விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் நைஜிரிய அரசின் முன்னுரிமைகளுக்கு இந்தியா உதவும்; திரு. ராதாமோகன் சிங்

நைஜிரியாவுக்கான இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பின் கீழ் பயிற்சி இடங்களை இந்தியா அதிகரித்துள்ளது; திரு. சிங்
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2015ல் 1000 கோடி அமெரிக்க டால்ர் சலுகைக் கடன்களை இந்தியா அறிவித்துள்ளது: திரு. சிங்
நைஜிரிய வேளாண்துறை அமைச்சர் மேன்மை மிகு, சீஃப் அவ்டு ஒக்பே – ஐ திரு ராதாமோகன் சிங் சந்தித்தார்

Posted On: 12 DEC 2017 11:57AM by PIB Chennai

நைஜிரியவை வேளாண் துறையில் தற்சார்பு உடையதாகவும் வேளாண் உற்பத்திப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் மாற்றுவதற்கான பசுமை மாற்றுத் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களை இந்தியா மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருவதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு. ராதாமோகன் சிங் கூறியுள்ளார். நைஜிரிய வேளாண்துறை அமைச்சர் மேன்மை மிகு, சீஃப் அவ்டு ஒக்பே –ஐ இன்று சந்தித்த அமைச்சர் இதைத் தெரிவித்தார்.

1960 களின் இடைப்பட்ட காலத்தில், உணவு பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா தற்போது உள்நாட்டு நுகர்வுக்கும் கூடுதலான அளவில் உற்பத்தி செய்து வருவதாக திரு. ராதாமோகன் சிங் கூறினார். இந்தியா, வேளாண் உற்பத்திப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உருவாகியுள்ளது. நைஜிரியா விரும்பும் வேளாண்துறைகளில் இந்தியா தனது அனுபவத்தையும் நிபுணர்த்துவத்தையும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் முன்வருவதாக அமைச்சர் தெரிவித்தார்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2015ல் 1000 கோடி அமெரிக்க டாலர் சலுகைக் கடன்களை இந்தியா அறிவித்துள்ளது என்று திரு. சிங் கூறினார். விவசாயம் சார்ந்த துறைகளில் நைஜிரியாவின் இருபது அதிகாரிகள் குறுகிய கால திறன் மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்றதாக தனக்கு தெரிவிக்கப்பட்டது என்றார் அவர். இந்திய தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலான பயிற்சி இடங்களை இந்தியா சமீபத்தில் ஒதுக்கியுள்ளது என்றார் நைஜிரியாவுக்கு 200 முதல் 310 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த குறுகிய கால பயிற்சித்திட்டங்களும் அடங்கும் என்றார். வேளாண்மை மற்றும் அது சார்ந்த பயிற்சித் திட்டங்களையும் சலுகைக் கடன்களையும் நைஜிரிய அமைச்சர் தனது நாட்டுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நைஜிரியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்குகிறது என்பது திருப்தி அளிக்கும் விஷயம் என்று அமைச்சர் கூறினார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நைஜிரியாதான் என்றார். இந்த வர்த்தகத்தின் அளவை மேலும் விரிவாக்க பெருமளவு சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் கூறினார். திராட்சைப்பழம், மிளகு, கோதுமை, சோளம், அரிசி, பருப்பு, ஆகியவற்றின் இறக்குமதி குறித்து நைஜிரியா கவனம் செலுத்தலாம் என்றும் திரு. ராதாமோகன் சிங் ஆலோசணை கூறினார்.

நைஜிரிய வேளாண் துறையில் வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நைஜிரிய வேளாண் அமைச்சருக்கு திரு. சிங் பாராட்டுதல்களைத் தெரிவித்தார். முதலீட்டாளர்கள், வேளாண் சேவை வழங்குவோர், வேளாண் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவோருக்கு நைஜிரிய அமைச்சர் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு மட்டுமன்றி, “இந்தியா நைஜிரியா ஒத்துழைப்பு – வாய்ப்புகள் மற்றும் முன்னோக்கு வழிகள்” என்ற வர்த்தக நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கும் திரு அவ்டு ஒக்பேக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இம்மாதம் ஐந்தாம் தேதி அபுஜாவில் உள்ள இந்திய ஹைகமிஷன் இந்த வர்த்தக நிகழ்ச்சியை நடத்தியது.

இந்தியாவும் நைஜிரியாவும் சிறந்த நட்புறவுடன் கூடிய உறவுகளை பாரமரித்து வருவதாகவும் இந்த இரு நாடுகளும் பல்வேறு சமயங்கள், பல்வேறு இன சமூதாயங்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரிய வளரும் நாடுகள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனநாயகம், சகிப்புத்தன்மை கொண்ட பன்முகச் சமூதாயங்கள், மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்தல் போன்ற நன்னெறிகளை இருநாடுகளும் பெற்றுள்ளன. நைஜிரிய அரசின் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முன்னுரிமைகளுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் பங்களிக்கும் என்று அமைச்சர் கூறினார்.


(Release ID: 1512553) Visitor Counter : 308


Read this release in: English