சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு தினம் 2017ல் புதிய முயற்சிகளைத் தொடங்கி வைத்தார் திரு. ஜே.பி. நட்டா

சர்வதேச சுகாதாரப் பாதுகப்பின் செயல்திட்டத்தை நாட்டில் மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: ஜே.பி. நட்டா

Posted On: 11 DEC 2017 6:08PM by PIB Chennai

சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பின் செயல்திட்டங்களை நாட்டில் மேம்படுத்துவதற்காக உறுதிபூண்டுள்ள நாங்கள் அந்த நோக்கம் நிறைவேற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு தினம் 2017 கடைப்பிடிக்கப்படும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா இதனைத் தெரிவித்தார். நிதித் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.பி. சுகாலவும் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் லக்‌ஷ்யாஎன்ற பிரசவ அறைத் தர மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது சுற்றுப்புறங்களில் இயல்பான மற்றும் குழப்பமான பிரசவங்களைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும், பாதுகாப்பான பிரசவத்திற்கான மொபைல் செயலி ஆகும். மேலும் மகப்பேறு உயர் சார்பு பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு. நட்டா, நிதிச் சுமையைக் கருதாமல் அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு சுகாதாரத்தை எட்ட வகை செய்யும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார். இருப்பதை விட கூடுதலாக செலவு ஏற்படுவதைக் குறைக்கவும் உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பெரிய உலகளாவிய பொது சுகாதார முயற்சிகளில் ஒன்றான இந்திரதனுஷ் இயக்கம் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையிலான நான்கு கட்டங்களில் இந்திரதனுஷ் இயக்கம் 528 மாவட்டங்களில் உள்ள 25 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைந்துள்ளது. “தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதை அதிகரிக்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ரோட்டாவைரஸ் தடுப்பூசி, நியூமோகோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி (பி.சி.வி.), மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி (எம்.ஆர்.), மற்றும் வயது வந்தவர்களுக்கான ஜே.இ தடுப்பூசி ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம்என்று திரு. நட்டா விளக்கினார். பிரதம மந்திரி டயாலிசிஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 1,039 டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இலவச மருந்துகள் பரிசோதனைத் திட்டத்தின் மூலம் 1.43 லட்சம் நோயாளிகள் இலவசச் சேவைகளைப் பெற்றுள்ளனர்; அம்ரித் மருந்தகங்கள் மூலம் மானிய விலையில் மருந்துகளை வாங்கி 47 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.



(Release ID: 1512821) Visitor Counter : 146


Read this release in: English