குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களின் முதல் கொள்கையாக நீதி இருக்கிறது, தொடர்ந்து இருக்க வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்

மனித உரிமைகள் தினத்தில் உரை

Posted On: 10 DEC 2017 6:09PM by PIB Chennai

இந்தியத் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களின் முதல் கோட்பாடாக நீதி தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார். இன்று அவர் மனித உரிமைகள் தினத்தையொட்டி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திரு.நீதியரசர் எச்.எல்.தத்து மற்றும் பிற பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

மனித உரிமைகளுக்கான சர்வதேச உறுதிமொழியை ஐக்கிய நாடுகள் பொது சபை, 1948-ம் ஆண்டு இதே நாளில், ஏற்றுக் கொண்டதை நினைவுக் கூறும் வகையில் டிசம்பர், 10 தினத்தை மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது என குடியரசுத் துணைத் தலைவர்கூறினார். சர்வதேச அளவிலும், நாட்டிற்குள்ளும் மனித உரிமைகள் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாடுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான நமது உறுதிப்பாடு நமது கலாச்சாரத்தின் பகுதியாக இருப்பதுடன், பிறரின் மனித உரிமைகளைத் தொன்றுதொட்டே மதித்து வருகிறது என குடியரசுத் துணைத் தலைவர்கூறினார். “அனைத்து உயிரினமும் நலமுடன் வாழவேண்டும்”, என்ற உன்னத கோட்பாட்டை நாம் கொண்டுள்ளோம்; “வாசுதெய்வ குடும்பகம்உலகம் முழுவதும் ஒரே குடும்பம்”  என்ற கோட்பாட்டில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்”. எனவும் அவர் தெரிவித்தார்.

பொது உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் மற்ற பிறவும் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதால் மட்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளதல்ல, அவை நமது டி.என்..வில் ஒரு பகுதியாக இருப்பதால் உறுதியளிக்கப்பட்டுள்ளது என குடியரசுத் துணைத் தலைவர்தெரிவித்தார். “பிற்காலத்தில் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட சமயச் சார்பின்மை, தொடக்கத்திலிருந்தே நமது டி.என்..வில் உள்ளே இருந்து வருகிறது,”  இந்தியா பிற நாடுகளை எந்த விதத்திலும் ஆக்கிரமித்தாக வரலாற்றில் இல்லை, இங்கு வரும் அனைத்து மக்களை நாம் அரவணைக்க முயன்று வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கி குண்டை விட மக்களின் ஒட்டு அதிக சக்தி வாய்ந்தது என்றும், அதிகாரத்தை துப்பாக்கி முனையால் பெற இயலாது எனவும் குடியரசுத் துணைத் தலைவர்கூறினார். நீங்கள் பிறரைக் கொல்ல எந்த உரிமையும் இல்லாதபோது, அச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு மனித உரிமைகளின் கீழ் எவ்வாறு பாதுகாப்புப் பெற இயலும் என அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்களின் நிலை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், தற்போதும் அபாயகரமானதாக உள்ளதால், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை நமது ஜனநாயகத்திற்கு முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன என குடியரசுத் துணைத் தலைவர்தெரிவித்தார். மேலும், பாலின சமத்துவமின்மை முக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகளில் ஒன்றாக அமைந்து, ‘புதிய இந்தியாவின் விளிம்பில் அதிக பெண்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது என்றார். பெண் குழந்தைகளுக்கு எதிரான மோசமான கல்வியறிவு வீதம், கல்வியில் அவர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை சமூகத்தில் பெண்கள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையை அதிகரித்துள்ளது என அவர் கூறினார். இச்சவால்களை எதிர்கொள்ளும்வகையிலான, ‘பெண் குழந்தையை பாதுகாப்போம்-பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்போன்ற திட்டங்கள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தனிநபர்களின் வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை புரட்டிபோடும் வகையில் ங்கரவாதம் மற்றும் தீவிரவாத வன்முறைகள் இந்திய ஜனநாயகத்திற்கு சவாலாக உள்ளது என குடியரசுத் துணைத் தலைவர்கூறினார். எவ்வித வன்முறையும், உணர்வற்ற கொலைகளும், மனித உரிமைகள் மீறலின் மோசமான வடிவங்களாகும், அதற்கேற்றவகையில் அவற்றை கையாளவேண்டும் என்றார் அவர்.



(Release ID: 1512514) Visitor Counter : 413


Read this release in: English