கலாசாரத்துறை அமைச்சகம்

மஸ்கட்டில் நடக்கும் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுக்கான இரண்டாவது யு.என்.டபிள்யு.டி.ஓ/யுநெஸ்கோ மாநாட்டில் டாகடர் மஹேஷ் சர்மா தலைமையில் இந்தியப் பிரதிநிதிகள்

Posted On: 12 DEC 2017 11:52AM by PIB Chennai

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 2017 டிசம்பர் 11-12 தேதிகளில்  நீடித்த வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடன் நடைபெற்ற கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுக்கான இரண்டாவது ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு/யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்புடாக்டர் மஹேஷ் சர்மா  தலைமையேற்றுச் சென்றார்.

 

சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்களின் போது, டாக்டர் மஹேஷ் சர்மா நீடித்த வளர்ச்சிக்கான முயற்சியின் போது இயற்கையைப் பாதுகாக்கும் இந்தியாவின் அணுகுமுறையையும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தார். அமைதி மற்றும் வளத்திற்கான அம்சமாக கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, சுற்றுலா மேம்பாடு மற்றும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் படைப்பாற்றல், சுற்றுலாவில் கலாச்சார நிலப்பரப்பு பகுத்தாய்வு செய்தல் ஆகியவற்றையும் தனது செயல்திட்டத்தில் இந்த மாநாடு கொணடிருந்தது. 2030 செயல்திட்டத்தையும் இந்த மாநாடு இறுதி செய்தது.

 

தனது மஸ்கட் பயணத்தின் போது டாக்டர் மஹேஷ் சர்மா இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியா மற்றும் ஓமன் இடையே கலாச்சார மற்றும் சுற்றுலா துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுக்கள் நடத்தினார்ஓமன் நாட்டுக்கான சுற்றுலாத் துறை அமைச்சர் திரு அஹமத் பின் நசீர் நசீர் பின் ஹமாத் அல் மெர்சியைச் சந்தித்து சுற்றுலா குறித்து பேச்சுக்கள் நடத்தியதுடன் சுற்றுலா ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை விரைவுபடுத்துவது குறித்தும் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாவை பரிமாறிக்கொள்வதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா பற்றி அதிகம் தெரியும் என்பதால் மருத்துவ சிகிச்சை பெறுவது உட்பட இந்தியாவுக்கு ஓமன் நாட்டு மக்கள் விஜயம் செய்து வருகின்றனர்.

 

டாக்டர் மஹேஷ் சர்மா, ஓமன் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மேன்மை மிகு சையத் ஹைதம் பின் தாரிக் அல் சையத்தையும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றங்களுக்கான வழிகள் குறித்து ஆலோசித்தார். ஓமன் அமைச்சரவைக்கான துணைப் பிரதமர் மேன்மை மிகு சையத்  ஃபஹீத் பின் மஹ்மீத் அல் சையத்தையும் சிறிது நேரம் சந்தித்த அவர், இருநாடுகளுக்கும் இடையிலான யுக்திபூர்வமான கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தினார். மாநாட்டின் இடையே டாக்டர் மஹேஷ் சர்மா, துருக்கியின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சருடன் இருதரப்பு பேச்சுகள் நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் துருக்கி இடையே கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

 

ஓமனில் ஏராளமான இந்திய சமூகத்தினர் உள்ளனர். இந்த எண்ணிக்கை 8 லட்சம் இருக்கும். வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினருக்கு நல்வாழ்வு அளிக்கும் அரசின் உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் அங்குள்ள தூதரகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் டிசம்பர் 12ம் தேதி இந்திய சமூகத்தினரிடையே டாக்டர் மஹேஷ் சர்மா பேசினார். ஓமனுக்கான இந்தியத் தூதர் திரு. இந்திரா மணி பாண்டே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியா அளித்துள்ள முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவின் முன்னோடித் திட்டங்களான இந்தியா, தூய்மை இந்தியாவில், தயாரிப்போம் டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா போன்றவற்றில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்த 2022ல் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இயக்கத்திலும் இந்தியச் சமூகத்தினர் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

 

(ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு/யுஹெஸ்கோவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுக்கான இரண்டாவது உலக மாநாட்டில் உரையாற்றுகிறார் டாக்டர் மஹேஷ் சர்மா)

 

 

 

(சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாகடர் மஹேஷ் சர்மா ஓமன் நாட்டின் சுற்றுலா அமைச்சர் அஹமத் பின் நசீர் பின் ஹமாத் அல் மெஸ்ரியை சந்தித்த போது எடுத்த படம்)

http://pibphoto.nic.in/documents/rlink/2017/dec/i2017121209.jpg

 

 

(சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாகடர் மஹேஷ் சர்மா துருக்கியின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சருடன் இருதரப்பு பேசுசு நடத்தியபோது)

 

 

*****


 


(Release ID: 1512551) Visitor Counter : 231


Read this release in: English