நிலக்கரி அமைச்சகம்

கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வேயும் இணைந்து 250 நிலக்கரி வாரிகளை 14 நவம்பர் 2017 அன்று வெற்றிகரமாகச் சுமையேற்றி வைத்துள்ளது. இது நவம்பர் மாதத்தின் என்றும் நிலைத்திருக்கும் மாபெரும் சாதனையாகும்

நிலக்கரி, ரெயில்வே மற்றும் மின்சார அமைச்சகங்களின் நெருங்கிய கண்காணிப்புடன் கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வே துறையும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆற்றல் வாய்ந்த இந்த முயற்சியால், நிலக்கரியை எடுத்துச் செல்வதில் முன்னெப்பொழுதும் கண்டிராத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், மின்துறைக்கான அனுப்புகையிலும் குறிப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வே துறையும் நாள் ஒன்றுக்கு 266 நிலக்கரி வாரிகளைச் சுமையேற்றுவதைத் தற்போது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர்மின்நிலையங்களிலும், அணுமின்நிலையங்களிலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி சார் ஆலைகளிலும் உற்பத்திக் குறைவு ஏற்படும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மின்துறைக்கு நிலக்கரி அனுப்புகையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது பேருதவியாக ஆகியுள்ளது.

Posted On: 15 NOV 2017 11:58AM by PIB Chennai

ஒரு பெரும் சாதனையாக, நிலக்கரி, ரெயில்வே மற்றும் மின்சார அமைச்சகங்களின் நெருங்கிய கண்காணிப்புடன் கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வே துறையும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆற்றல் வாய்ந்த  முயற்சியால், நிலக்கரியை எடுத்துச் செல்வதில் முன்னெப்பொழுதும் கண்டிராத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், மின்துறைக்கான அனுப்புகையில் குறிப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. நிலக்கரிப் போக்குவரத்தையும் நிலக்கரி உற்பத்தியையும் சிறந்த முறையில் பலப்படுத்துவதற்ககாக, கோல் இந்தியா நிறுவனம், இந்திய ரெயில்வே மூலம் 14 நவம்பர், 2017 அன்று 250 நிலக்கரி வாரிகளைச் சுமையேற்றியுள்ளது. இது தடையற்ற நிலக்கரி வழங்கலை உத்தரவாதப்படுத்துகிற நவம்பர் மாதத்திற்கான என்றும் நிலைத்திருக்கும் மாபெரும் சாதனையாகும். இந்த 250 நிலக்கரி வாரிகளில், 223 வாரிகள் நாடெங்கும் உள்ள அனல்மின்நிலையங்களுக்கென்று பிரத்தியேகமாகச் சுமையேற்றப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 250 நிலக்கரி வாரிகளைச் சுமையேற்றியதானது, ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.           சில நிலக்கரிச் சுரங்கங்களில் இடையிடையே மழை பெய்துகொண்டிருந்த நிலையிலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. வழக்கமாக, நிலக்கரி உற்பத்தி சீராக இருப்பதற்கு உதவும் சாதகமான சுற்றுச்சூழல் நிலவும் டிசம்பர் மாத இறுதியில்தான்  இந்த அளவுக்குச் சுமையேற்றப்படும் சாதனை எட்டப்படும்.

கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வே துறையும் தற்போது இணைந்து நாள் ஒன்றுக்கு 266 நிலக்கரி வாரிகளாக உயர்த்திச் சுமையேற்றும் வகையில் அதற்கான செயல்திட்டத்தைத் தற்போது வகுத்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது மின்துறையும் மற்ற துறைகளும் தங்களுக்குத்  தேவையான நிலக்கரியைப் பெறுவதற்கு உதவும். மின்துறைகளுக்கு நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் நிலக்கரி அனுப்புகையின் வளர்ச்சி, முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், முறையே 20%, 21%, 18% ஆக இருந்துவருகிறது.   நீர்மின்நிலையங்களிலும், அணுமின்நிலையங்களிலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி சார் ஆலைகளிலும் உற்பத்திக்குறைவு ஏற்படும் நிலையில், பண்டிகைக் காலங்களிலும், விளைச்சல் பருவத்திலும் மின்தேவை திடீரென்று அதிகரிக்கும்போது அதனை எதிர்கொள்ள நிலக்கரி சார் மின்நிலையங்களுக்கு இது உதவியிருக்கிறது.

கோல் இந்தியா நிறுவனம் ரெயில்வே துறை மூலம் இந்திய ரெயில்வேயின் சரக்குக் கொட்டகைச் சாய்தளங்களிலிருந்து சுமையேற்றி, நிலக்கரி மிகச் செய்தலுக்காக 35 நிலக்கரி வாரிகளைச் சாலை வழியாக எடுத்துச் செல்வது உட்பட, 300 நிலக்கரி வாரிச் சுமையைப் பங்களிக்கத் தயாராகவுள்ளது.

*****             


(Release ID: 1512711) Visitor Counter : 136
Read this release in: English