந்த பங்களிப்பு) மற்றும் பி.பி.பி., சாராத பங்களிப்புடன் அமைத்தல். ( கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய இடம், அரங்கம், மெட்ரோ, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணைப்பு, உணவு விடுதி, அலுவலகம் மற்றும் சிறு தேவைகளுக்கான இடங்கள் இதர உள்கட்டமைப்புகளை உள்ளடக்கியது)
- மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் மூலம் 100 சதவீத அரசு பங்களிப்புடன் திட்டச் செயலாக்கத்திற்காக புதிய அரசு துறை நிறுவனத்துடன் இணைத்து சிறப்பு பயன்பாட்டு அமைப்பு (எஸ்.பி.வி.வி.,)க்கும் அரசு நிதி ஆதாரமாக 2037.39 கோடி ரூபாயை 3 ஆண்டுகளில் ஒதுக்கும். கண்காட்சி மையம், நடைவெளி, மாநாட்டு மையம், மெட்ரோ இணைப்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை இணைப்பு ஆகிய கட்டமைப்புகளுடன் இது இருக்கும். இதற்கான நிலத்தை தில்லி வளர்ச்சி குழுமம் வழங்கும். நீர், கழிவுநீர் கட்டமைப்பு, மெட்ரோ இணைப்புக்காக ரயில்வே நிலம், மற்றும் இதர செலவுகள் பி.பி.பி.,சாராத அங்கமாக இருக்கும்.
- 1381 கோடி ரூபாய் நிதி சந்தையில் இருந்து அரசின் உறுதிப்படுத்தப்பட்ட கடன் மூலமாக பெறப்படும். 4 ஆயிரம்கோடி ரூபாய் நிதி, அரசு சார்ந்த நிலங்கள் மற்றும் எஸ்.பி.வி. ஆண்டு திட்ட வருவாய் மூலம் பெறப்படும். எஸ்.பி.வி. நிறுவனம் மூலம் நிலம், நிதி மற்றும் ஆண்டுவருவாய் சார்ந்த நிதி ஆதாரங்கள் பி.பி.பி. சாராத திட்ட செலவு அங்கமாக பயன்படுத்திக்கொள்ளப்படும்.
- தில்லி மும்பை தொழில்தட மேம்பாட்டு கழகம் (டி.எம்.ஐ.சி.டி.சி,) அறிவுசார் பங்குதாரராக இருக்கும். அதற்காக நிகர மொத்த ஆண்டு சம்பளத்தில் 1 சதவீதம் கட்டணமாக வழங்கப்படும். இது குறைந்த பட்சம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் என்ற அளவிலும் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் என்ற அளவிலும் இருக்கும். பத்து ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும்.
- திட்ட மதிப்பீட்டை மறு ஆய்வு செய்யவும், அளவை பிரித்து கொடுக்கவும், நீக்கவும், அமைப்பை மாற்றவும், தேவைக்கு ஏற்ப பல்வேறு நிலைகளை ஏற்படுத்தவும், அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் செயல்படவும் சிறப்பு பயன்பாட்டு அமைப்பு (எஸ்.பி.வி.,) வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எஸ்.பி.வி கடன் அல்லது நிதி ஆதாராங்களை திரட்டிக்கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் முதல் பகுதியாக உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் 2019ம் ஆண்டு டிசம்பருக்குள் திறக்கப்பட வேண்டும். இது பி.பி.பி., அல்லாத பங்களிப்பாக செயல்படுத்தப்படும். திட்டத்தின் இரண்டாவது பகுதி எஞ்ஞசிய கண்காட்சி பகுதி 2025ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரவேண்டும். இதில் ஓட்டல்கள், சிறுவணிகத்திற்கான இடங்கள், அலுவலகங்கள், ஆகியவை இருக்கும். இவற்றை பி.பி.பி. முறையில் செயலப்டுத்த வேண்டும்.
