தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
48வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவை மெகா ஸ்டார் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்
Posted On:
21 NOV 2017 6:40PM by PIB Chennai
இந்திய திரைப்படத் துறையில் இந்த ஆண்டு தனது 50 ஆண்டைக் கொண்டாடும் மெகா ஸ்டார் ஸ்ரீதேவி, 48வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவை தொடங்கி வைத்தார்.
நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், IFFI-யின் அதிகாரப்பூர்வ தேர்வுகளான 26 feature & 16 non-feature திரைப்படங்கள் இந்திய பனோரமா 2017 பிரிவின் கீழ் இடம் பெறுவது குறித்த பட்டியல் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விழாவின் தொடக்க நிகழ்வில் தனது வருகையைப் பதிவு செய்த ஸ்ரீதேவி, பெயர் பெற்ற மற்றும் வளரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்திய பனோரமா 2017-ல் பங்கேற்பதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு ஸ்ரீதேவி வழங்கினார்.
திரைப்பட விழா பற்றிப் பேசிய ஸ்ரீதேவி, ``இந்திய பனோரமாக தொடக்க நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்வது எனக்குக் கிடைத்த கவுரமாகக் கருதுகிறேன். இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் மிகவும் கிளர்ச்சியூட்டுகிற பிரிவுகளில் ஒன்றாக இது இருக்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து feature மற்றும் non-feature பிரிவில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறப்புத் தேர்வாக இந்திய பனோரமா 2017 இருக்கிறது. இந்திய பனோரமாவுக்கான திரைப்படங்கள் சிறந்த நடுவர்களால் தேர்வு செய்யப் பட்டிருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் பிரிவு எனக்கு ஆர்வம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. இந்திய பனோரமா 2017-ஐ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி'' என்று கூறினார்.
``இந்திய பனோரமா நிகழ்ச்சியில் உங்களுடன் பங்கேற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. IFFI-ன் ஒருங்கிணைந்த பகுதியாக இது இருக்கிறது. திரைப்படம் மற்றும் அழகுணர்ச்சிகளை வெளிக்காட்டும் feature மற்றும் non-feature திரைப்படங்களைத் தேர்வு செய்வதும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திரைப்படங்களை ஊக்குவிப்பதும், இருதரப்பு கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் பிற விஷயங்களை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம். கடந்த காலங்களில் திரைப்படத் துறையில் சிறந்த விஷயங்களுடன் தொடர்பு கொண்டதாக இந்திய பனோரமாக இருந்திருக்கிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்காக இருக்காது என்று தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்'' என்று IFFI விழா இயக்குநர் சுனித் டாண்டன் குறிப்பிட்டார்.
IFFI-யின் 48வது விழா 2017 நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரையில் கடற்கரை மாநிலமான கோவாவில் நடைபெறுகிறது.
*****
(Release ID: 1512528)
Visitor Counter : 153