தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சர்வதேச இந்திய திரைப்பட விழா 2017 (ஐஎப்எப்ஐ) வண்ணமயமான நிகழ்ச்சிகள் அறிவிப்பு
Posted On:
18 NOV 2017 11:47AM by PIB Chennai
ஐஎப்எப்ஐ 2017யில் பல்வேறு முதன் முறை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளதால், அது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் (எப்ஐஏஏபிஎப்) ‘கிரேட் ஏ’ அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், 82 நாடுகளைச் சேர்ந்த 195 திரைப்படங்கள் திரையிடப்போவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்படி, உலக வரிசையில் 10 திரைப்படங்களும், ஆசிய மற்றும் சர்வதேச பிரிமியர் பிரிவில் 10 திரைப்படங்களும், இந்திய பிரிமியர் பிரிவில் 64 திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சி, நாமா பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரபல தயாரிப்பாளர் மஜித் மஜிதியின் அதிகம் பேசப்பட்ட திரைப்படமான ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்துடன் ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து, உலக பிரிமியர் பிரிவில், இந்தோ அர்ஜென்டினியன் தயாரிப்பில் பாப்லோ சீசர் இயக்கத்தில் வெளிவந்த ‘திங்கிங் ஆப் பிலிம்’ திரையிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரபல திரைப்பட பிரமுகர்கள், சர்வதேச விருந்தினர்கள், பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
ஊடகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான திரையிடல் நிகழ்ச்சி நவம்பர் 21ல், இந்திய பனோரமா பிரிவுடன் தொடங்குகிறது. இதை பிரபல நடிகை ஸ்ரீதேவி தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஐஎப்எப்ஐ 2017ல் கனடா நாட்டு திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிகழ்ச்சியாக, அந்த நாட்டின் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கனடா நாட்டை முன்னிறுத்தும் நிகழ்ச்சியானது, கனடா நாட்டு அரசு உதவியுடனும், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா தேர்வாளர்களுமான கனடா டெலிபிலிம் கூட்டு நடவடிக்கையுடனும் மேற்கொள்ளப்படுகிறது.
ஐஎப்எப்ஐ 2017ன் சர்வதேச போட்டியில், கூட்டுப்பரிசாக ரூ.1 கோடி (ரூபாய் ஒரு கோடி) அளிக்கப்பட உள்ளது. தங்க மற்றும் வெள்ளி மயில் விருது வழங்கப்படும் இப்பிரிவில், இந்த ஆண்டு, 15 இனிமையான திரைப்பட்ஙகள் திரையிடப்பட உள்ளன. சர்வதேச திரைப்படங்களுக்கான தேர்வுக் குழுவுக்கு பிரபல தயாரிப்பாளர் முசாபர் அலி தலைமை வகிப்பார். அவர் தன்னுடைய குழுவில் இடம்பெற்றுள்ள சக நீதிபதிகளான, இயக்குநர் ஆஸ்திரேலியாவின் மேக்சைன் வில்லியம்சன், இஸ்ரேல் நடிகரும் இயக்குநருமான தஹி கிராட், ரஷ்யாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் விளாடிஸ்லாவ் ஒபெல்யாண்ட்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பு நிர்வாகியுமான ரோஜர் கிறிஸ்டியன் ஆகியோருடன் சேர்ந்து படங்களை தேர்வு செய்வார்.
இத்திரைப்பட விழாவில், சாதனை அளவாக 30 பெண் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும், தேர்வாளர்களால் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்ட சர்வதேச அளவி்ல் மறுபதிப்பாக வெளிவந்த திரைப்படங்களும் திரைப்பட உள்ளன. இதில் சமீபத்தில் மறுபதிப்பாக வந்த பிரிட்ஜ் லாங்கின் மெட்ரோபாலிஷ் மற்றும் டர்கோவ்ஸ்கையின் சாக்ரிபைஸ் உள்ளிட்டவையும் திரையிடப்பட உள்ளன.
ஐஎப்எப்ஐ 2017 விழாவில் இடம்பெற உள்ள பல்வேறு முதன் முறைகளில், பெரும்பாலான ரசிகர்களால் விரும்பப்பட்ட திரைப்பட உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு திரைப்படங்களும் இடம் பெற உள்ளன. இதேபோல், பிரபல நடிகர்கள் ஒரே மாதிரியான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படங்கள் வரிசையில் 9 திரைப்படங்களும், வினைஸ் சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து பையென்னேல் கல்லூரியில் இருந்து வெளிவந்த இளம் தயாரிப்பாளர்களின் 4 திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. இதுபற்றி வினைஸ் சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் அல்பெர்டோ பார்பெரா கூறுகையில், பையென்னேல் கல்லூரி சினிமா தலைப்பில் 4 திரைப்படங்களை திரையிட, வினைஸ் சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து அனுமதி அளித்த ஐஎப்எப்ஐ 2017க்கு முதலில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த திட்டத்துக்கு சர்வதேச அளவிலான இளம் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெருமைப்படத்தக்க அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல், எங்கள் இரு அமைப்புகளின் சீரிய முயற்சியில் அவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு அளிக்கும் வகையிலான இம்முயற்சியில், சிறு பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படங்களுக்கு ஐஎப்எப்ஐ 2017 பார்வையாளர்கள் அமோக ஆதரவளிப்பாளர்கள் என்று நான் நம்புகிறேன். சிறந்த சினிமா மற்றும் இளம் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அடிப்படையிலான, எங்களுடைய கூட்டு முயற்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார்.
இந்த 2017ம் ஆண்டு விழாவில், பல்வேறு ரியாலிட்டி துணை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் ஒளி நிகழ்ச்சிகளும், ஆக்மென்டட் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதுதவிர மாஸ்டர் கிளாஸ்கள், திரைப்படத்துறையில் யாருக்கு யார் என்பது போன்ற பேனல் விவாதங்களும் நடத்தப்பட உள்ளன. இதில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆடம் இகோயாம், ஷேகர் கபூர், நிதேஷ் திவாரி மற்றும் பரா கான் ஆகியோரும், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் கிரைக் மானும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐஎப்எப்ஐ 2017 நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட பிரமுகர் விருது பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல கனடா நாட்டு இயக்குநரான ஆடம் இகோயானுக்கும் வழங்கப்பட உள்ளது.
(Release ID: 1512703)
Visitor Counter : 261