புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
கட்டண அடிப்படையிலான ஏலப போட்டி நடைமுறையில் காற்றாலை மின்சாரக் கொள்முதலுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Posted On:
12 DEC 2017 5:46PM by PIB Chennai
காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான நடைமுறையைத் தரப்படுத்துவது மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புக்களை விளக்குவதுடன், வெளிப்படையான ஏல நடைமுறைகளைக் கொண்ட கட்டமைப்பை அளிப்பதற்காக மின்சார சட்டம் 2003, பிரிவு 63ன் கீழ் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. விநியோக உரிமம் பெற்றவர்கள் குறைந்த செலவில் காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதை சாத்தியமாக்குவது இதன் நோக்கமாகும்.
2. கீழே கொடுக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட காற்றாலை மின் திட்டங்களில் இருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்:
(அ) 5 மெகா வாட் மற்றும் அதற்கு மேல் ஒரே இடத்தில் திறன் கொண்டவர்கள் மாநிலத்திற்குட்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 25 மெகா வாட் திறனுக்கு ஏலம் எடுக்க வேண்டும், மற்றும்
(ஆ) 50 மெகா வாட் மற்றும் அதற்கு மேல் ஒரே இடத்தில் திறன் கொண்டவர்கள் மாநிலங்களுக்கு இடையிலான திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 50 மெகா வாட் திறனுக்கு ஏலம் எடுக்க வேண்டும்.
3. மின் தொகுப்பு இல்லாமை மற்றும் கொள்முதலை கைவிடுவதற்கான இழப்பீடு, தீவிர கட்டணப் பாதுகாப்பு, ஏல நடைமுறையை தரப்படுத்துதல், சட்டத்தில் மாற்றங்கள், எதிர்பாராத சூழ்நிலைகள், கொள்முதல் செய்பவர் அல்லது உற்பத்தியாளர் தவறிழைக்கும் போது எடுக்கும் நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த வழிகாட்டுதலில் உள்ளன.
4. காற்று அதிகம் வீசும் மாநிலங்கள் காற்றாலை மின்சாரத்தை ஏல முறையில் தாங்களாகவே கொள்முதல் செய்ய இந்த வழிகாட்டுதல் வகை செய்கிறது என்பதால் காற்றாலை மின்சாரத் துறைக்கு இந்த வழிகாட்டுதல்கள் ஊக்கமளிக்கும். கட்டணங்கள் ஃபீட் முறையில் இருந்து ஏல முறைக்கு மாறிய பின்னர் எஸ்.இ.சி.ஐ. மூலம் மத்திய அரசு ஏலம் எடுப்பதன் காரணமாகவே இந்தத் துறை பல உதவிகளைப் பெற்று வருகிறது. இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படாமல் இருந்ததால் தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுகளின் ஏலத்திற்கு காற்றாலை மின்சாரத் துறையிடமிருந்து எதிர்ப்புகளை தோன்றின.
5. எஸ்.இ.சி.ஐ.யின் இரண்டாவது ஏலத்தில் மிகக் குறைந்த விலையான யூனிட்டுக்கு ரூ. 2.64 என கிடைத்ததால் மாநிலங்களுக்கான இந்த வழிகாட்டுதல் வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து காற்றாலை மின்சாரத் துறை வலிமையான வளர்ச்சிப் பாதைக்கு சென்று 2022ம் ஆண்டில் 60 கிகாவாட் என்ற சாதனையை எட்டும்.
கீழ்க்காணும் இணைப்பில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் காண்லாம்:
http://powermin.nic.in/sites/default/files/webform/notices/Resolution_on_wind_Bidding_Guidelines_dated_8th_Decemeber_2017_Eng.pdf
*****
(Release ID: 1512808)
Visitor Counter : 148