- இந்த உத்தேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், அதில் ஆண்டுக்கு 100 சர்வதேச மற்றம் உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தலாம். திட்டத்தின் முதலாவது பகுதி (2019-20) நிறைவடைந்தததும் ஆண்டுக்கு 1கோடி பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சி மையத்திற்கு வருவார்கள். .2025ல் 2வது திட்டப்பகுதி நிறைவடைந்ததும் 23 மில்லியன் பேர் ஆண்டுதோறும் வருவார்கள். மாநாட்டு கூடத்திற்கு வரும் பிரதிநிதிகளின் வருகை 2வது திட்டப்பகுதி முடிந்ததும் ஆண்டுக்கு ஒன்றரை மில்லியனை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா கொலம்பியா நாடுகளுக்கு இடையில் முதலீட்டு அதிகரிப்பு, பாதுகாப்பு தொடர்பான உடன்பாட்டின் விளக்கமான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் கொலம்பியா நாட்டுக்கும் இடையில் முதலீட்டு அதிகரிப்பு, முதலீட்டுப் பாதுகாப்பு குறித்த உடன்பாட்டின் விளக்கமான கூட்டுப் பிரகடனத்தில் (JID) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் 2017, நவம்பர் 10ஆம் தேதி கையெழுத்தானது.
கீழமை நீதிமன்றங்களுக்கான இரண்டாவது நீதித்துறை தேசிய ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
நாட்டில் கீழமை நீதிமன்றங்களுக்கு இரண்டாவது நீதித்துறை ஊதியக் குழுவை (SNJPC) அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய ஊரக குடிநீர் திட்ட நீட்டிப்பு மற்றும் மீள்கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, ஊரக மக்களுக்கு தரமான சிறந்த சேவை அளிப்பதை உறுதி செய்யும் வண்ணம், முடிவு வெளிவரும், போட்டி மற்றும் திட்ட (செயல்பாடு) நிலைபெறுதலுக்கு அதிக கவனத்துடன் கூடிய சிறந்த கண்காணிக்கும் வகையிலும், தேசிய ஊரக குடிநீர் திட்ட (என்.ஆர்.டீ.டபிள்யு.பி.) நீட்டிப்பு மற்றும் மீள்கட்டமைப்பிற்கான தனது ஒப்புதலை அளித்தது
உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய சோதனை முகமையை (NTA) உருவாக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சோதனை முகமை (NTA) உருவாக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முகமை இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் அமைக்கப்படும் தன்னாட்சி கொண்ட அமைப்பாக இயங்கும். இந்த முகமை உயர்கல்வி நிறுவனங்களின் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தன்னிறைவு பெற்றதாக செயல்படும்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பின்புலம் உள்ள தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சங்களின் ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்திற்கு (டி.சி.ஐ.எல்.) மாற்றுப் பணியில் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பின்புலம் உள்ள தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சங்களின் ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்திற்கு (டி.சி.ஐ.எல்.) மாற்றுப் பணியில் அனுப்ப கீழ்க்கண்ட விவரங்களின்படி தனது ஒப்புதலை வழங்கியது:
அ) இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்தில் (டி.சி.ஐ.எல்.) வாரிய அளவிலான பதவிகளுக்கு கீழேயுள்ள மொத்த பதவிகளில் அதிகபட்சமாக 10 சதவீத பதவிகளில், உடனடியாக முழுமையாக நிறுவனத்தில் இணைத்துக் கொள்வது என்ற நிபந்தனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையில் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்ட வகையிலும்(இதற்கு முந்தைய அமைச்சரவை ஒப்புதல் 30.09.2016 வரை வழங்கப்பட்டிருந்த நிலையில்) 01.102016 முதல் இந்த கருத்துரைக்கு ஒப்புதல் வழங்கப்படும் வரையிலுமான இடைக்காலத்திற்கும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்ட ’ஏ’ பிரிவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க அனுமதிப்பது; மற்றும்
ஆ) இத்தனை எண்ணிக்கையிலான பதவிகளை தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த ‘ஏ’பிரிவு அதிகாரிகளை மாற்றுப் பணியின் மூலம் நிரப்புவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்தை அனுமதிப்பது மற்றும்
இ) பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையின் அலுவலக குறிப்பாணை எண். 18(6)/2001-ஜிஎம்-ஜிஎல்-77 தேதி 28.12.2005-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி எதிர்காலத்தில் வாரிய அளவிற்குக் கீழுள்ள பதவிகளுக்கு விலக்கு அளிக்க அனுமதிப்பது; இதன் மூலம் இத்தகைய கருத்துருக்கள் அமைச்சரவையின் முன்பாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்காது.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான
