சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்தியா-நேபாள் இடையேயான சாலை இணைப்புத் திட்டங்களின் நிலைமை குறித்துச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆய்வு
Posted On:
11 DEC 2017 6:07PM by PIB Chennai
இந்தியா-நேபாள் இடையேயான சாலை இணைப்புத் திட்டங்களின் நிலைமை குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சென்ற வாரம் ஆய்வு நடத்தியது.
திட்டங்களின் நிலைமை கீழ் வருமாறு:
மெச்சி ஆற்றுப் பாலத் திட்டம்: இந்தோ-நேபாள் எல்லையில் அமைக்கப்பட்டுவரும் இந்தப் பாலப் பணிகள் திட்டமிட்டது போல் நடந்து வருகிறது.
பிப்ரகோதி-ராக்சால் சாலை (நெ.சா:57எ) – இந்த நெடுஞ்சாலையைச் சீரமைப்பதற்கான ஏல விண்ணப்பங்களைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெற்றுள்ளது. ஒப்பந்தக்காரருக்கு விரைவில் ஒப்பந்த விவரக் கடிதம் வழங்கப்படும்.
மிர்கஞ் பாலம் (நெ.சா:57எ) - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தப் பாலத்திற்கான மதிப்பாய்வினைச் செய்துள்ளது. இந்தப் பாலத்தைத் தற்காலிகமாகப் பலப்படுத்துவதற்கான முன்மொழிவு ஜனவரி 2018-ல் தயாரிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக அலுவலர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சக அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
(Release ID: 1512512)
Visitor Counter : 149