சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மிகச்சிறப்பானதாக மாறி வருகிறது
மூடிஸ் நிறுவனம், என்ஐஏஐ.யை பிஏஏ3 தரநிலையில் இருந்து பிஏஏ2 தரத்துக்கு உயர்த்தி உள்ளது.
Posted On:
18 NOV 2017 11:48AM by PIB Chennai
சீர்திருத்தங்களால், நெடுஞ்சாலை திட்டங்களில் அபாய நேர்வுகளின் சதவீத அளவு குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய இறையாண்மையின் தரநிலை பிஏஏ3ல் இருந்து மேம்பட்ட பிஏஏ2க்கு 16 நவம்பர் 2017ல் மாறி உள்ளது என்று கிரைசில் அமைப்பு கூறியுள்ளது. மூடிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சேவை அமைப்பு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலையை பிஏஏ3ல் இருந்து பிஏஏ2க்கு மேம்படுத்தி உள்ளது. மேலும், இந்த சீராய்வு மதிப்பீடு நேர்மறையான ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் என்டிபிசி, என்எச்பிசி மற்றும் கெயில் ஆகியவற்றின் தரநிலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்திய இறையாண்மையின் தரநிலை உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக, என்டிபிசி, என்எச்பிசி, என்எச்ஏஐ மற்றும் கெயில் ஆகியவற்றின் தரநிலையும் உயர்ந்துள்ளது. இது, இந்நிறுவனங்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை பிரதிபலிக்கிறது. மேலும், அரசுடனான இதன் நெருங்கிய நடவடிக்கைகள் மற்றும் நிதி தொடர்புகளும் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அக்டோபர் 9ம் தேதி மூடிஸ் நிறுவனம், என்எச்ஏஐ.க்கு முதல் முறையாக பிஏஏ3 தரநிலை வழங்கியது. மிக குறுகிய காலத்துக்கு உள்ளாகவே, என்எச்ஏஐ.யின் தரநிலை பிஏஏ2 ஆக உயர்த்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சர்வதேச தரநிலை மதிப்பீட்டு நிறுவனமான ‘கிரைசில்’, 16 நவம்பர் 2017ல் வெளியிட்ட அறிக்கையில், என்எச்ஏஐ செய்த சீர்திருத்தங்களால் மிக கடினமான நெடுஞ்சாலை திட்டங்களின் சதவீதம் இரண்டு ஆண்டுக்கு முன்பு இருந்த 53 சதவீதத்தில் இருந்து தற்போது 21 சதவீதமாக குறைந்துள்ளது. மிக விரைவான அனுமதிகள், முக்கிய திட்டங்களுக்கு கடன் வசதி, முடங்கிய திட்டங்கள் நீக்கம், மறுபடியும் வேறு பிறருக்கு அதை அளித்தல், ஸ்பான்சர்களில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் இந்த சீர்திருத்தம் சாத்தியமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், 100 பிஓடி திட்டங்களில் 80 சதவீதம் வரை கடன் திட்டங்களால் மிகக் குறைந்த அபாய நேர்வு கொண்டவையாக தற்போது மாறி உள்ளது.
‘கிரைசில்’ அறிக்கையில், என்எச்ஏஐ சீர்திருத்தங்களால், நெடுஞ்சாலை கட்டுமானங்களின் அளவு 2015ல் இருந்த நாள் ஒன்றுக்கு 12 கி.மீ. என்ற அளவில் இருந்து தற்போது 2017ல் 23 கி.மீ. என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத்மாலா திட்ட செயலாக்கத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும் திட்ட ஒப்பந்தங்கள் வழங்குவது நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
சாலைத்துறையில் கடன் மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்தை காட்டுவதும் தெரியவந்துள்ளது என்று ‘கிரைசில்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1512705)
Visitor Counter : 82