பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
முக்கிய சேவை துறைகளுக்கான தொழில்நுட்பத் தர விதிமுறைகளை நலிவடைதல் மற்றும் திவால் நலிவடைதல் வாரியம் வெளியிட்டுள்ளது
Posted On:
14 DEC 2017 5:38PM by PIB Chennai
இந்திய நலிவடைதல் மற்றும் திவால் வாரியம் அதன் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று கீழ்க்கண்ட முக்கியச்சேவைகளின் செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்பத் தரங்களை வரையறுத்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் இந்திய நலிவடைதல் மற்றும் திவால் நிலை வாரிய ( தகவல் நிறுவனங்கள்) விதிமுறைகளின் 13-ஆவது விதிமுறைப்படி இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் வருமாறு:
1. வழக்கமான பணிவரன் முறைகள்;
2. பயனாளிகளை பதிவு செய்தல்;
3. ஒவ்வொரு ஆவணம் மற்றும் ஒவ்வொரு பயனாளிக்கும் தனித்துவ அடையாளக் குறியீடு;
4. தகவல்கள் சமர்ப்பித்தல்;
5. தனிநபர்களை அடையாளம் காணுதல் மற்றும் அடையாளத்தை சரிபார்த்தல்;
6. தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்தல்;
7. தகவல்களை சரிபார்த்தல்;
8. தகவல்களின் நம்பகத்தன்மை;
9. மூன்றாம் நபர் தகவல்களை அணுகுவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தல்;
10. கட்டமைப்பின் பாதுகாப்பு;
11. தகவல்களின் பாதுகாப்பு;
12. இடர்பாடு மேலாண்மையின் வரையரை;
13. தகவல்களை பாதுகாத்தல்;
14. தகவல்களில் பிழைகளை நீக்குதல்;
அனைத்து தகவல் நிறுவனங்களும், சேவை வழங்கும் போது அதற்குரிய தொழில்நுட்பத் தரங்களை பின்பற்ற வேண்டும். இது தொடர்பான விதிமுறைகள் www.mca.gov.in , www.ibbi.gov.in. இணையதளங்களில் உள்ளன.
*******
(Release ID: 1512801)
Visitor Counter : 114