உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் மணிப்பூர், மிசோரம் மற்றும் கேரளாவிற்கு அளிக்கப்படும் மத்திய அரசின் உதவி குறித்து உயர் மட்டக் குழு சந்திப்பு
Posted On:
13 DEC 2017 5:59PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் மணிப்பூர், மிசோரம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மத்திய அரசின் உதவி குறித்து இன்று உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. 2016-17 ஆம் ஆண்டில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சி (ரபி மற்றும் கரிப்) ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் மத்திய அரசின் உதவி குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜெட்லி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், மத்திய உள்துறை செயலர் திரு. ராஜீவ் கவுபா மற்றும் மத்திய உள்துறை, நிதி, வேளாண் அமைச்சகங்கள் மற்றும் நிதி ஆயோக்கை சேர்ந்த மூத்த அலுவலர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு ரூ. 130.65 கோடி அளிக்க இந்த உயர் மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் ரூ. 42.77 கோடி மற்றும் தேசிய ஊரகக் குடிநீர் திட்ட நிதியில் இருந்து அளிக்கப்படும் ரூ. 6.25 கோடி உட்பட மொத்தம் ரூ. 49.02 கோடி மிசோரம் மாநிலத்திற்கு அளிக்கப்படும். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் ரூ. 112.05 கோடி மற்றும் தேசிய ஊரகக் குடிநீர் திட்ட நிதியில் இருந்து அளிக்கப்படும் ரூ. 13.42 கோடி உட்பட மொத்தம் ரூ. 125.47 கோடி கேரள மாநிலத்திற்கு அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1512618)
Visitor Counter : 145