நிதி அமைச்சகம்
‘சங்கல்ப்’ திட்டத்திற்காக இந்திய அரசு உலக வங்கியுடன் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கான கடன் ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2017 5:21PM by PIB Chennai
‘சங்கல்ப்’ எனப்படும் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்கான திறன் வளர்ப்பு மற்றும் அறிவு சார் விழிப்புணர்வு திட்டத்திற்காக, உலக வங்கியுடன் இந்திய அரசு 250 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியிலிருந்து பெறப்படும் இந்த ஒப்பந்தம் இன்று புது தில்லியில் கையெழுத்தானது.
இந்திய அரசின் சார்பில் மத்தியப் பொருளாதார விவகாரத் துறை செயலர் திரு. சமீர் குமார் காரேவும் உலக வங்கியின் சார்பில் இயக்குநர் திரு. ஜுனைட் கமல் அகமதும் கையெழுத்திட்டனர்.
திறன் பயிற்சி மையங்களின் அமைப்புகளை மேம்படுத்தவும், சந்தைக்கு தேவைப்படும் தொழில்களுக்கான திறன் பயிற்சி, பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம் மார்ச் 31, 2023-ல் முடிவடையும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1513204)
வருகையாளர் எண்ணிக்கை : 106