குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
என்.எம்.டீ.சி. போன்ற நிறுவனங்கள் ‘இந்தியாவில் உருவாக்குவோம்” திட்டத்திற்கு கட்டாயம் ஊக்கமளிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்
என்.எம்.டீ.சி.-யின் வைரவிழா கொண்டாட்டங்களில் உரை
Posted On:
08 DEC 2017 6:12PM by PIB Chennai
என்.எம்.டீ.சி. போன்ற நிறுவனங்கள், வழக்கமான நெறிமுறைகளைத் தாண்டி, இளைஞர்களுக்கான திறன் வளர்திட்டங்களை பெருமளவில் தொடங்கி, ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையாநாயுடு கூறினார். இன்று ஐதராபாத்தில், என்.எம்.டீ.சி. நிறுவனத்தின் வைரவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே அவர் உரையாற்றினார். சட்டீஸ்கர் மாநில முதல்வர் டாக்டர் .ராமன் சிங், மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு.சவுத்ரி பீரேந்தர் சிங், தெலுங்கானா மாநில துணை முதல்வர் திரு.முகம்மது மெஹ்முத் அலி, மத்திய எஃகுத்துறை இணை அமைச்சர் திரு.விஷ்ணுதி யோசாய், மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் திரு.ஒய்.எஸ்.சவுத்ரி, தெலுங்கானா மாநில சுரங்கங்கள் & புவியியல் துறை அமைச்சர் திரு. கே.டி.ராமாராவ் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். மேலும், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, எரிசக்தி, பாசனம் அல்லது சாலை இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டமைப்பதில் அவை முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற முக்கியத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
35 வயதிற்கும்கீழ் 65 சதவீதம் மக்கட்தொகை கொண்ட ஒரே நாடு இந்தியா என குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். இது மிகப்பெரிய ஜனநாயக வரப்பிரசாதமாகும். இளைஞர்கள், படித்த மக்கட்தொகையின் சக்திகளைக் கொண்டு, வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றார் அவர்.
2017-ம் ஆண்டு (வரிக்குமுன்பாக) ரூ.4,293 கோடியை லாபமாக பெற்றதற்காகவும், நாட்டின் தலைசிறந்த லாபம் ஈட்டும் ‘நவரத்னா’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியுள்ளதற்காகவும் என்.எம்.டீ.சி. -யை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். கூடுதல் சுரங்க ஆதாரங்களைக் கண்டறிய வழிசெய்து, நாட்டை சுரங்கத்துறையில் வளர்ச்சியடையச்செய்யவும், ராய்பூரில் அர்பணிக்கப்பட்ட துரப்பணப் பிரிவை என்.எம்.டீ.சி. ஏற்படுத்தியுள்ளதற்காக தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்தார்.
மத்திய எஃகுத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள இரண்டு பிற பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டாக டான்சானியாவில் தங்கப்படுகைக் குத்தகை பெற்றும், ஆஸ்திரேலியாவில் இரும்புத்துகள் படுக்கையில் பெரும்பங்கைப் பெற்றும், மொசாம்பிக்கில் நிலக்கரிப் படுக்கையைப் பெற்றும் என்.எம்.டீ.சி. உலகளவில் தனது கால் தடத்தை பதித்துள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். தற்போதுள்ள சுரங்கங்களில் உற்பத்தி திறனை அதிகரித்தும், புதிய சுரங்கங்களை திறந்தும், தேவைகளின் பூர்த்தி செய்ய என்.எம்.டீ.சி. முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியுறுவதாகவும் அவர் கூறினார்.
(Release ID: 1512824)