கடன்சார் மானியத்தில் வட்டிச் சலுகை பெற கட்டிட உள்ளுறை பரப்பை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் (MIG) கடன்சார் மானியத்தில் (CLSS) சலுகை பெறுவதற்கான கட்டிட உள்ளுறை பரப்பின் உச்ச வரம்பை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுதில்லி நவம்பர் 16, 2017
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர பயன்களைப் பெறும் வகையில் இந்தியா மற்றும் பெலாரஸ் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர பயன்களைப் பெறும் வகையில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (ஐ.என்.எஸ்.ஏ.) மற்றும் பெலாரசின் தேசிய அறிவியல் அகாடமி ஆகியவற்றுக்கு இடையே உடன்படிக்கை செய்து கொள்வது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. கீழ் இயங்கும் லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பின் கீழ் லாபத் தடுப்பு தேசிய ஆணையகம் (National Anti-profiteering Authority - NAA) அமைக்கவும் அதற்கான தலைவர், தொழில்நுட்ப உறுப்பினர் பதவிகளை உருவாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரிவிதிப்பைப் பெருமளவு நேற்று குறைத்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலனாக நுகர்வோரின் பொருட்கள் மீதான விலை குறைக்கப்படுவதை உறுதி செய்வதைக் கட்டாயமாக்கும் நிறுவனமாக உடனடியாக நிறுவுவதற்கு வழியமைக்கப்படும்.
உள்நாட்டு விமான போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் போலந்து இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
உள்நாட்டு விமான போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியாவும் போலந்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாட்டு அரசுகளும் இதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகிறது, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு இருக்கும்.
ரயில்வே கன்வென்ஷன் குழு (2014) தனது ஆறாவது அறிக்கையில் பொது வருவாய்க்கு 2016-17க்கு ரயில்வே அளிக்க வேண்டிய ஈவுத் தொகை விகிதம் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்பதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
2016-17ம் ஆண்டுக்கு பொது வருவாய்க்கு ரயில்வே அளிக்க வேண்டிய ஈவுத் தொகையை ஒரே ஒருமுறை மட்டும் தள்ளுபடி செய்ய ரயில்வே கன்வென்ஷன் குழு அளித்த பரிந்துரையை ஏற்பதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்த யோசனைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் 22, 2017
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான 8வது சுற்று ஊதிய உயர்வு பேச்சுகளுக்கான ஊதிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 8வது சுற்று ஊதிய பேச்சுவார்த்தைக்கான ஊதிய கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
15வது நிதிக் கமிஷன் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
15வது நிதிக் கமிஷன் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு விதி 280 (1)ன் கீழ் இது அரசியலமைப்பு கடமையாகும். 15வது நிதிக்கமிஷனுக்கான விதிமுறைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதியங்கள், பணிக்கொடை, படிகள் மற்றும் ஓய்வூதியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதியங்கள், பணிக்கொடை, படிகள் மற்றும் ஓய்வூதியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இது திருத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இந்தியன் இன்ஸ்டிடியூட் - குறித்த திட்டத்தை 12வது திட்ட காலத்திற்குப் பிறகும் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இந்தியன் இன்ஸ்டிடியூட் (IICA) குறித்த திட்டத்தை 12வது திட்ட காலத்திற்குப் பிறகும் மேலும் மூன்று நிதியாண்டுகளுக்கு (நிதியாண்டு 2017-18 முதல் 2019-20 வரையில்) தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மானிய உதவியாக ரூ.18 கோடி அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. 2019-20 நிதியாண்டிற்குப் பிறகு இந்த நிறுவனம் தற்சார்புள்ளதாக மாறுவதற்கு இது வழிவகை செய்யும்.
ஐரோப்பிய மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சி வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக அமைச்சரவை ஒப்புதல்
மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இ.பி.ஆர்.டி.யின் உறுப்பினராக தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சகத்தின் கீழான பொருளாதார விவகாரங்கள் துறை எடுக்கும்.
