குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஹைதராபாத் GITAM பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் உரை

Posted On: 18 NOV 2017 11:42AM by PIB Chennai

தெளிவான தொலைநோக்கு, தூய உள்ளம் மற்றும் வலிமையான தோள்களுடன் தொண்டாற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழவேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள  காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயல் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். பாசனத்துறை அமைச்சர் திரு.டி.ஹரீஷ் ராவ், பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கே.ராமகிருஷ்ண ராவ் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் சிறப்பு விருதுகளைப் பெற்ற மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்விலை மதிக்கமுடியாத அறிவுத்திறனைப் புகட்டி இளம் உள்ளங்களை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களையும் அவர் புகழ்ந்துரைத்தார்.

 

தண்ணீரின் தரம், நானோ தொழில்நுட்பம் ,மருத்துவ உயிரி தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டங்களுக்காக ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக் கூடங்களை பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். புற்றுநோய், நகர்ப்புற நிலைத்த மேம்பாடு, ஒருங்கிணைந்த ஊரக மேம்பாடு, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கிய துறைகளுக்கான ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

இந்தியா மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும் வல்லமையை பெற்றுள்ளதாக குடியசு துணைத் தலைவர் கூறினார். மிகப்பழமையான நாகரிகத்தையும், மக்கள் தொகையில்  அதிக இளைஞர்களையும் கொண்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நன்மையாகும்.

 

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், மாற்றங்களைக் கண்டு

தயங்காமல், அதனுடன் சேர்ந்து அதன்போக்கில் பயணப்பட நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மாறிவரும் சூழலை மத்திய அரசு முற்றிலும் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், புதுமைகளை நோக்கி இடையறாமல் அது பணியாற்றி வருவதாகக் கூறினார். டிஜிடல் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ,ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் உற்பத்தி துறையையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. டிஜிடல் இந்தியா திட்டம் , டிஜிடல் பொருளாதார ஞானத்தைப் பெற்ற சமுதாயமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 



(Release ID: 1512699) Visitor Counter : 157


Read this release in: English