வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

சிக்கிம்மைச் சேர்ந்த உள்நாட்டு சமூகங்களின் பிரதிநிதிகள் டாக்டர் ஜிதேந்திர சிங் உடன் சந்திப்பு

Posted On: 12 DEC 2017 5:55PM by PIB Chennai

சிக்கிம்மைச் சேர்ந்த பதினோரு உள்நாட்டு சமூகங்களின் பிரதிநிதிகள் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியம்,  அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்தனர்.

 

ராய், மங்கார், குருங், தமி, புஜேல், ஜோகி, சன்யாசி, கிரி, நேவார், காஸ் (பான் மற்றும் சேத்ரி) மற்றும் திவான் (யாக்காஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள், குழுவில் இடம்பெற்றிருந்தனர்,. தங்களுக்கு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர். மாநில சட்டப்பேரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் மற்றும் வேலைகளில் இட ஒதுக்கீடும் வருமான வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். சிக்கிம் மாநிலம் மற்றும் தங்கள் சமூகங்கள் குறித்த வரலாறு, பூகோளம் மற்றும் இதர அம்சங்கள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர்.
 

அந்தக் குழுவினரிடையே பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த சமூகங்களின் பங்களிப்பை தாம் போற்றிப் பாராட்டுவதாகவும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். அவர்கள் அளித்த கோரிக்கை மனு பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
 

சிக்கிம்மைச் சேர்ந்த சமூகங்களின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடி வட கிழக்கு பிராந்தியத்திற்கு  உயர் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். சிக்கிம் மாநிலத்திற்கு பிரதமர் நேரில் வருகை தந்துள்ளார் என்றும் அவர் கூறினார். சிக்கிம் மாநிலம் இயற்கையான மாநிலம் என அறிவித்திருப்பதை அமைச்சர் குறிப்பிட்டார். சிக்கிம் திறந்தவெளி மலம் கழிப்பு அற்றதாக அறிவிக்கப்பட்ட முதல் மாநிலம் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கல்வியறிவு வீதம் மிக உயர்வாக உள்ளது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சுற்றுலா துறையிலும் சிக்கம் சிறப்பாக உள்ளது என்றார். இவை அனைத்தும் காரணமாக சிக்கிம் இதர மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டிய மாநிலமாகத் திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 

பிரதிநிதிகள் குழு கூறியவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட டாக்டர் ஜிதேந்திரா சிங், சமூதாயத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் நியாயம் கிடைப்பதை பார்த்துக் கொள்வது எங்களது பொறுப்பு எனறார்.
 

நிகழ்ச்சியில் பேசிய திரு. நவீன் வர்மா, எந்தவொரு சமூகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் முறையான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றார்.
 

இந்த நிகழ்வின் போது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 

*****



(Release ID: 1512815) Visitor Counter : 115


Read this release in: English