சுங்க விவகாரங்களில் பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவை ஒப்புதல்
ஒத்துழைப்பு மற்றும் சுங்க விவகாரங்களில் பரஸ்பர உதவிக்கு இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் 30, 2017
இந்துஸ்தான் காய்கறி எண்ணெய்க் கழக நிறுவனத்திற்கு சொந்தமான நில சொத்துகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு வகைமாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்துஸ்தான் காய்கறி எண்ணெய்க் கழக நிறுவனத்திற்கு (எச்.வி.ஓ.சி.) சொந்தமான அனைத்து நில சொத்துகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு (MoHUA) அல்லது அதன் அத்தாட்சி தரப்பட்ட முகமைக்கு, உரிய வகையில் பயன்பாட்டுக்கு/ வெளியில் வழங்குவதற்காக வகைமாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் பிரேசில் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் பிரேசில் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தம் (ICFT) கையெழுத்திடவும், பின்னேற்பு அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உலக வர்த்தகத்துக்கான தாவரவியல் தரங்கள் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வேளாண்மை மற்றும் உலக வர்த்தகத்துக்கான தாவரவியல் தரங்கள் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2008 ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை மாற்றுவதாக இது இருக்கும். முந்தைய ஒப்பந்தம் ஜனவரி 2018-ல் காலாவதியாகிறது.
டிசம்பர் 01, 2017
தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை (என்.என்.எம்), 2017 - 18 முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு ரூ.9046.17 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டிசம்பர் 15, 2017
2020 மார்ச் வரை வடகிழக்கு பிராந்தியத்திற்கு என்.எல்.சி.பி.ஆர். திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல்
2020 மார்ச் வரை என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ். என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை தற்போது நடைமுறையில் உள்ள காலாவதியாகாத ஆதாரங்களின் மத்திய தொகுப்பு (என்.எல்.சி.பி.ஆர்.) திட்டத்தை ரூ. 5,300 கோடி நிதி ஒதுக்கி, 90:10 என்ற முறையில் 2020 மார்ச் வரை தொடர ஒப்புதல் அளித்தது. இது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் நிறைவு பெறுவதை சாத்தியமாக்கும்.
மத்திய அரசின் திட்டமான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (என்.ஏ.எம்.) 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசுத் திட்டமான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (என்.ஏ.எம்.) 01.04.2017 முதல் 31.03.2020 வரை மூன்று ஆண்டுகள் தொடரவும் அதற்காக ரூ. 2400 கோடி ஒதுக்கியும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இயக்கம் கடந்த 2014 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
டெபிட் கார்டு / பீம் யூபிஐ / ஏஇபிஎஸ் மூலமாக ரூ.2000 -க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். கட்டணங்களுக்கு மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து டெபிட் கார்டு / பீம் யூ.பி.ஐ. / ஆதார் அட்டை சார்ந்த பட்டுவாடா சேவைகளுக்கு (AePS) பொருந்தக் கூடிய வணிகர் தள்ளுபடி கட்டணத்தை (MDR), ரூ.2000 வரையிலான மற்றும் ரூ.2000 தொகையும் உள்ளிட்ட மதிப்புகளுக்கான பரிவர்த்தனைகளுக்கான இரண்டு ஆண்டுகளுக்கு அரசே ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனவரி 2018ல் இருந்து இந்தக் கட்டணத்தை வங்கிகளுக்கு அரசு திருப்பியளிக்கும்.
மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் பணிகளைக் கவனிக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வட்டார அலுவலகம் ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் பணிகளை செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CMRS) ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ``மெட்ரோ ரயில்வே (செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002''-ல் கூறியுள்ளவாறு இந்த அலுவலகம் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்படும்.
