விவசாயத்துறை அமைச்சகம்
1950-51-ல் 0.75 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த மீன் உற்பத்தி 2016-17-ல் 11.41 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது :திரு. ராதாமோகன் சிங்
ஒட்டு மொத்த மீன் உற்பத்தியில் 2014-17-ல் 19% வளர்ச்சி வீதத்தை இந்தியா அடைந்துள்ளது :திரு. சிங்
பனாஜியில் நீர்கோவா மீன் பெரு விழா, 2017 நிகழ்ச்சியில் திரு.ராதாமோகன் சிங் உரை
Posted On:
09 DEC 2017 12:00PM by PIB Chennai
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா விளங்குவதாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் திரு.ராதா மோகன் சிங் தெரிவித்தார். 1950-51-ல் 0.75 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி 2016-17-ல் 11.41 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிர, நாட்டின் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இத்துறை வேலை வாய்ப்பையும், வாழ்வாதார உதவியையும் அளித்து வருகிறது. இன்று, கோவா, பனாஜி, எஸ்.ஏ.ஜி.கம்பால் மைதானத்தில் நடைபெற்ற நீர் கோவா பெரும் மீன் திருவிழா, 2017-ல் அவர் இவ்வாறு கூறினார். கோவா அரசின் மீன் வளத்துறை அமைச்சர் திரு.விநோத் பாலியேக்கர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பை அளித்து வருவதுடன், மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை மீன் வளத்துறை அளித்து வருவதுடன், இந்தியாவில் மிகவிரைவாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் கூறினார். நாட்டின் புரதச்சத்துச் தேவைகளை இந்தியாவின் மீன் உற்பத்தி பூர்த்திசெய்வதுடன், உலகின் மீன் உற்பத்தியில் 6.2 சதவீத அளவிற்கு பங்களிப்பை அளித்துவருகிறது.
மேலும் திரு. சிங் அவர்கள், நாம் 2014-15, 2015-16 &2016-17 ஆகிய மூன்றாண்டுகளுடன் 2011-12, 2012-13 &2013-14 ஆகிய மூன்றாண்டுகளை நாம் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த மீன் உற்பத்தி 19 சதவீத வீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என்றார். கடல்சார் மீன் வளத்தில் 6.5 சதவீத வளர்ச்சியும், நாட்டின் உள்ளூர் மீன்வளம் 26.07 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. மீன் மற்றும் மீன் சார்பொருட்களின் ஏற்றுமதி, 2016-17-ம் ஆண்டில், நாட்டிற்கு 5.78 பில்லியன் அமெரிக்கடாலர் அந்நியசெலாவணியை (அதாவது ரூ.37,871 கோடி) பெற்றுதந்துள்ளது என அமைச்சர்மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தியா இறால் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய இறால் ஏற்றுமதியாளராகவும் உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் உலகின் மீன் மற்றும் மீன் பொருட்களின் சராசரி வருடாந்திர வளர்ச்சி வீதம் 7.5% இருப்பதுடன், மீன் & மீன்வளப் பொருட்களின் ஏற்றுமதியில் 14.8% சராசரி வருடாந்திர வளர்ச்சி பெற்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மீன்வளத் துறையில் உள்ள பெரும் வள ஆதாரம், திறன் மற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்கி, மாண்புமிகு பிரதமர் நீலப்புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளதாக திரு.சிங் தெரிவித்தார். அதற்கேற்றவகையில், அரசு மீன்வளத் துறையின் அனைத்து திட்டங்களையும் நீலப்புரட்சியில்: ரூ.3000 கோடி மதிப்பீட்டில் மீன்வளத்திற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேலாண்மை திட்டம் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது.
(Release ID: 1512555)
Visitor Counter : 185