வேளாண்மை மற்றும் மீன்வளத் துறையில் இந்தியாவும் கொலம்பியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை ஒப்புதல்
வேளாண்மை மற்றும் மீன்வளத் துறையில் இந்தியாவும் கொலம்பியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐதராபாத்தில் சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஐதராபாத்தில் சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவுடன் (UNESCO) ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐதராபாத்தில் பிரிவு - 2 மையமாக சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோ (UNESCO) உடன் ஒப்பந்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தோல் மற்றும் காலணித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய தொகுப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோல் மற்றும் காலணித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி “இந்திய காலணி, தோல் மற்றும் உபகரண மேம்பாட்டுத் திட்டம்” என்ற மத்திய தொழில் திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக 2017-18ஆம் நிதியாண்டு முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரையில் மொத்தம் ரூ. 2,600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டிசம்பர் 20, 2017
ஆயுதம் தாங்கிய எல்லைப் பாதுகாப்புப் படை(சஷாஸ்திர சீமா பல்) மத்திய குரூப் ‘ஏ’ சேவை மற்றும் குரூப் ‘ஏ’ செயல் அதிகாரிகள் ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய குரூப் ‘ஏ’ சர்வீஸ் மற்றும் ஊழியர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய எல்லைப் பாதுகாப்புப் படை (சஷாஸ்திர சீமா பல்) (எஸ்.எஸ்.பி.) ‘ஏ’ குரூப் செயல் அதிகாரிகள் குறித்த ஆய்வில் உதவி கமாண்டண்ட் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வரை 19 பணியிடங்களை உருவாக்கி எஸ்.எஸ்.பி.யின் செயல்பாட்டு மற்றும் நிர்வாகத் திறன் மேம்படுத்தப்பட்டது.
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் இத்தாலி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் அறிவியல் துறையில் இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, நவம்பர் 29ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் கியூபா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா மற்றும் கியூபா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, டிசம்பர் 6ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உட்பிரிவுகளை பிரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு உட்பிரிவுகளாக பிரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 12 வாரங்களுக்கு, அதாவது 02.04.2018 வரை நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உட்பிரிவுகளை பிரிப்பது குறித்து ஆய்வு செய்து வரும் ஆணையம், இதுதொடர்பாக பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாய்வுகளை நடத்தி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்த கால நீட்டிப்பு உதவும்.
இந்தியாவின் முதலாவது தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- விரிவான தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு மேம்படுத்துதல் நடவடிக்கைகள் மூலம், இந்திய ரயில்வே நவீனமயமாகி வருகிறது.
- “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “திறன் வளர்ப்பு இந்தியா” ஆகியவற்றுக்கு பங்களிப்பை செய்வதுடன், மிகப்பெரும் அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவுகிறது
- புத்தாக்க தொழில்முனைவோர் திறனை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் தொடங்குவோம் திட்டத்துக்கு ஆதரவாக உள்ளது
- அதிநவீன கற்பிப்பு முறை மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை பயன்படுத்துகிறது: உயர்தரமான கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்காக அதிநவீன கற்பிப்பு முறை தொழில்நுட்ப செயல்பாடுகளை பயன்படுத்தி சிறந்த தரமான கல்வி நிறுவனமாக அமைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் திறன்வாய்ந்த பணியாளர்கள் மூலம், போக்குவரத்து துறையில் சர்வதேச தலைவராக இந்தியா மாறும்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அளவிலான முதலாவது ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் மாற்றத்துக்கான முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ரயில்வே அமைச்சகத்தில் உள்ள பணியாளர்களுக்கு திறனை வளர்ப்பதுடன், திறன் மேம்படுத்தப்படும். பிரதமரின் எண்ணத்தால் உருவான இந்த புத்தாக்க யோசனையின் மூலம், புதிய இந்தியாவை நோக்கி ரயில் மற்றும் போக்குவரத்து துறையை மாற்றம்பெறச் செய்யும்.
3வது கட்ட எஃப்.எம். மின்னணு ஏலம் மூன்றாவது கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை 263 நகரங்களில் 683 அலைவரிசைகளுக்கான ஏலத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அதிக நகரங்களில் பண்பலை வானொலிக்கான புதிய / விரிவுபடுத்தப்பட்ட அனுபவத்தை அளிக்கும்.
2017-2018 முதல் 2019-2020 வரை ஜவுளித்துறையில் திறன்மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜவுளித்துறையில், நூற்பு மற்றும் நெசவு தவிர்த்த மீதமுள்ள அனைத்துப் பிரிவுகளுக்கான புதிய திறன்மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், 2017-18 முதல் 2019-20 வரை மொத்தம் 1,300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். தேசிய திறன் தகுதி கட்டமைப்பால் வரையறுக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கான விதிகளின்படி இந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பொது விதிகளின்படி செய்யப்படும்.
**
(Release ID: 1514600)
Visitor Counter : 1339